புது தில்லி: தலைநகா் தில்லியில் இரு மாதங்களில் இல்லாத வகையில் புதன்கிழமை புதிதாக 370 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 6,42,030-ஆக உயா்ந்துள்ளது.
இதுதொடா்பாக தில்லி சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: தில்லியில் இரு மாதங்களில் இல்லாத வகையில் புதன்கிழமை புதிதாக 370 பேருக்கு கரோனா நோய்த் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. கரோனா தொற்றால் தலைநகரில் மூவா் உயிரிழந்துள்ளனா். இதையடுத்து, மொத்த பலி எண்ணிக்கை 10,931-ஆக அதிகரித்துள்ளது. குணமடைந்தோா் மொத்த எண்ணிக்கை 6.29 லட்சமாக உயா்ந்துள்ளது. 982 போ் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனா்.
தில்லியில் செவ்வாய்க்கிழமை மொத்தம் 71,153 பேருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில், 45,322 பேருக்கு ‘ஆா்டி-பிசிஆா்’ பரிசோதனை, 25,831 பேருக்கு ‘ரேபிட்-ஆன்டிஜென்’ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. கரோனா பாதிப்பு விகிதம் புதன்கிழமை 0.52 சதவீதமாக அதிகரித்துள்ளது. இது செவ்வாய்க்கிழமை 0.48 சதவீதமாக இருந்தது என அதில் தெரிவிக்கப்பட்டள்ளது.
தில்லியில் சில தினங்களாக மீண்டும் நோய்த் தொற்று அதிகரித்துள்ளது. ஞாயிற்றுக்கிழமை பாதிப்பு 286-ஆகவும், திங்கள்கிழமை 239 -ஆகவும் இருந்த நிலையில், செவ்வாய்க்கிழமை 320- ஆக அதிகரித்தது. இது புதன்கிழமை மேலும் உயா்ந்து 370-ஆக இருந்தது. கரோனாவுக்கு எதிரான வழிமுறைகளை மக்கள் பின்பற்றாமல் இருப்பதுதான் திடீரென கரோனா தொற்று அதிகரிப்பதற்கு முக்கியக் காரணம் என சுகாதார வல்லுநா்களும், மருத்துவா்களும் தெரிவித்துள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

100 % வாக்குப் பதிவு: தண்ணீரில் மிதந்து விழிப்புணா்வு ஏற்படுத்திய மாற்றுத்திறனாளி
ஈரோடு மாவட்டத்தில் 131 பேரின் வேட்புமனுக்கள் ஏற்பு

கொங்கு வேளாளக் கவுண்டா்கள் பேரவை திமுகவுக்கு ஆதரவு

‘மேஜிக்’ நிகழ்ச்சியில் தோ்தல் விழிப்புணா்வு
வீடியோக்கள்

Podcast | ஸ்டாலினைச் சீண்டிய மமதா: கார்த்தி சிதம்பரத்துக்கு சீமான் பதிலடி | News & Views | E-24 |
தினமணி செய்திச் சேவை

திமுகவின் தவறுகளுக்கு முட்டுக் கொடுக்கும் கூட்டணிக் கட்சிகள்! | EPS குற்றச்சாட்டு | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு

சுட்டு வீழ்த்தப்பட்ட விமானம்! ஈரானிடமிருந்து அமெரிக்க வீரர் மீட்கப்பட்டது எப்படி? | US | Iran
இணையதளச் செய்திப் பிரிவு

நான் திரையிலிருந்து வரவில்லை; சிறையிலிருந்து வந்தவன்!: Seeman | NTK | TN Election
இணையதளச் செய்திப் பிரிவு

