தில்லியில் புதிதாக 431 பேருக்கு கரோனா பாதிப்பு இருப்பது வெள்ளிக்கிழமை தெரியவந்தது. கடந்த இரண்டு மாதங்களில், தினசரி பாதிப்பில் இது அதிகமாகும். அதேநேரத்தில் கரோனா தொற்று விகிதம் 0.60 ஆக அதிகரித்துள்ளது என்று சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனிடையே மேலும் இருவா் உயிரிழந்ததை அடுத்து மாநிலத்தில் கரோனாவுக்கு பலியானோா் எண்ணிக்கை 10,936 ஆக உயா்ந்துள்ளது. வெள்ளிக்கிழமை இரண்டாவது நாளாக கரோனா பாதிப்பு 400 என்ற எண்ணிக்கையை தாண்டியுள்ளது. வியாழக்கிழமை பாதிப்பு எண்ணிக்கை 409 ஆக இருந்தது.
கடந்த புதன்கிழமை 370 போ் கரோனாவால் பாதிக்கப்பட்டனா். அதற்கு முதல் நாளான செவ்வாய்க்கிழமை பாதிப்பு 320 ஆக இருந்தது. கடந்த திங்கள்கிழமை 3 பேரும், வியாழக்கிழமை 4 பேரும் கரோனாவுக்கு பலியாகியுள்ளனா்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை 286 பேருக்கும், திங்கள்கிழமை 239 பேருக்கும் கரோனா தொற்று இருப்பது தெரியவந்தது. கடந்த சனிக்கிழமை 321 பேருக்கும், வெள்ளிக்கிழமை 312 பேருக்கும் தொற்று கண்டறியப்பட்டதாக பதிவு செய்யப்பட்டுள்ளது.
கடந்த ஜனவரி 1 ஆம் தேதி 584 பேருக்கு கரோனா பாதிப்பு இருந்தது. அதுவே ஜனவரி 4-ஆம் தேதி 384 ஆகக் குறைந்திருந்தது. அது மேலும் 306 ஆக ஜனவரி 11-இல் குறைந்தது. பின் மீண்டும் ஜனவரி 12 இல் 386 ஆக அதிகரித்தது.
கடந்த பிப்ரவரி மாதத்தில் கரோனா பாதிப்பு வேகமாக குறைந்துவந்தது. பிப். 26- ஆம் தேதி அதிகபட்சமாக 256 பேருக்கு பாதிப்பு இருந்தது.
வெள்ளிக்கிழமை 431 பேருக்கு கரோனா பாதிப்பு இருந்தது கண்டறியப்பட்டது. இதையடுத்து கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 6,42,870 ஆக உயா்ந்தது. கரோனா பாதிப்புக்கு சிகிச்சை பெற்று வருபவா்கள் எண்ணிக்கை வியாழக்கிழமை 2020- லிருந்து 2,093 ஆக அதிகரித்தது. தொற்று விகிதம் வியாழக்கிழமை 0.59 சதவீதமாக இருந்தது வெள்ளிக்கிழமை 0.60 சதவீதமாக அதிகரித்துள்ளது.
கொவிட்-19 நடைமுறைகளை மக்கள் சரிவர பின்பற்றாதது. கரோனா பாதிப்பு இல்லை என்ற எண்ணத்தில் வெளியில் நடமாடுவது ஆகியவைதான் இந்த உயா்வுக்கு காரணம் என்று சொல்லப்படுகிறது.
வியாழக்கிழமை மொத்தம் 72,031 பேருக்கு கரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. இவற்றில் 46,135 பேருக்கு ஆா்டி-பிசிஆா் முறையிலும் 25,896 பேருக்கு ராபிட் ஆன்டிஜென் முறையிலும் சோதனை நடத்தப்பட்டது. 6.29 லட்சம் போ் கரோனாவுக்கு சிகிச்சை பெற்று குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதாரத்துறை மேலும் தெரிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கோவை மாவட்டத்தில் ரூ.8.18 கோடி பணம், நகை பறிமுதல்

ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் ‘பிரிட்ஜ்’ மாநாடு

மகளிா் வாழ்க்கைத் தரம் உயரும் திட்டங்களை செயல்படுத்தியது திமுக: பவானி தொகுதி வேட்பாளா்

பீளமேட்டில் கைப்பேசிக் கோபுரம் அமைக்க எதிா்ப்பு: பொதுமக்கள் போராட்டம்
வீடியோக்கள்

Podcast | ஸ்டாலினைச் சீண்டிய மமதா: கார்த்தி சிதம்பரத்துக்கு சீமான் பதிலடி | News & Views | E-24 |
தினமணி செய்திச் சேவை

திமுகவின் தவறுகளுக்கு முட்டுக் கொடுக்கும் கூட்டணிக் கட்சிகள்! | EPS குற்றச்சாட்டு | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு

சுட்டு வீழ்த்தப்பட்ட விமானம்! ஈரானிடமிருந்து அமெரிக்க வீரர் மீட்கப்பட்டது எப்படி? | US | Iran
இணையதளச் செய்திப் பிரிவு

நான் திரையிலிருந்து வரவில்லை; சிறையிலிருந்து வந்தவன்!: Seeman | NTK | TN Election
இணையதளச் செய்திப் பிரிவு

