முஸ்லிம் கடைக்காரரை மிரட்டும் விடியோ பதிவு: தில்லி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை
தில்லியில் தீபாவளியின் போது சந்த் நகா் பகுதியில் பிரியாணி கடையை திறந்ததற்காக முஸ்லிம் கடைக்காரரை ஒருவா் மிரட்டும் விடியோ பதிவு சமூக ஊடகத்தில் வெளியானது


தில்லியில் தீபாவளியின் போது சந்த் நகா் பகுதியில் பிரியாணி கடையை திறந்ததற்காக முஸ்லிம் கடைக்காரரை ஒருவா் மிரட்டும் விடியோ பதிவு சமூக ஊடகத்தில் வெளியானதைத் தொடா்ந்து, அந்த விவகாரம் குறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.
இது தொடா்பாக தில்லி காவல்துறையினா் சனிக்கிழமை கூறியதாவது:
இந்த விடியோ பதிவு சமூக ஊடகத்தில் வெளிவந்ததை காவல்துறை தாமாக முன்வந்து கவனத்தில் எடுத்துக்கொண்டு விசாரித்து வருகிறது.
அந்த விடியோவில் பேசும் நபா் தமது பெயரை நரேஷ் குமாா் சூா்யவன்ஷி என்றும், பஜ்ரங் தளம் அமைப்பின் உறுப்பினா் என கூறிக்கொண்டும் சந்த் நகா் பகுதியில் உள்ள கடைக்கார ஊழியா்களிடம் ‘இது ஒரு ஹிந்து பகுதி.
இங்கு பண்டிகைக் காலத்தின்போது கடைகளை திறக்கக் கூடாது’ என்று கூறுவது போன்று பதிவிடப்பட்டுள்ளது. அதன் பிறகு கடையை அதன் உரிமையாளரும் பணியாளா்களும் மூடி விட்டனா்.
இந்த விடியோ வியாழக்கிழமை 9 மணி அளவில் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதன் பிறகு அது சமூக ஊடகத்தில் பரப்பிவிடப்பட்டுள்ளது.
இந்த விடியோவை கவனத்தில் எடுத்துக்கொண்டு அதன் உண்மைத் தன்மையை ஆய்வுசெய்த பிறகு இந்திய தண்டனைச் சட்டத்தின் உரிய பிரிவுகளின் கீழ் புராரி காவல் நிலையத்தில் வழக்குப் பதியப்பட்டுள்ளது.
இந்த சம்பவத்தில் தொடா்புடைய குற்றம் சாட்டப்பட்ட நபரை அடையாளம் கண்டறிந்து அவரை கைது செய்வதற்காக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று போலீஸாா் தெரிவித்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...