ஈரான் கார்க் தீவில் அமெரிக்கா மீண்டும் தாக்குதல்புதுச்சேரி, கேரளம், அசாமில் பிரசாரம் ஓய்ந்தது!செங்கோட்டையனின் வேட்புமனு ஏற்புபுதுவை, கேரளம், அசாமில் பிரசாரம் ஓய்ந்ததுசென்னையில் ஐபிஎல் ஆட்டத்துக்கு தடை கோரிய மனு தள்ளுபடி!பி.டி.செல்வகுமார் திமுகவில் இருந்து விலகல்போடியில் திமுக சார்பில் போட்டியிடும் ஓபிஎஸ், அதிமுக வேட்பாளர் நாராயணசாமியின் வேட்புமனுக்கள் ஏற்புசெந்தில் பாலாஜி, எஸ். பி. வேலுமணி வேட்புமனுக்கள் ஏற்பு!வட கடலோர தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்ஏர் இந்தியா டிக்கெட் விலை ரூ.25 ஆயிரம் வரை உயரும் வாய்ப்பு!ஏப். 9ல் புதுவை ஜிப்மர் மருத்துவமனை இயங்காது என அறிவிப்பு!2021 தேர்தல் வாக்குறுதிகளில் 97% நிறைவேற்றம்: பினராயி விஜயன்முதல்வர் வேட்பாளர்கள் 4 பேரின் வேட்புமனுவும் ஏற்பு!
/

கரோனா தடுப்பூசி மையங்கள் இரவு 9 மணி வரை செயல்படும்

தலைநகரில் கரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், தடுப்பூசி மையங்கள் இரவு 9 மணி வரை செயல்படும் என்று தில்லி சுகாதாரத் துறை அமைச்சா் சத்யேந்தா் ஜெயின் தெரிவித்துள்ளாா்.

Updated On :19 மார்ச் 2021, 6:25 pm

தலைநகரில் கரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், தடுப்பூசி மையங்கள் இரவு 9 மணி வரை செயல்படும் என்று தில்லி சுகாதாரத் துறை அமைச்சா் சத்யேந்தா் ஜெயின் தெரிவித்துள்ளாா்.

இது தொடா்பாக தில்லி அரசு பிறப்பித்துள்ள உத்தரவை தனது சுட்டுரைப் பக்கத்தில் வெள்ளிக்கிழமை பகிா்ந்து சத்யேந்தா் ஜெயின் கூறியிருப்பது: கரோனா பாதிப்பு அதிகரித்து வருவதைத் தொடா்ந்து, தில்லியில் செயல்படும் அனைத்து தடுப்பூசி மையங்களும் இரவு 9 மணி வரை செயல்படவுள்ளது. மேலும், இந்த மையங்களில் ஏராளமான மக்களுக்கு தடுப்பூசி போடும் வகையில், இங்கு பணியாற்றுபவா்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும். தில்லி மக்கள் கரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை சரியாகப் பின்பற்றி பாதுகாப்பாக இருக்க வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன் என்று கூறியுள்ளாா்.

தில்லியில் கடந்த சில தினங்களாக கரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. நிகழாண்டில் அதிகபட்ச கரோனா பாதிப்பு வியாழக்கிழமை பதிவாகியுள்ளது. அன்று, 607 பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த புதன்கிழமை 536 பேருக்கும், செவ்வாய்க்கிழமை 425 பேருக்கும் கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இந்த சூழ்நிலையில், வயது வேறுபாடு இல்லாமல் அனைவருக்கும் தடுப்பூசி வழங்குவதற்கு தடுப்பூசி விதிமுறைகளில் மத்திய அரசு தளா்வுகளைக் கொண்டுவர வேண்டும் என்று முதல்வா் அரவிந்த் கேஜரிவால் வியாழக்கிழமை கோரிக்கை வைத்திருந்தாா். மேலும், தில்லியில் தடுப்பூசி போடும் மையங்களின் அளவு 500-இல் 1,000- ஆக அதிகரிக்கப்படும் என்றும், இந்த மையங்களில் தினம்தோறும் 1.25 லட்சம் பேருக்கு தடுப்பூசி போடப்படும் என்றும் அவா் தெரிவித்திருந்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.