27 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கைமேக்கேதாட்டு அணைக்கு எதிராக பேரவையில் இன்று தீா்மானம்: முதல்வா் விஜய் முன்மொழிகிறாா்அமெரிக்க மத்திய வங்கி வட்டி விகிதத்தில் மாற்றமில்லை!அஞ்சல் துறை லோக் அதாலத்: ஜூன் 30-க்குள் மனுக்களை அனுப்பலாம்ஜந்தா் மந்திரில் நாளை இரண்டாம் கட்ட போராட்டம்: கரப்பான்பூச்சி மக்கள் கட்சிநாடு முழுவதும் மேலும் 3 கோடி குடும்ப அட்டைகள் வழங்க வாய்ப்பு - மத்திய அமைச்சா் தகவல்பிஎம் கிசான் திட்டத்தின்கீழ் 9.44 கோடி விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நாளை பணம் டெபாசிட் - பிரதமா் மோடி தொடங்கி வைக்கிறாா்பிரிக்ஸ் தேசிய பாதுகாப்பு ஆலோசகா் மாநாட்டில் பங்கேற்பதாக சீனா அறிவிப்புநீட் தோ்வன்று ரயில் நிலையங்களில் உதவி மையங்கள்ரூ. 2,400 கோடி வேலைவாய்ப்பு ஊக்கத்தொகை: இன்று பிரதமா் வழங்குகிறாா் - நாடு முழுவதும் நேரலைகுடியரசு துணைத் தலைவா் இன்று லடாக் பயணம்
/

டி20 போட்டிகளில் ருதுராஜ் கெய்க்வாட் புதிய சாதனை!

டி20 போட்டிகளில் இந்திய வீரர் ருதுராஜ் கெய்க்வாட் புதிய சாதனை படைத்துள்ளார்.

News image

ருதுராஜ் கெய்க்வாட் - படம் | ஐபிஎல் (எக்ஸ்)

Updated On :3 மே 2026, 11:59 am IST

டி20 போட்டிகளில் இந்திய வீரர் ருதுராஜ் கெய்க்வாட் புதிய சாதனை படைத்துள்ளார்.

ஐபிஎல் தொடரில் சென்னை சேப்பாக்கம் திடலில் நடைபெற்ற நேற்றைய ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் விளையாடின.

இந்தப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் அரைசதம் விளாசி அசத்தினார். அவர் 48 பந்துகளில் 67 ரன்கள் எடுத்து கடைசி வரை களத்தில் இருந்தார். அதில் 5 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்கள் அடங்கும்.

நேற்றையப் போட்டியில் 5 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்கள் விளாசியதன் மூலம், டி20 போட்டிகளில் ருதுராஜ் கெய்க்வாட் புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளார்.

டி20 போட்டிகளில் 200 சிக்ஸர்கள் மற்றும் 500 பவுண்டரிகள் விளாசி ருதுராஜ் கெய்க்வாட் சாதனை படைத்துள்ளார். நடப்பு ஐபிஎல் தொடரில் ஆரம்பக் கட்ட போட்டிகளில் ரன்கள் குவிக்கத் தவறிய ருதுராஜ் கெய்க்வாட், தொடர்ச்சியாக இரண்டு அரைசதங்கள் விளாசி ஃபார்முக்குத் திரும்பியுள்ளார்.

நடப்பு ஐபிஎல் தொடரில் இதுவரை 9 போட்டிகளில் விளையாடியுள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் 4 வெற்றிகளுடன் புள்ளிப்பட்டியலில் 6-வது இடத்தில் உள்ளது.

Summary

Indian player Ruturaj Gaikwad has set a new record in T20 matches.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.