ஐபிஎல் தொடரில் குஜராத் டைட்டன்ஸுக்கு எதிரான போட்டியில் முதலில் விளையாடிய சென்னை சூப்பர் கிங்ஸ் 7 விக்கெட்டுகளை இழந்து 158 ரன்கள் எடுத்துள்ளது.
ஐபிஎல் தொடரில் சென்னை சேப்பாக்கம் திடலில் நடைபெற்று வரும் இன்றையப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன.
இந்தப் போட்டியில் டாஸ் வென்ற குஜராத் டைட்டன்ஸ் பந்துவீச்சைத் தேர்வு செய்ய, சென்னை சூப்பர் கிங்ஸ் முதலில் விளையாடியது.
ருதுராஜ் கெய்க்வாட் அரைசதம்; குஜராத் டைட்டன்ஸுக்கு 159 ரன்கள் இலக்கு!
முதலில் விளையாடிய சென்னை சூப்பர் கிங்ஸ் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 158 ரன்கள் எடுத்துள்ளது.
சென்னை சூப்பர் கிங்ஸுக்கு தொடக்கம் சரியாக அமையவில்லை. சஞ்சு சாம்சன் 11 ரன்கள், உர்வில் படேல் 4 ரன்கள், சர்ஃபராஸ் கான் 0 ரன், டெவால்ட் பிரேவிஸ் 2 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர். சென்னை சூப்பர் கிங்ஸ் 37 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து திணறியது.
அதன் பின், கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட்டுடன் ஷிவம் துபே ஜோடி சேர்ந்தார். இந்த இணை சற்று தாக்குப் பிடித்தது. இருப்பினும், ஷிவம் துபே 17 பந்துகளில் 22 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதில் 3 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர் அடங்கும். கார்த்திக் சர்மா 15 ரன்கள் எடுத்தார்.
தொடக்கம் முதலே நிதானமாக விளையாடிய கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட், கடைசிக் கட்டத்தில் சற்று அதிரடி காட்டினார். நிதானமாக விளையாடிய அவர் 60 பந்துகளில் 74 ரன்கள் எடுத்து கடைசி வரை களத்தில் இருந்தார். அதில் 6 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்கள் அடங்கும். ஜேமி ஓவர்டன் 6 பந்துகளில் அதிரடியாக 18 ரன்கள் எடுத்தார். அதில் 3 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர் அடங்கும்.
குஜராத் டைட்டன்ஸ் தரப்பில் ககிசோ ரபாடா மூன்று விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார். அர்ஷத் கான் இரண்டு விக்கெட்டுகளையும், முகமது சிராஜ் மற்றும் மானவ் சுதர் தலா ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றினர்.
159 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி குஜராத் டைட்டன்ஸ் அணி விளையாடி வருகிறது.
Summary
In the IPL match against the Gujarat Titans, Chennai Super Kings, batting first, scored 158 runs for the loss of 7 wickets.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

இன்று குஜராத்துடன் மோதும் சென்னை

ருதுராஜ் கெய்க்வாட் மிகுந்த அழுத்தத்தில் இருக்கிறார்: அஸ்வின்

கொல்கத்தாவுக்கு எதிரான போட்டியில் ஃபார்முக்குத் திரும்புவாரா ருதுராஜ்?

சிஎஸ்கே - குஜராத் டைட்டன்ஸ் இடையேயான போட்டிகளுக்கான இடங்களை மாற்றிய பிசிசிஐ!
வீடியோக்கள்

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை



