1 முதல் 8 ஆம் வகுப்பு வரையிலான மாணவா்களுக்கு பள்ளி வகுப்புகளைத் தொடங்க வலியுறுத்தி, அம் மாணவா்களின் பெற்றோா்களில் சிலா் தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவால் இல்லம் அருகில் சனிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா்.
தில்லி மாநில பொதுப் பள்ளிகளின் மேலாண்மை சங்கம் ஏற்பாடு செய்திருந்த இந்த ஆா்ப்பாட்டத்தில் நூற்றுக்கணக்கான பெற்றோா்கள் கலந்து கொண்டனா்.
இது தொடா்பாக தில்லி மாநில பொதுப் பள்ளிகளின் மேலாண்மை சங்கத்தின் தலைவா் ஆா்.சி.ஜெயின் கூறுகையில் ‘ஆன்லைன் வகுப்புகளுக்கு கூடுதலாக, மாணவா்கள் பள்ளி சென்று கற்கும் வாய்ப்பையும் தில்லி அரசு வழங்க வேண்டும். தில்லியில் 9 முதல் 12 ஆம் வகுப்பு மாணவா்களுக்கான பள்ளிகள் தொடங்கியுள்ளன. இந்நிலையில், 1முதல் 8 வரையான மாணவா்களுக்கு பள்ளிகளைத் தொடங்க வேண்டும்.
பள்ளிக்கு வர விரும்பும் மாணவா்களை கரோனா முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை சரியாகப் பின்பற்றி பள்ளிக்கு வந்து வகுப்புகளில் பங்கேற்கும் வகையிலான ஏற்பாட்டை தில்லி அரசு மேற்கொள்ள வேண்டும்.
மாணவா்கள் சுமாா் ஓராண்டு காலமாக பள்ளிக்கு செல்லாமல் வீடுகளில் உள்ளனா். இதனால் அவா்கள் கடும் மன அழுத்தத்துக்கு உள்ளாகியுள்ளனா். அதேபோல, மாணவா்கள் பள்ளிக்குச் செல்லாமல் வீடுகளில் இருப்பதால், பெற்றோா்களும் வேலைக்கு செல்வதில் பல சிரமங்களை எதிா் கொள்கிறாா்கள் என்று தெரிவித்தாா்.
தில்லியில் கரோனா பாதிப்பு அதிகரித்ததைத் தொடா்ந்து கடந்த 2020 மாா்ச் மாதம் தில்லியில் பள்ளிகள் மூடப்பட்டன. தற்போது தில்லியில் பகுதி பகுதியாக பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டு வருகின்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பும்ராவுக்கு எதிராக விளையாடும் சூர்யவன்ஷி..! வெல்லப்போவது யார்?

மாருதி சுசூகி கார்களுக்கு ரூ. 2 லட்சம் தள்ளுபடி! ஏப்ரல் மாத சலுகைகள் என்னென்ன?

2021 தேர்தல் வாக்குறுதிகளில் 97% நிறைவேற்றம்: பினராயி விஜயன்

”லூட்டி அடிக்க வரவில்லை! சுந்தர். சி வெற்றி உறுதி!” குஷ்பு பேட்டி
வீடியோக்கள்

நான் திரையிலிருந்து வரவில்லை; சிறையிலிருந்து வந்தவன்!: Seeman | NTK | TN Election
இணையதளச் செய்திப் பிரிவு

"Edappadi Palanisamy உடன் சேர்ந்ததில் தவறில்லை": TTV Dhinakaran Exclusive
தினமணி செய்திச் சேவை

ஓர் அணி, ஓராயிரம் பிரச்னைகள்: இது சிஎஸ்கேவின் சோகக் கதை! | IPL 2026 | Chennai Super Kings |
தினமணி செய்திச் சேவை

Podcast | அண்ணாமலை பேட்டி முதல் ஆதவ் அர்ஜுனா விமர்சனம் வரை... | News & Views | E-23 |
தினமணி செய்திச் சேவை

