முன்னாள் இங்கிலாந்து வீரர் கெவின் பீட்டர்சனை சிஎஸ்கே அணிக்கு ஆலோசகராக்க வேண்டுமென ஐபிஎல் ரசிகர்கள் கோரிக்கை வைத்து வருகிறார்கள்.
இந்தக் கோரிக்கைக்கு கெவின் பீட்டர்சனும் ஒப்புதல் அளித்துள்ளது சிஎஸ்கே ரசிகர்கள் மத்தியில் புத்துணர்வை அளித்துள்ளது.
ஐபிஎல் தொடரில் ஐந்து முறை கோப்பை வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) கடந்த 2 சீசன்களாக மோசமாக விளையாடி வருகிறது.
இந்த சீசனிலும் முதல் 3 போட்டிகளில் தோல்விகளை சந்தித்துள்ளதால், அந்த அணியின் ரசிகர்கள் மிகுந்த சோகத்தில் இருக்கிறார்கள்.
மோசமான பயிற்சியாளர்களாலே இந்தமாதிரி நடப்பதால், ”கெவின் பீட்டர்சனை ஆலோசகராக்க பரிந்துரையுங்கள் சிஎஸ்கே” என ரசிகர்கள் ஒருவர் எக்ஸில் பதிவிட்டிருந்தார்.
இந்தப் பதிவினைப் பகிர்ந்த பீட்டர்சன், “ஆமாம், செய்யுங்கள். மாலத்தீவுக்கு அருகில்தான் இருக்கிறது. எனக்கு பயணம் செய்யவும் எளிது” எனக் கூறியுள்ளார்.
தில்லி கேபிடல்ஸில் ஆலோசகராக இருக்கும்போது பாதியில் மாலத்தீவுக்குச் சென்றதை இப்படி ஜாலியாக பதிவிட்டுள்ளார். தில்லி கேபிடல்ஸ் அணியும் சிரிக்கும் எமோஜியைப் பதிவிட்டுள்ளது.
Summary
Kevin Pietersen as mentor of csk, fans request on social media.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.










