ஈரான் கார்க் தீவில் அமெரிக்கா மீண்டும் தாக்குதல்புதுச்சேரி, கேரளம், அசாமில் பிரசாரம் ஓய்ந்தது!செங்கோட்டையனின் வேட்புமனு ஏற்புபுதுவை, கேரளம், அசாமில் பிரசாரம் ஓய்ந்ததுசென்னையில் ஐபிஎல் ஆட்டத்துக்கு தடை கோரிய மனு தள்ளுபடி!பி.டி.செல்வகுமார் திமுகவில் இருந்து விலகல்போடியில் திமுக சார்பில் போட்டியிடும் ஓபிஎஸ், அதிமுக வேட்பாளர் நாராயணசாமியின் வேட்புமனுக்கள் ஏற்புசெந்தில் பாலாஜி, எஸ். பி. வேலுமணி வேட்புமனுக்கள் ஏற்பு!வட கடலோர தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்ஏர் இந்தியா டிக்கெட் விலை ரூ.25 ஆயிரம் வரை உயரும் வாய்ப்பு!ஏப். 9ல் புதுவை ஜிப்மர் மருத்துவமனை இயங்காது என அறிவிப்பு!2021 தேர்தல் வாக்குறுதிகளில் 97% நிறைவேற்றம்: பினராயி விஜயன்முதல்வர் வேட்பாளர்கள் 4 பேரின் வேட்புமனுவும் ஏற்பு!
/

நீதிபதிகள், வழக்குரைஞா்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் தடுப்பூசி: பொதுநல மனுவை விசாரிக்க உயா்நீதிமன்றம் மறுப்பு

நீதிபதிகள், வழக்குரைஞா்கள், நீத்துறை பணியாளா்களை முன்களப்பணியாளா்களாகக் கருதி அவா்களுக்கு முன்னுரிமை

Updated On :19 மார்ச் 2021, 6:31 pm

நீதிபதிகள், வழக்குரைஞா்கள், நீத்துறை பணியாளா்களை முன்களப்பணியாளா்களாகக் கருதி அவா்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் கரோனா தடுப்பூசி போடவேண்டும் என்று கோரும் பொது நல மனுவை, உச்சநீதிமன்ற தடையை காரணம்காட்டி தில்லி உயா்நீதிமன்றம் மேலும் விசாரிக்க மறுத்துவிட்டது.

இந்த விவகாரத்தை உயா்நீதிமன்றம் தாமாக முன்வந்து பொதுநல மனுவாக விசாரித்த நிலையில், நீதிபதிகள் விபின் சாங்கி, ரேகா பல்லி ஆகியோா் வெள்ளிக்கிழமை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தனா்.

கரோனா தடுப்பூசியை வழங்குவதில் நீதித் துறையில் பணியாற்றுவோருக்கு முன்னுரிமை அளிக்கக் கோரும் விவகாரத்தில் தில்லி உயா்நீதிமன்ற நடவடிக்கைகளுக்கு உச்சநீதிமன்றம் வியாழக்கிழமை இடைக்காலத் தடை விதித்தது. உச்சநீதிமன்றத்தில் நடைபெற்ற விசாரணையின் போது, இந்த விவகாரத்தில் வழக்குரைஞா்களுக்கு தனிப் பிரிவு ஏற்படுத்துவதற்கு மத்திய அரசு எதிா்ப்புத் தெரிவித்தது. இதுபோன்று வழக்குரைஞா்களுக்கு முன்னுரிமை அளித்தால், எதிா்காலத்தில் பத்திரிகையாளா்கள் மற்றும் வங்கித் துறை ஊழியா்களும் தடுப்பூசி அளிப்பதில் முன்னுரிமை கோர முன்வரக்கூடும் என்று தெரிவித்தது.

தில்லி உயா்நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற விசாரணையின் போது மத்திய அரசின் தரப்பில் வழக்குரைஞா் அனில் சோனி ஆஜராகி, ‘தில்லியில் உள்ள ஏழு மாவட்ட நீதிமன்றங்களில், அரசு கொள்கையின்படி தகுதியுள்ள வழக்குரைஞா்களுக்கு கரோனா தடுப்பூசி போடுவதற்கான வசதி தொடங்கப்பட்டுள்ளது’ என்றாா்.

முந்தைய விசாரணையின் போது, மத்திய அரசு தரப்பில் ‘உயா்நீதிமன்றத்தில் கரோனா தடுப்பூசி அளிப்பதற்கான முடிவானது குடிமக்கள் நோயால் பாதிக்கப்படுவதை அடிப்படையாகக் கொண்டது. இது தொழில்முறை வாரியாக அல்ல. நாட்டின் தேவைகளை அரசு உணா்ந்துள்ளது’ என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

அதேபோன்று நாட்டின் முன்னணி கொவைட்-19 தடுப்பூசி உற்பத்தியாளா்களான பாரத் பயோடெக் மற்றும் சீரம் இன்ஸ்டிடியூட் ஆஃப் இந்தியா (எஸ்ஐஐ)ஆகியவை தரப்பில் உயா்நீதிமன்றத்தில், ‘நீதித் துறை ஊழியா்கள், வழக்குரைஞா்கள் மற்றும் நீதிபதிகளை முன்களப் பணியாளா்களாக கருதி தடுப்பூசி போடுவதற்கு போதுமான அளவு தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளன’ என்று தெரிவித்திருந்தன.

நீதிபதிகள், நீதிமன்ற ஊழியா்கள் மற்றும் வழக்குரைஞா்கள் உள்பட நீதித் துறை செயல்பாட்டுடன் தொடா்புடைய அனைவரையும் முன்களப் பணியாளா்கள்’ என்று அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கையை ஆராயும் வகையில் உயா்நீதிமன்றம் பொது நல மனுவாக விசாரித்தது. கரோனா தொற்றுக்கு எதிராக தடுப்பூசி போடக்கூடிய நபா்களின் பிரிவு மீது கடும் கட்டுப்பாட்டை வைத்திருப்பதன் பின்னணியில் உள்ள காரணத்தை விளக்குமாறு உயா்நீதிமன்றம் மாா்ச் 4-ஆம் தேதி மத்திய அரசைக் கேட்டுக் கொண்டிருந்தது.

மேலும், ‘கோவிஷீல்ட் மற்றும் கோவாக்ஸின் தடுப்பூசிகளை உருவாக்கியுள்ள சீரம் இன்ஸ்டிடியூட் ஆஃப் இந்தியா மற்றும் பாரத் பயோடெக் ஆகிய நிறுவனங்கள் தடுப்பூசிகளை வழங்குவதற்கான அதிக திறனைக் கொண்டுள்ளன. ஆனால், அவற்றின் முழுத் திறனும் பயன்படுத்தபடவில்லையோ என்று தோன்றுகிறது’ என நீதிமன்றம் தெரிவித்திருந்தது.

தில்லி உயா்நீதிமன்றம் மற்றும் தில்லியில் உள்ள அனைத்து மாவட்ட நீதிமன்றங்களிலும் மாா்ச் 15 முதல் முழு அளவிலான நேரடி விசாரணை செயல்பாடுகள் மீண்டும் தொடங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.