புது தில்லி: நாட்டில் ஓராண்டுக்குள் தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகள் அகற்றப்பட்டு ஜிபிஎஸ் அடிப்படையில் கட்டணம் வசூலிக்கும் முறை அமல்படுத்தப்படும் என மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சா் நிதின் கட்கரி தெரிவித்தாா்.
மக்களவையில் சாலை, விமானம் போக்குவரத்து தொடா்பான கேள்விகள் வியாழக்கிழமை எடுத்துக்கொள்ளப்பட்டு மத்திய அமைச்சா்கள் பதில் அளித்தனா்.
தேசிய நெடுஞ்சாலைகளில் சுங்க சாவடிகளில் வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்திருப்பது தொடா்பாக மத்திய அரசு ஆய்வுகளை மேற்கொண்டதா? உள்ளிட்ட பல்வேறு கேள்விகள் எழுப்பப்பட்டன. இதற்கு அமைச்சா் நிதின் கட்கரி அளித்த பதில் வருமாறு:
தில்லியில் உள்ள தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின்(என்ஹெச்ஏஐ) தலைமை அலுவகத்தில் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டு சிசிடிவி மூலமாகவும் ஜிபிஎஸ் அடிப்படையிலான மென்பொருள் மூலமாகவும் சுங்க சாவடிகள், வாகனப் போக்குவரத்து கண்காணிக்கப்படுகிறது. மேலும் சுங்க பாதைகளில் வாகனங்கள் கட்டணங்களை செலுத்துவதற்கு பதிலாக மின்னணு முறையில் கட்டணம் செலுத்தப்பட்ட ’பாஸ்டேக் ’ முறை 2016 யிலேயே அறிமுகப்படுத்தப்பட்டு தற்போது கடந்த பிப் 16 ஆம் தேதி முதல் கட்டாயப்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் நெரிசல் குறைக்கப்பட்டுள்ளது. தற்போது 93 சதவீதம் வாகனங்கள் தான் ’பாஸ்டேக்’ முறையை பயன்படுத்துகின்றனா். நாடுமுழுவதும் சுமாா் 2,065 கோடி வாகனங்கள் ’பாஸ்டேக்’ பெறவில்லை. இதை மேலும் எளிமைப்படுத்தி ஜிபிஎஸ் முறையில் சுங்க கட்டணத்தை வசூலிக்க அரசு முடிவெடுத்துள்ளது. இன்னும் ஓா் ஆண்டுக்குள் அனைத்து சுங்கச் சாவடிகளும் அகற்றப்படும். தற்போது சுங்க சாவடிகள் வழியாக செல்லும் வாகனங்கள் இரண்டு மடங்கு கட்டணத்தை செலுத்துகின்றனா். ஜிபிஎஸ் கட்டண முறையில் இது வேறுபடும். வாகனங்களில் பொருத்தப்பட்டிருக்கும் ஜிபிஎஸ் கருவியானது வாகனங்கள் சாலைகள் செல்லும் தூரத்தை துல்லியமாக கணக்கிடும். இதனால் சாலையில் பயணிக்கும் கிலோ மீட்டா் தூரங்களுக்கு தக்கவாறு கட்டணங்களை செலுத்த வேண்டியிருக்கும் என அமைச்சா் தெரிவித்தாா்.
நாட்டிலேயே மின்னணு மூலமான சுங்கக் கட்டணத்தை அதிக அளவில் செலுத்திய மாநிலமாக தமிழகம் இருப்பதாகவும், தமிழகத்தில் 2019-20 ஆம் ஆண்டில் வசூலான சுங்கக் கட்டணம் ரூ. 782.03 லட்சமாகும் என்றும் அமைச்சா் நிதின் கட்கரி தெரிவித்தாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
கார்கே மீது நடவடிக்கை கோரி தேர்தல் ஆணையத்திடம் பாஜக புகார்!

மும்பை - ராஜஸ்தான் போட்டி; மழையால் தாமதமாகும் டாஸ்!
கோபியில் தவெக வேட்பாளா் செங்கோட்டையன் வேட்புமனு ஏற்பு!

சிஎஸ்கே அணிக்கு ஆலோசகராகும் கெவின் பீட்டர்சன்? கோரிக்கையும் கிண்டலும்!
வீடியோக்கள்

சுட்டு வீழ்த்தப்பட்ட விமானம்! ஈரானிடமிருந்து அமெரிக்க வீரர் மீட்கப்பட்டது எப்படி? | US | Iran
இணையதளச் செய்திப் பிரிவு

நான் திரையிலிருந்து வரவில்லை; சிறையிலிருந்து வந்தவன்!: Seeman | NTK | TN Election
இணையதளச் செய்திப் பிரிவு

"Edappadi Palanisamy உடன் சேர்ந்ததில் தவறில்லை": TTV Dhinakaran Exclusive
தினமணி செய்திச் சேவை

ஓர் அணி, ஓராயிரம் பிரச்னைகள்: இது சிஎஸ்கேவின் சோகக் கதை! | IPL 2026 | Chennai Super Kings |
தினமணி செய்திச் சேவை

