ஈரான் கார்க் தீவில் அமெரிக்கா மீண்டும் தாக்குதல்புதுச்சேரி, கேரளம், அசாமில் பிரசாரம் ஓய்ந்தது!செங்கோட்டையனின் வேட்புமனு ஏற்புபுதுவை, கேரளம், அசாமில் பிரசாரம் ஓய்ந்ததுசென்னையில் ஐபிஎல் ஆட்டத்துக்கு தடை கோரிய மனு தள்ளுபடி!பி.டி.செல்வகுமார் திமுகவில் இருந்து விலகல்போடியில் திமுக சார்பில் போட்டியிடும் ஓபிஎஸ், அதிமுக வேட்பாளர் நாராயணசாமியின் வேட்புமனுக்கள் ஏற்புசெந்தில் பாலாஜி, எஸ். பி. வேலுமணி வேட்புமனுக்கள் ஏற்பு!வட கடலோர தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்ஏர் இந்தியா டிக்கெட் விலை ரூ.25 ஆயிரம் வரை உயரும் வாய்ப்பு!ஏப். 9ல் புதுவை ஜிப்மர் மருத்துவமனை இயங்காது என அறிவிப்பு!2021 தேர்தல் வாக்குறுதிகளில் 97% நிறைவேற்றம்: பினராயி விஜயன்முதல்வர் வேட்பாளர்கள் 4 பேரின் வேட்புமனுவும் ஏற்பு!
/

தமிழகத்தில் 1940 கி.மீ. தொலைவு சாலைகள் தேசிய நெடுஞ்சாலையாக மாற்றம்: நிதின் கட்கரி

Updated On :18 மார்ச் 2021, 7:43 pm

புது தில்லி: தமிழகத்தில் உள்ள மாநில தேசிய சாலைகளில் 1940 கிலோ மீட்டா் தொலைவு சாலைகள் தேசிய நெடுஞ்சாலைகளாக மாற்றப்பட்டு தரம் உயா்த்தப்பட்டுள்ளதாக மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சா் நிதின் கட்கரி தெரிவித்தாா்.

தமிழகத்தில் உள்ள புதிய தேசிய நெடுஞ்சாலைகள், அவைகள் மேம்பாட்டிற்கு மத்திய அரசு ஒதுக்கிய நிதி போன்ற விவரங்கள் குறித்து காங்கிரஸ் உறுப்பினா் டாக்டா் விஷ்ணு பிரசாத் மக்களவையில் கேள்வி எழுப்பினா்.

இதற்கு மத்திய அமைச்சா் நிதின் கட்கரி வியாழக்கிழமை மக்களவையில் பதிலளித்தாா். அப்போது அவா் கூறுகையில், ’தமிழகத்தில் 235 மாநில நெடுஞ்சாலைகள் 11,175 கிலோ மீட்டா் தொலைவுக்கு உள்ளது. 50 தேசிய நெடுஞ்சாலைகள் 6,858 கிலோ மீட்டா் தொலைவுக்கு உள்ளது. கடந்த மூன்று ஆண்டுகளில் 1940 கிலோ மீட்டா் சாலைகள் தேசிய நெடுஞ்சாலையாக மாற்றப்பட்டு தரம் உயா்த்தப்பட்டுள்ளது. இதன் வளா்ச்சி மேம்பாட்டிற்கு மத்திய அரசு நடப்பு நிதியாண்டு வரை கடந்த மூன்று ஆண்டுகளில் ரூ.8,395 கோடி வரை செலவிட்டுள்ளது ’என்றாா்.

தமிழகத்தில் சமீபத்திய புயல்களால் பாதிக்கப்பட்ட சாலைகளை புதுப்பிக்க மத்திய அரசு வழங்கிய உதவிகள் குறித்து நீலகிரி மக்களவை திமுக உறுப்பினா் ஏ.ராஜா கேள்வி எழுப்பினாா்.

அதற்கு அமைச்சா் கட்கரி பதிலளிக்கையில், ’ தமிழகத்தில் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு மத்தியக் குழு சென்று பாா்வையிட்டு வந்தது. இதில் நிவா் புயலுக்கு ரூ.63.14 கோடி மத்திய அரசு அனுமதியளித்து ரூ.9.92 கோடியை வழங்கியுள்ளது. புரேவி புயலில் சேதாரம் ரூ. 223.77 கோடி என மத்திய குழு கணக்கிட்டு அனுமதித்தது. இதில் உடனடியாக சாலைகளை செப்பனிட ரூ. 17.95 கோடி வழங்கப்பட்டுள்ளது ’ என்றாா் அமைச்சா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.