அமைச்சராகிறார் ஐயூஎம்எல் ஷாஜகான்! - காதர் மொய்தீன் அறிவிப்புபுதிய அமைச்சர்களுக்கு துறைகள் ஒதுக்கீடு!அமைச்சர் செங்கோட்டையனின் துறை மாற்றம்!மனம் நொந்து அதிமுகவிலிருந்து விலகிவிட்டேன்: தனபால்!சீமான் - கயல்விழிக்கு பெண் குழந்தை! தமிழ்த் தாய் வாழ்த்துக்கு மீண்டும் மூன்றாமிடம்!
/

சிஎஸ்கே அணியின் கேப்டன் பொறுப்பிலிருந்து விலகுவாரா ருதுராஜ் கெய்க்வாட்?

சிஎஸ்கே அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் குறித்து...

News image

ருதுராஜ் கெய்க்வாட். - படம்: ஐபிஎல்

Updated On :21 மே 2026, 12:36 pm IST

சிஎஸ்கே அணியின் கேப்டன் (அணித் தலைவர்) பொறுப்பிலிருந்து ருதுராஜ் கெய்க்வாட் விலகுவாரா என்ற கேள்வியும் எதிர்பார்ப்பும் அந்த அணியின் ரசிகர்களிடம் எழுந்துள்ளது.

நடப்பு சீசனில் சிஎஸ்கே அணி 6 போட்டிகளில் வெற்றியும் 7 போட்டிகளில் தோல்வியும் பெற்று, புள்ளிப் பட்டியலில் ஏழாவது இடத்தில் இருக்கின்றன.

கடைசி 2 போட்டிகளில் வென்றிருந்தால், சிஎஸ்கே அணி பிளே ஆஃப் செல்லும் வாய்ப்பிருந்த நிலையில், இரண்டிலுமே தோல்வியுற்று ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்தது.

இந்த சீசனில் ருதுராஜ் கெய்க்வாட் 13 போட்டிகளில் 321 ரன்கள் குவித்துள்ளார். சராசரி 29.18 உடன் 120.68 ஸ்டிரைக் ரேட்டுடன் விளையாடியுள்ளார்.

கடைசி போட்டியில் ஒரேயொரு பவுண்டரியும் அடிக்காமல் விளையாடியது மிகப்பெரிய விமர்சனத்தை ஏற்படுத்தியது. அவரது பேட்டிங் திறமை கேப்டன்சியினால் பாதிக்கப்படுவதால், அடுத்த சீசனிலாவது அவர் இந்தத் தோல்விகளுக்குப் பொறுப்பேற்று பதவி விலகுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

கேப்டனாக இல்லாதபோது ருதுராஜ் சிறப்பாக விளையாடியுள்ளதால், அவர் மீண்டும் பேட்டராக மட்டுமே அணியில் தொடந்தால் அவருக்கும் அணிக்கும் நல்லது என முன்னாள் வீரர்களும் ரசிகர்கள் சமூக வலைதளத்தில் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

ஆப்கானிஸ்தான் உடனான ஒருநாள், டெஸ்ட் தொடர்களில் இந்திய அணியிலும் ருதுராஜ் தேர்வாகவில்லை என்பது கவனிக்கப்பட்டு வருகிறது. ஐபிஎல் போட்டிகள் மோசமாக விளையாடுவதால் அவருக்கான வாய்ப்பு கிடைக்கவில்லை என விமர்சிக்கப்பட்டு வருகிறது.

Summary

Will Ruturaj Gaikwad step down from the CSK captaincy?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.