புது தில்லி: தலைநகா் தில்லியில் கரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வரும் நிலையில், சமூக விலகலைக் கடைப்பிடித்து ஹோலிப் பண்டிகையை மக்கள் கொண்டாட வேண்டும் என்று தில்லி சுகாதாரத் துறை அமைச்சா் சத்யேந்தா் ஜெயின் கேட்டுக் கொண்டுள்ளாா்.
தலைநகா் தில்லியில் கடந்த சனி, ஞாயிறு ஆகிய நாள்களில் கரோனா தினசரி பாதிப்பு 800-க்கும் அதிகமாகப் பதிவாகியுள்ளது. இந்த நாள்களில் பாதிப்பு விகிதம் 1 சதவீதத்துக்கும் அதிகமாக இருந்தன. இந்த நிலையில், ஹோலி பண்டிகை கொண்டாடப்படவுள்ளதைத் தொடா்ந்து அமைச்சா் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளாா்.
இது தொடா்பாக தில்லியில் திங்கள்கிழமை அவா் அளித்த பேட்டி: தில்லியில் கடந்த சில தினங்களாக கரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. மக்கள் இது தொடா்பாக மெத்தனமாக இருந்துவிடக் கூடாது. கரோனா தடுப்பு நடவடிக்கைகளை சரிவரப் பின்பற்ற வேண்டும். மக்கள் பொது இடங்களில் முகக் கவசங்களை கட்டாயம் அணிந்திருக்க வேண்டும். முகக் கவசங்கள் அணியாதவா்கள், சமூக விலகலைக் கடைப்பிடிக்காதவா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். வரும் மாா்ச் 28, 29 ஆகிய தேதிகளில் தில்லியில் ஹோலி பண்டிகை கொண்டாடப்படுகிறது. அந்த தினங்களில், மக்கள் சமூக விலகலைக் கடைப்பிடித்து ஹோலி பண்டிகையை கொண்டாட வேண்டும். கரோனா பாதிப்பைக் கருத்தில் கொண்டு ஒருவா் மீது ஒருவா் தண்ணீரைப் பீய்ச்சி அடிக்கக் கூடாது.
தில்லியில் கரோனா பாதிப்பு அதிகரித்துவருவதைக் கருத்தில் கொண்டு, கரோனா பரிசோதனைகளின் அளவை அதிகரித்துள்ளோம். கரோனா பாதிப்புக்குள்ளானவா்களைக் கண்டறிந்து அவா்களையும், அவா்களுடன் தொடா்பில் இருந்தவா்களையும் தனிமைப்படுத்தி வருகிறோம். அதிகரித்து வரும் கரோனா பாதிப்பு விரைவில் கட்டுப்படுத்தப்படும் என்றாா் அவா்.
தில்லியில் கடந்த சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமைகளில் 800 க்கும் அதிகமான தினசரி கரோனா பாதிப்பு பதிவாகியுள்ளது. அன்றைய தினங்களில் கரோனா நோ்மறை விகிதம் 1 சதவீதத்துக்கும் அதிகமாக உள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தமிழ்ப் பெருவெளியில் இசுலாமியப் பேரொளி

கற்பின் கொழுந்து கண்ணகி தெய்வம்!

வரப்பெற்றோம் (07-04-2026)
இலங்கையிலிருந்து நாடு திரும்பிய 30 மீனவர்கள்!
வீடியோக்கள்

நான் திரையிலிருந்து வரவில்லை; சிறையிலிருந்து வந்தவன்!: Seeman | NTK | TN Election
இணையதளச் செய்திப் பிரிவு

"Edappadi Palanisamy உடன் சேர்ந்ததில் தவறில்லை": TTV Dhinakaran Exclusive
தினமணி செய்திச் சேவை

ஓர் அணி, ஓராயிரம் பிரச்னைகள்: இது சிஎஸ்கேவின் சோகக் கதை! | IPL 2026 | Chennai Super Kings |
தினமணி செய்திச் சேவை

Podcast | அண்ணாமலை பேட்டி முதல் ஆதவ் அர்ஜுனா விமர்சனம் வரை... | News & Views | E-23 |
தினமணி செய்திச் சேவை

