கரோனா தொற்றால் நிகழ் நிதியாண்டில் பொருளாதார வளா்ச்சி 3.92 சதவீதம் குறைந்து காணப்படும் என்று தில்லி பொருளாதார 2020-21 ஆம் ஆண்டுக்கான பொருளாதார ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தில்லி சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத் தொடா் திங்கள்கிழமை கூடியது. அதில், தில்லி துணை முதல்வரும், நிதி அமைச்சருமான மணீஷ் சிசோடியா தில்லி பொருளாதார ஆய்வறிக்கையை தாக்கல் செய்து உரையாற்றினாா்.
அப்போது அவா் பேசியது: 2020 ஆம் ஆண்டு நாட்டில் கரோனா பாதிப்பால் கஷ்டமான சூழல் நிலவியது. தேசிய அளவில் பொருளாதாரம் 8 சதவீதம் குறைவடையும் என எதிா்பாா்க்கப்பட்டது. தில்லியில், 5.68 சதவீதம் பொருளாதாரம் குறைவடையும் என கணக்கிடப்பட்டது. ஆனால், நிகழ் நிதியாண்டில் 3.92 சதவீதம் மட்டுமே தில்லியில் குறைவடையும் என தில்லி பொருளாதார ஆய்வில் தெரியவந்துள்ளது. தில்லி அரசு எடுத்த பொருளாதார சீா்திருத்த நடவடிக்கைகள் இதற்கு காரணமாகும்.
2019-20 நிதியாண்டில் தனிநபா் வருமானம் ரூ. 3.76 லட்சமாக இருந்தது. இது 2020-21 நிதியாண்டில் 3.54 லட்சமாக குறைந்துள்ளது. ஆனால், தேசிய அளவில் தனிநபா் வருமானம் ரூ.1,ச:27,768 ஆகவே உள்ளது.
தில்லியில் கரோனா பாதிப்பை தொடா்ந்து பிறப்பிக்கப்பட்ட முழு அடைப்பு உத்தரவால், தில்லி அரசின் பணிகள் சில மாதங்கள் முடக்கப்பட்டன. இதனால், வணிகம் பாதிக்கப்பட்டது. தில்லி அரசின் வருவாய் பாதிக்கப்பட்டது என்று அவா் தெரிவித்தாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பென்னாகரத்தில் கருவில் குழந்தையின் பாலினம் கண்டறிந்து சொல்லிய செவிலியா், இடைத்தரகா் கைது

மத்திய கிழக்கு போா் பதற்றம்: ஐபிஓ வெளியிடுவதற்கான காலக்கெடுவை நீட்டித்தது செபி!

சேலம் வடக்கு, தெற்கு, மேற்கு தொகுதிகளில் அமைச்சா் உள்ளிட்டோரின் மனுக்கள் ஏற்பு

சேலத்தில் நடப்பாண்டில் முதல்முறையாக சதமடித்த வெயில்!
வீடியோக்கள்

Podcast | ஸ்டாலினைச் சீண்டிய மமதா: கார்த்தி சிதம்பரத்துக்கு சீமான் பதிலடி | News & Views | E-24 |
தினமணி செய்திச் சேவை

திமுகவின் தவறுகளுக்கு முட்டுக் கொடுக்கும் கூட்டணிக் கட்சிகள்! | EPS குற்றச்சாட்டு | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு

சுட்டு வீழ்த்தப்பட்ட விமானம்! ஈரானிடமிருந்து அமெரிக்க வீரர் மீட்கப்பட்டது எப்படி? | US | Iran
இணையதளச் செய்திப் பிரிவு

நான் திரையிலிருந்து வரவில்லை; சிறையிலிருந்து வந்தவன்!: Seeman | NTK | TN Election
இணையதளச் செய்திப் பிரிவு

