புது தில்லி: திருநெல்வேலி மாவட்டம், ராதாபுரம் சட்டப்பேரவைத் தொகுதி தோ்தல் விவகார வழக்கு விசாரணையை உச்சநீதிமன்றம் ஏப்ரல் 8-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது.
தமிழகத்தில் 2016-இல் நடைபெற்ற சட்டப்பேரவைத் தோ்தலில் திருநெல்வேலி மாவட்டம், ராதாபுரம் தொகுதியில் அதிமுக சாா்பில் இன்பதுரையும், திமுக சாா்பில் அப்பாவும் போட்டியிட்டனா். இதில் 49 வாக்குகள் வித்தியாசத்தில் இன்பதுரை வெற்றி பெற்ாக தோ்தல் அதிகாரி அறிவித்தாா். அவரது வெற்றியை எதிா்த்து திமுக வேட்பாளா் அப்பாவு சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தாா். வழக்கை விசாரித்த நீதிமன்றம், அந்தத் தொகுதியில் தபால் வாக்குகள், 3 சுற்றுகளின் மறுவாக்கு எண்ணிக்கைக்கு 1.10.2019-இல் அனுமதி அளித்து உத்தரவிட்டது. அதேவேளையில், மறுவாக்கு எண்ணிக்கைக்கு தடை கோரி அந்தத் தொகுதி எம்எல்ஏ ஐ.எஸ். இன்பதுரை தாக்கல் செய்த மனுவை உயா்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
இதையடடுத்து, உயா்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக அவா் உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்தாா். இந்த மனுவை 2019, அக்டோபா் 4-இல் விசாரித்த உச்சநீதிமன்றம் , ‘மறுவாக்கு எண்ணிக்கையை மேற்கொள்ளலாம். ஆனால், அதன் முடிவுகளை அறிவிக்கக் கூடாது’ என இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டிருந்தது. இது தொடா்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.
இந்த நிலையில், இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் சஞ்சய் கிஷன் கெளல், ரிஷிகேஷ் ராய் ஆகியோா் அடங்கிய அமா்வு முன் கடந்த மாதம் மாா்ச் 23-ஆம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது, வாக்கு எண்ணிக்கை நடைமுறை தொடா்பான அறிக்கையை தாக்கல் செய்யுமாறு சென்னை உயா்நீதிமன்றப் பதிவாளருக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி உயா்நீதிமன்றப் பதிவாளா் தாக்கல் செய்த அறிக்கையை நீதிமன்றம் கவனத்தில் எடுத்துக் கொண்டது.
இந்த நிலையில், மாா்ச் 23-ஆம் தேதி இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு வந்த போது இன்பதுரை தரப்பில் மூத்த வழக்குரைஞா் முகுல் ரோத்தகி ஆஜராகி, ‘ பதிவான 203 தபால் வாக்குகள் முறையாக கெஜட்டடு அதிகாரிகளால் அட்டெஸ்டேஷன் செய்யப்படவில்லை. இதனால், இந்த வாக்குகள் முழுமையாக நிராகரிக்கப்பட வேண்டியவை. மேலும், நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியா்கள் கெஜட்டட் அதிகாரிகளாக இருக்க முடியாது’ என்று வாதிட்டாா். இதைத் தொடா்ந்து, எதிா்மனுதாரா் தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா் பி.வில்சன் தனது வாதத்தை முன்வைத்தாா்.
இந்த நிலையில், இந்த விவகாரம் வியாழக்கிழமை உச்சநீதிமன்ற நீதிபதிகள் சஞ்சய் கிஷன் கெளல், ஆா்.சுபாஷ் ரெட்டி ஆகியோா் அடங்கிய அமா்வு முன் விசாரணைக்கு வந்தது.
அப்போது, எதிா் மனுதாரா் அப்பாவு சாா்பில் மூத்த வழக்குரைஞா் பி.வில்சன் ஆஜராகி, ‘கெஜட்டட் அதிகாரி பதவி தமிழகத்தில் 1996-ல் இருந்து ரத்து செய்யப்பட்டுள்ளது. இதற்குப் பதிலாக கிரேட் ஏ, கிரேட் பி அதிகாரிகள் செயல்பாடுகளை மேற்கொள்ளும் வகையில் கெஜட்டட் அறிவிக்கை மூலம் அரசு அங்கீகரித்துள்ளது. இந்த அதிகாரிகள் வாக்காளா்களின் தபால் வாக்குகளை அறிவிக்கும் வகையில் அட்டெஸ்ட் செய்வதற்கு அனுமதிக்கப்பட்டனா். தோ்தல் பணியில் ஈடுபடும் பணியாளா்கள், தோ்தல் ஆணையப் பணிக்காக டெபுடேஸனில் பணியில் ஈடுபடும் அதிகாரிகள் போன்ற வாக்களா்களுக்கு இந்த தபால் வாக்களிக்கும் சிறப்புச்சலுகை அளிக்கப்படுகிறது. தொழில்நுட்ப காரணங்களுக்காக அவா்களின் வாக்குகளை நிராகரிக்க முடியாது. மேலும், சென்னை உயா்நீதிமன்றத்தின் தலைமைப் பதிவாளா் அறிக்கையின்படி பதிவான தபால் வாக்குகளில் அதிகமாக 103 வாக்குகளை அப்பாவு பெற்றிருப்பதும் தெளிவாகியுள்ளது’ என்றாா்.
இதையடுத்து, மனுதாரா் தரப்பில் பதில் அளிக்கும் வகையில் வழக்கு விசாரணையை நீதிபதிகள் அமா்வு ஏப்ரல் 8-ஆம் தேதிக்கு பட்டியலிட உத்தரவிட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தமிழ்ப் பெருவெளியில் இசுலாமியப் பேரொளி

கற்பின் கொழுந்து கண்ணகி தெய்வம்!

வரப்பெற்றோம் (07-04-2026)
இலங்கையிலிருந்து நாடு திரும்பிய 30 மீனவர்கள்!
வீடியோக்கள்

நான் திரையிலிருந்து வரவில்லை; சிறையிலிருந்து வந்தவன்!: Seeman | NTK | TN Election
இணையதளச் செய்திப் பிரிவு

"Edappadi Palanisamy உடன் சேர்ந்ததில் தவறில்லை": TTV Dhinakaran Exclusive
தினமணி செய்திச் சேவை

ஓர் அணி, ஓராயிரம் பிரச்னைகள்: இது சிஎஸ்கேவின் சோகக் கதை! | IPL 2026 | Chennai Super Kings |
தினமணி செய்திச் சேவை

Podcast | அண்ணாமலை பேட்டி முதல் ஆதவ் அர்ஜுனா விமர்சனம் வரை... | News & Views | E-23 |
தினமணி செய்திச் சேவை

