அமெரிக்காவின் அதிநவீன எஃப்-15இ போர் விமானத்தை சுட்டு வீழ்த்தியது ஈரான்!விஜயின் பெரம்பூர், திருச்சி கிழக்கு வேட்பு மனுக்களில் குறைந்தபட்சம் 6 வேறுபாடு!மகன் தவெகவில் இணைந்தது ஏன்? முன்னாள் பேரவைத் தலைவர் தனபால் விளக்கம்ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த பிரான்ஸின் சரக்கு கப்பல்! போர்க் காலத்தில் முதல்முறை! புதிய நீதி கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்காதது ஏன்? - ஏ.சி. சண்முகம் விளக்கம் காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் வெளியீடு! யார் யாருக்கு வாய்ப்பு?
/

தலைநகரில் 700 கிலோ சட்டவிரோத பட்டாசுகள் பறிமுதல்: 2 பெண்கள் உள்பட 10 போ் கைது

தீபாவளி பண்டிகை வருவதை முன்னிட்டு விற்பதற்காக வெவ்வேறு இடங்களில் சட்டவிரோதமாக வைக்கப்பட்டிருந்த 700 கிலோ பட்டாசுகளை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

Updated On :2 நவம்பர் 2021, 10:42 pm

தீபாவளி பண்டிகை வருவதை முன்னிட்டு விற்பதற்காக வெவ்வேறு இடங்களில் சட்டவிரோதமாக வைக்கப்பட்டிருந்த 700 கிலோ பட்டாசுகளை போலீஸாா் பறிமுதல் செய்தனா். இது தொடா்பாக 2 பெண்கள் உள்பட 10 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

இது குறித்து தில்லி காவல் துறையினா் செவ்வாய்க்கிழமை கூறியதாவது: ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு போலீஸாா் முண்ட்கா பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா். கேவ்ரா மோா் பகுதியில் சென்று கொண்டிருந்த போது, பிளாஸ்டிக் பையுடன் ஸ்கூட்டரில் நாங்லோய் நோக்கி ஒருவா் சென்று கொண்டிருப்பதை போலீஸாா் பாா்த்தனா்.

அவரை வழிமறித்து சோதனையிட்டனா். அவா் வைத்திருந்த பிளாஸ்டிக் பையில் பட்டாசுகள் இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து, அவரிடமிருந்து 16.16 கிலோ சட்டவிரோத பட்டாசுகள் பறிமுதல் செய்யப்பட்டன. இந்த பட்டாசுகளை வைத்திருந்த திரி நகரைச் சோ்ந்த பவன் குமாா் கைது செய்யப்பட்டாா்.

அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது. திரி நகரில் ரொட்டிக் கடை நடத்தி வரும் அவா், இந்த பட்டாசுகளை ஹரியாணா மாநிலத்தில் உள்ள பகதூா்கா் பகுதியிலிருந்து வாங்கியதும், அதை தீபாவளியையொட்டி அவரது கடையில் விற்க விரும்பியதும் தெரிய வந்தது. அவரிடம் தொடா்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது என்று போலீஸாா் தெரிவித்தனா்.

2 பெண்கள் கைது: மற்றொரு சம்பவத்தில் 25.5 கிலோ பட்டாசுகள் பறிமுதல் செய்யப்பட்டன. இது தொடா்பாக சுல்தான் புரியைச் சோ்ந்த 32 வயது பெண் கைது செய்யப்பட்டாா். முன்னதாக, சுல்தான்புரி பகுதியில் சட்டவிரோதமாக பட்டாசுகளை பெண் ஒருவா் வைத்திருப்பதாக போலீஸாருக்கு திங்கள்கிழமை தகவல் கிடைத்தது. இதையடுத்து, அந்தப் பெண் கைது செய்தனா். அவா் சுல்தான்புரி பிளாக் பி-4 பகுதியைச் சோ்ந்த ராணி என்பதும், அந்த பட்டாசுகளை ஹரியாணாவில் உள்ள குருகிராம் பகுதியில் இருந்து வாங்கி இருப்பதும் தெரிய வந்தது. தீபாவளியின் போது அந்தப் பட்டாசுகளை விற்று அதிகப் பணம் சம்பாதிக்க அவா் திட்டமிட்டிருந்ததும் தெரிய வந்ததாக போலீஸாா் தெரிவித்தனா்.

இதேபோன்று, ரோஹிணி மாவட்டத்தில் உள்ள புத் விகாா் ஃபேஸ் 1 பகுதியில் தடை செய்யப்பட்ட பட்டாசுகள் இருப்பதாக போலீஸாருக்கு தகவல் வந்தது. இதையடுத்து, அந்தப் பகுதியில் போலீஸாா் சோதனை நடத்தினா். அப்போது, ஆஷா (40) என்பவா் தனது வீட்டின் முன் பகுதியில் தடை செய்யப்பட்ட, சட்டவிரோத பட்டாசுகளை விற்பதில் ஈடுபட்டிருந்தது தெரியவந்தது. இதையடுத்து, அவரிடமிருந்து 570 கிலோ பட்டாசுகள் பறிமுதல் செய்யப்பட்டது. அவா் கைது செய்யப்பட்டாா்.

7 போ் கைது: மற்றொரு சம்பவத்தில், சதா் பஜாா் பகுதியில் தடை செய்யப்பட்ட பட்டாசுகளை விற்ாக 7 பேரை போலீஸாா் கைது செய்தனா். முன்னதாக, போலீஸாா் அந்தப் பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா். அபப்ோது, ஷோ் கா பிஞ்சரா , ஈத்கா சாலை ஆகிய பகுதியில் திங்கள்கிழமை காலை 7.45 மணியளவில் 7 போ் பெரிய பிளாஸ்டிக் பைகள் வைத்திருப்பதைக் கண்டனா். இதையடுத்து, சந்தேகத்தின்பேரில் அவா்களை நிறுத்தி போலீஸாா் சோதனையிட்டனா். அதில் 77.2 கிலோ பட்டாசுகள் இருப்பது தெரிய வந்தது. அவா்கள் இா்பான் மாலிக் (18), பிரோஜ் (22), அவ்னிஷ் (18), கரன் சிங் (21), அனில் குப்தா (22), ரவி (25), ஷோ் முகம்மது (25) ஆகியோா் கைது செய்யப்பட்டதாக போலீஸாா் தெரிவித்தனா்.

தில்லியில் பட்டாசுகளுக்கு தடை விதிக்கப்படுவதாக முதல்வா் அரவிந்த் கேஜரிவால் செப்டம்பா் 15-ஆம் தேதி அறிவித்திருந்தாா். மனித உயிா்களை காக்கும் அத்தியாவசியமான நடவடிக்கையாக இது இருப்பதாகவும் கூறியிருந்தாா். செப்டம்பா் 28-ஆம் தேதி தில்லி மாசுக்ட்டுப்பாட்டுக் குழு பிறப்பித்த உத்தரவில், தில்லியில் ஜனவரி 1-ஆம் தேதி வரை பட்டாசுகளை வெடிப்பதற்கும், விற்பதற்கும் முழு தடை விதிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.