ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் புதிய சாதனை படைத்துள்ளார்.
ஐபிஎல் தொடரில் லக்னௌவில் நேற்று (மே 15) நடைபெற்ற ஆட்டத்தில் லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதின. இந்தப் போட்டியில் லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சிஎஸ்கேவை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.
இந்தப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் 13 ரன்கள் எடுத்தார். இதன் மூலம், ருதுராஜ் கெய்க்வாட் கேப்டனாக ஐபிஎல் தொடரில் 1000 ரன்களைக் கடந்து சாதனை படைத்துள்ளார். இதுவரை 83 ஐபிஎல் போட்டிகளில் விளையாடியுள்ள ருதுராஜ் கெய்க்வாட் 2808 ரன்கள் எடுத்துள்ளார். அதில் 22 அரைசதங்கள் மற்றும் இரண்டு சதங்கள் அடங்கும்.
நடப்பு ஐபிஎல் தொடரில் இதுவரை 12 போட்டிகளில் விளையாடியுள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் 6 வெற்றிகளுடன் புள்ளிப்பட்டியலில் 6-வது இடத்தில் உள்ளது. கடைசி இரண்டு மிக முக்கியமான லீக் போட்டிகளில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளை எதிர்த்து சிஎஸ்கே விளையாடவுள்ளது குறிப்பிடத்தக்கது.
Summary
Chennai Super Kings captain Ruturaj Gaikwad has set a new record in the IPL series.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

டி20 போட்டிகளில் ருதுராஜ் கெய்க்வாட் புதிய சாதனை!

ருதுராஜ் கெய்க்வாட் அரைசதம்; குஜராத் டைட்டன்ஸுக்கு 159 ரன்கள் இலக்கு!

ருதுராஜ் கெய்க்வாட் மிகுந்த அழுத்தத்தில் இருக்கிறார்: அஸ்வின்

பேட்டிங்கில் முழுமையான சொதப்பல்; தலைமைப் பண்பிலும் தெளிவில்லாத ருதுராஜ் கெய்க்வாட்!
விடியோக்கள்

ஆட்சியைக் கலைத்துவிட்டு தேர்தலை சந்திப்பார் விஜய் ? | Ravindran Duraisamy Interview | TVK | CM Vijay
தினமணி செய்திச் சேவை

”விவாகரத்து கிடக்கும் வரை நடிக்கப்போவதில்லை!”: Ravi Mohan பரபரப்பு பேட்டி!
இணையதளச் செய்திப் பிரிவு

மதிய உணவுடன் செயலகம் வரும் முதல்வர்! அமைச்சர் நிர்மல் குமார்
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | அமைச்சர் ஆவார்களா அதிமுக எம்எல்ஏ-க்கள்? | News and Views | Epi - 35 | TVK | CM Vijay |
தினமணி செய்திச் சேவை


