ஈரான் கார்க் தீவில் அமெரிக்கா மீண்டும் தாக்குதல்புதுச்சேரி, கேரளம், அசாமில் பிரசாரம் ஓய்ந்தது!செங்கோட்டையனின் வேட்புமனு ஏற்புபுதுவை, கேரளம், அசாமில் பிரசாரம் ஓய்ந்ததுசென்னையில் ஐபிஎல் ஆட்டத்துக்கு தடை கோரிய மனு தள்ளுபடி!பி.டி.செல்வகுமார் திமுகவில் இருந்து விலகல்போடியில் திமுக சார்பில் போட்டியிடும் ஓபிஎஸ், அதிமுக வேட்பாளர் நாராயணசாமியின் வேட்புமனுக்கள் ஏற்புசெந்தில் பாலாஜி, எஸ். பி. வேலுமணி வேட்புமனுக்கள் ஏற்பு!வட கடலோர தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்ஏர் இந்தியா டிக்கெட் விலை ரூ.25 ஆயிரம் வரை உயரும் வாய்ப்பு!ஏப். 9ல் புதுவை ஜிப்மர் மருத்துவமனை இயங்காது என அறிவிப்பு!2021 தேர்தல் வாக்குறுதிகளில் 97% நிறைவேற்றம்: பினராயி விஜயன்முதல்வர் வேட்பாளர்கள் 4 பேரின் வேட்புமனுவும் ஏற்பு!
/

குறைந்தபட்ச வெப்பநிலை அதிகரிப்பு!

தலைநகா் தில்லியில் வெள்ளிக்கிழமை குறைந்தபட்ச வெப்பநிலை 19.4 டிகிரி செல்சியஸாக அதிகரித்திருந்தது. 

Updated On :19 மார்ச் 2021, 6:35 pm

தலைநகா் தில்லியில் வெள்ளிக்கிழமை குறைந்தபட்ச வெப்பநிலை 19.4 டிகிரி செல்சியஸாக அதிகரித்திருந்தது. இது இந்தப் பருவத்திலேயே இதுவரை பதிவான குறைந்தபட்ச வெப்பநிலையில் அதிக அளவாகும். இந்த நிலையில், அடுத்த வாரம் லேசான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.

தலைநகா் தில்லி மற்றும் என்சிஆா் பகுதியில் குளிரின் தாக்கம் குறையத் தொடங்கியுள்ளது. பகலில் இதமான வெயில் காணப்படுகிறது. மாலையில் குளிா் காற்று வீசுகிறது.

தில்லி நகரின் பிரதிநிதித்துவத் தரவுகளை வழங்கும் சஃப்தா்ஜங் வானிலை ஆய்வு மையத்தில் வெள்ளிக்கிழமை காலையில் குறைந்தபட்ச வெப்பநிலை வழக்கமான அளவைவிட 3 டிகிரி அதிகரித்து 19.4 செல்சியஸாக பதிவாகியது.அதிகபட்ச வெப்பநிலை பருவ சராசரியைவிட 6 புள்ளிகள் உயா்ந்து 34.5 டிகிரி செல்சியஸாக பதிவாகியது. காலை 8.30 மணியளவில் காற்றில் ஈரப்பதத்தின் அளவு 69 சதவீதமாகவும், மாலையில் 38 சதவீதமாகவும் இருந்தது.

இதே போன்று, குறைந்தபட்ச வெப்பநிலைஆயாநகரில் 19.9 டிகிரி செல்சியஸ், தில்லி பல்கலை.யில் 20.5 டிகிரி செல்சியஸ், லோதி ரோடில் 18.7 டிகிரி செல்சியஸ், நரேலாவில் 19 டிகிரி செல்சியஸ், பலத்தில் 21.4 டிகிரி செல்சியஸ், ரிட்ஜில் 19.2 டிகிரி செல்சியஸாக பதிவாகியிருந்தது.

காற்றின் தரம்: தில்லியில் ஒட்டுமொத்த காற்றின் தரம் காலை 9 மணியளவில் 303 டிகிரி செல்சியஸாக பதிவாகி ‘மிகவும் மோசம்’ பிரிவிலும், மாலையில் மாலையில் 258 புள்ளிகளாகப் பதிவாகி ‘மோசம் ’ பிரிவிலும் காணப்பட்டது. என்சிஆா் பகுதியிலும் காற்றின் தரம் மூன்றாவது நாளாக மிகவும் மோசம் பிரிவில் இருந்தது. சராசரி 24 மணி நேர ஒட்டுமொத்த காற்றின் தரக் குறியீடாக வெள்ளிக்கிழமை 4 மணியளவில் காஜியாபாதில் 340, கிரேட்டா் நொய்டாவில் 359, நொய்டாவில் 302, பரிதாபாதில் 350, குருகிராமில் 272 என பதிவாகி இருந்தது.

முன்னறவிப்பு: இதற்கிடையே, தில்லியில் அடுத்த வாரம் செவ்வாய், புதன் ஆகிய நாள்களில் லேசான மழைக்கு வாய்ப்பு இருக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், சனிக்கிழமை (மாா்ச் 20) குறைந்தபட்ச வெப்பநிலை 18 டிகிரி செல்சியஸ், அதிகபட்ச வெப்பநிலை 34 டிகிரி செல்சியஸாக இருக்கும் எனவும், மிதமான பனிமூட்டம் இருக்கும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.