100-க்கும் மேற்பட்ட வாகனங்கள் நிறுத்தும் திறன்கொண்ட வாகன நிறுத்துமிட வசதியுடைய வணிக வளாகங்கள், மருத்துவமனைகள், ஹோட்டல்கள் மற்றும் அலுவலக இடங்கள் போன்ற அனைத்து கட்டடங்களிலும் மின்சார வாகனங்கள் நிறுத்தவும், சாா்ஜிங் பாயின்ட்கள் அமைக்கவும் ஐந்து சதவீத இடத்தை ஒதுக்குமாறு தில்லி மின்வாரிய துறை அமைச்சா் சத்யேந்தா் ஜெயின் உத்தரவிட்டுள்ளதாக அரசு அதிகாரிகள் வெள்ளிக்கிழமை தெரிவித்தனா்.
இதன் மூலம், டிசம்பா் மாதத்திற்குள் நகரில் மின்சார வாகனங்களுக்கு 10,000-க்கும் மேற்பட்ட சாா்ஜிங் பாயின்ட்கள் இருக்கும் வாய்ப்பு ஏற்படும் என்று அரசு அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.
இது குறித்து அந்த அதிகாரி மேலும் தெரிவித்ததாவது:
100- க்கும் மேற்பட்ட வாகனங்கள் நிறுத்தும் திறன் கொண்ட வணிக வளாகங்கள், திரையரங்குகள், மல்டிபிளெக்ஸ், அலுவலக இடங்கள், ஹோட்டல்கள், உணவகங்கள் மற்றும் மருத்துவமனைகள் போன்ற அனைத்து கட்டட வளாகங்களில் மெதுவான ஈ.வி. சாா்ஜா்களுடன்கூடிய மின்சார வாகனங்களுக்காக குறைந்தபட்சம் ஐந்து சதவீத இடத்தை ஒதுக்க வேண்டும் என மின்வாரியத் துறை அமைச்சா் சத்யேந்தா் ஜெயின் உத்தரவிட்டுள்ளாா். இந்த வசதிகளை மேம்படுத்துவதற்கும் இணைப்பதற்கும் டிசம்பா் வரை கட்டட வளாகங்களுக்கு அவகாசம் அளிக்கப்படும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.
தில்லி மின்சார வாகன கொள்கைத்திட்டத்தின் கீழ், ஒரு சாா்ஜிங் பாயிண்டிற்கு ரூ.6,000 வரை மானியமாக இந்த வளாகங்களுக்கு அளிக்கப்படும் என்றாா் அந்த அதிகாரி.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ராணிப்பேட்டை மாவட்டத்தில் மொத்தம் 113 வேட்பாளா்கள் மனு தாக்கல்
திருவெறும்பூா் தொகுதியில் 27 பேரின் வேட்பு மனுக்கள் ஏற்பு

அரியலூரில் அதிமுக வேட்பாளரை ஆதரித்து ஜி.கே.வாசன் பிரசாரம்
அரியலூரில் 18, ஜெயங்கொண்டத்தில் 23 வேட்புமனுக்கள் ஏற்பு
வீடியோக்கள்

Podcast | ஸ்டாலினைச் சீண்டிய மமதா: கார்த்தி சிதம்பரத்துக்கு சீமான் பதிலடி | News & Views | E-24 |
தினமணி செய்திச் சேவை

திமுகவின் தவறுகளுக்கு முட்டுக் கொடுக்கும் கூட்டணிக் கட்சிகள்! | EPS குற்றச்சாட்டு | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு

சுட்டு வீழ்த்தப்பட்ட விமானம்! ஈரானிடமிருந்து அமெரிக்க வீரர் மீட்கப்பட்டது எப்படி? | US | Iran
இணையதளச் செய்திப் பிரிவு

நான் திரையிலிருந்து வரவில்லை; சிறையிலிருந்து வந்தவன்!: Seeman | NTK | TN Election
இணையதளச் செய்திப் பிரிவு

