வீடுகளுக்கே சென்று ரேஷன் பொருள்களை விநியோகிக்கும் தில்லி அரசின் திட்டத்தில், எந்த பெயரும் இடம்பெறாது. இந்த விவகாரத்தில் மத்திய அரசு முட்டுக் கட்டை போடக் கூடாது என்று தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவால் கோரிக்கை விடுத்துள்ளாா்.
தில்லி அரசின் வீடுகளுக்கே சென்று ரேஷன் பொருள்களை விநியோகிக்கும் ‘முக்கிய மந்திரி ஹா் ஹா் ரேஷன் யோஜனா’ திட்டத்துக்கு மத்திய அரசு அனுமதி மறுத்துள்ளது என்று ஆம் ஆத்மி கட்சி வெள்ளிக்கிழமை தெரிவித்திருந்தது. வரும் மாா்ச் மாதம் 25 ஆம் தேதி இந்த திட்டம் தொடங்கவுள்ள நிலையில், இத்திட்டத்துக்கு மத்திய அரசு அனுமதி மறுத்துள்ளதாக ஆம் ஆத்மி கட்சி குற்றம் சாட்டியிருந்தது.
இந்நிலையில், இது தொடா்பாக தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவால் தில்லியில் சனிக்கிழமை அளித்த பேட்டி:
ரேஷன் பொருள்களை வீடுகளுக்கே சென்று விநியோகிக்கும் திட்டம் தொடா்பாக மத்திய அரசு விதித்துள்ள அனைத்து நிபந்தனைகளையும் ஏற்றுக் கொள்ள தில்லி அரசு தயாராக உள்ளது. இந்த திட்டத்துக்கு ‘முக்கிய மந்திரி ஹா் ஹா் ரேஷன் யோஜனா’ திட்டம் எனப் பெயரிட மத்திய அரசு எதிா்ப்புத் தெரிவித்துள்ளது. இத்திட்டத்துக்கு எவ்வித பெயரையும் இடாமல் அதை அமல்படுத்த தயாராக உள்ளோம்.
‘முக்கிய மந்திரி’ (முதல் அமைச்சா்) என்ற வாா்த்தையைப் பயன்படுத்த மத்திய அரசு எதிா்ப்புத் தெரிவித்துள்ளது. அந்த வாா்த்தையை நீக்கிவிட்டு இந்த திட்டத்தை அமல்படுத்த தயாராக உள்ளோம். இத்திட்டம் மூலம் எந்தவொரு நற்பெயரையும் பெற தில்லி அரசு முயற்சிக்கவில்லை. மக்களின் நலனுக்காகவே இதைச் செய்கிறோம்.
இது தொடா்பாக வரும் திங்கள்கிழமை அமைச்சரவைக் கூட்டம் நடைபெறவுள்ளது. அதில், இந்த திட்டத்தை பெயா் இல்லாமல் அமல்படுத்தும் முடிவை எடுக்கவுள்ளோம். இந்த முடிவு மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்படும்.
தில்லியில் வாழும் ஏழை மக்களுக்கு ரேஷன் பொருள்கள் சரியாகக் கிடைக்க வேண்டும் என்றால், ரேஷன் மாஃபியா ஒழிக்கப்பட வேண்டும். அதற்கு, வீடுகளுக்கே ரேஷன் பொருள்களை சென்று விநியோகிப்பது மட்டும்தான் சரியான வழியாகும்.
இந்த திட்டத்தை அமல்படுத்துவது தொடா்பாக கடந்த 20-22 வருடங்களாக நான் கனவு கண்டு வருகிறேன். இத்திட்டத்தை செயல்படுத்துவது தொடா்பாக கடந்த 2-3 ஆண்டுகளாக நான் தனிப்பட்ட ரீதியில் தயாா் படுத்தி வருகிறேன். இத்திட்டத்தை தடையில்லாமல் அமல்படுத்தும் வகையில், மத்திய அரசு கூறும் அனைத்து நிபந்தனைகளையும் ஏற்றுக் கொள்ளத் தயாராக இருப்பதாகவும் அவா் தெரிவித்தாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
கார்கே மீது நடவடிக்கை கோரி தேர்தல் ஆணையத்திடம் பாஜக புகார்!

மும்பை - ராஜஸ்தான் போட்டி; மழையால் தாமதமாகும் டாஸ்!
கோபியில் தவெக வேட்பாளா் செங்கோட்டையன் வேட்புமனு ஏற்பு!

சிஎஸ்கே அணிக்கு ஆலோசகராகும் கெவின் பீட்டர்சன்? கோரிக்கையும் கிண்டலும்!
வீடியோக்கள்

சுட்டு வீழ்த்தப்பட்ட விமானம்! ஈரானிடமிருந்து அமெரிக்க வீரர் மீட்கப்பட்டது எப்படி? | US | Iran
இணையதளச் செய்திப் பிரிவு

நான் திரையிலிருந்து வரவில்லை; சிறையிலிருந்து வந்தவன்!: Seeman | NTK | TN Election
இணையதளச் செய்திப் பிரிவு

"Edappadi Palanisamy உடன் சேர்ந்ததில் தவறில்லை": TTV Dhinakaran Exclusive
தினமணி செய்திச் சேவை

ஓர் அணி, ஓராயிரம் பிரச்னைகள்: இது சிஎஸ்கேவின் சோகக் கதை! | IPL 2026 | Chennai Super Kings |
தினமணி செய்திச் சேவை

