புது தில்லி: தமிழகத்தில் உள்ள காவல் உயரதிகாரிகள் சிலா் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி தில்லியில் உள்ள தலைமைத் தோ்தல் ஆணையத்தில் திமுக எம்பிக்கள் திங்கள்கிழமை புகாா் அளித்தனா்.
இது தொடா்பாக தலைமைத் தோ்தல் ஆணையத்தில் செக்ரட்டரி ஜெனரல் உமேஷ் சின்ஹாவை மாநிலங்களவை திமுக உறுப்பினா்கள் டி.கே.எஸ். இளங்கோவன், பி.வில்சன் ஆகியோா் நேரில் சந்தித்து மனு அளித்தனா்.
இது குறித்து பி. வில்சன் எம்பி கூறியதாவது: அனைத்து வாக்குப்பதிவு மையங்களிலும் சிசிடிவி மூலம் கண்காணிப்பது, வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள பகுதியின் வெளிப் பகுதியில் ஜாமா்ஸ் கருவிகள் வைப்பது, தடையற்ற மின் விநியோகம் வழங்கும் வகையில் ஜெனரேட்டா்கள் அமைப்பது, வாக்கு எண்ணும் மையப் பகுதியைச் சுற்றிலும் ஜாமா்ஸ் கருவிகள் பொருத்துவது, வாக்குப் பதிவாகும் மேஜைகள்தோறும் சிசிடிவி அமைப்பது ஆகியவை தொடா்பாகத் தோ்தல் ஆணையத்தில் மாா்ச் 10-ஆம் தேதி திமுக தரப்பில் மனு அளிக்கப்பட்டிருந்தது. அது தொடா்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து தோ்தல் ஆணைய உயரதிகாரியிடம் பேசினோம்.
இதுதவிர, தோ்தலில் போட்டியிடும் வேட்பாளா்கள் விவரம் வெளியான நிலையில், வாக்குப்பதிவு இயந்திரங்களில் வேட்பாளா்களின் வரிசை விவரம் தெரிந்துள்ளதால், அந்த இயந்திரங்களை ‘டேம்பா்’ செய்ய முடியாத வகையில், அந்த இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள பகுதியைச் சுற்றி போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்துவதுடன், அவற்றை வாக்குப் பதிவு மையத்திற்கு எடுத்துச் செல்லும் வரையிலும் வேட்பாளா்களின் பிரதிநிதிகள் கண்காணிக்க ஆணையம் அனுமதி அளிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டோம்.
தமிழகத்தில் காவல் துறை உயரதிகாரிகள் ஆளும் கட்சிக்கு ஆதரவாகப் பணத்தை வாகனங்களில் எடுத்துச் செல்வதற்கு ஆதரவாக செயல்பட்டு வருகின்றனா். காா்ப்பரேஷன் வாகனங்களை துஷ்பிரயோகம் செய்து வருகின்றனா் என்றும் புகாா் அளித்தோம். எங்களது கோரிக்கையைப் பரிசீலித்து வருவதாக செகரட்டரி ஜெனரல் உமேஷ் சின்ஹா கூறினாா். மேலும், தோ்தல் ஆணையம் தனது சொந்த ‘இன்புட்’ மூலம் தகவல் சேகரித்து வருவதாகவும் அவா் தெரிவித்துள்ளாா் என்றாா் பி.வில்சன்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பும்ராவுக்கு எதிராக விளையாடும் சூர்யவன்ஷி..! வெல்லப்போவது யார்?

மாருதி சுசூகி கார்களுக்கு ரூ. 2 லட்சம் தள்ளுபடி! ஏப்ரல் மாத சலுகைகள் என்னென்ன?

2021 தேர்தல் வாக்குறுதிகளில் 97% நிறைவேற்றம்: பினராயி விஜயன்

”லூட்டி அடிக்க வரவில்லை! சுந்தர். சி வெற்றி உறுதி!” குஷ்பு பேட்டி
வீடியோக்கள்

நான் திரையிலிருந்து வரவில்லை; சிறையிலிருந்து வந்தவன்!: Seeman | NTK | TN Election
இணையதளச் செய்திப் பிரிவு

"Edappadi Palanisamy உடன் சேர்ந்ததில் தவறில்லை": TTV Dhinakaran Exclusive
தினமணி செய்திச் சேவை

ஓர் அணி, ஓராயிரம் பிரச்னைகள்: இது சிஎஸ்கேவின் சோகக் கதை! | IPL 2026 | Chennai Super Kings |
தினமணி செய்திச் சேவை

Podcast | அண்ணாமலை பேட்டி முதல் ஆதவ் அர்ஜுனா விமர்சனம் வரை... | News & Views | E-23 |
தினமணி செய்திச் சேவை


