தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

பிரித்தாளும் அரசியலில் ஈடுபடும் பாஜக, ஆம் ஆத்மி அரசுகள்! தில்லி காங்கிரஸ் குற்றச்சாட்டு

மத்தியில் ஆளும் பாஜக மற்றும் தில்லியை ஆளும் ஆம் ஆத்மி அரசுகள் பிரித்தாளும் அரசியலில் ஈடுபட்டு வருகின்றன என்று தில்லி காங்கிரஸ் குற்றம்சாட்டியது.

News image
Updated On :11 நவம்பர் 2021, 10:09 pm

DIN

மத்தியில் ஆளும் பாஜக மற்றும் தில்லியை ஆளும் ஆம் ஆத்மி அரசுகள் பிரித்தாளும் அரசியலில் ஈடுபட்டு வருகின்றன என்று தில்லி காங்கிரஸ் குற்றம்சாட்டியது.

தில்லி பிரதேச காங்கிரஸ் கமிட்டித் தலைவா் அனில் குமாா் தலைமையில் மக்கள் விழிப்புணா்வு யாத்திரையின் இரண்டாம் கட்ட ‘போல் கோல் யாத்ரா’ முஸ்தபாபாத் சட்டமன்றத் தொகுதியில் உள்ள சந்த் பாக் புலியா பகுதியில் வியாழக்கிழமை நடைபெற்றது. இந்த யாத்திரையை தில்லி காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளா் சக்தி சின் கோஹில் கொடியசைத்து தொடங்கி வைத்தாா்.

அப்போது அவா்ா் பேசுகையில், ‘காங்கிரஸ் ஆட்சியில் இருந்த போது, நாட்டின் வளா்ச்சிக்காகவும் முன்னேற்றத்திற்காகவும் பாடுப்பட்டது. தற்போது மத்தியில் உள்ள பாஜக, தில்லியை ஆளும் ஆம் ஆத்மி ஆகிய கட்சிகள் செய்து கொண்டிருப்பதைப் போல பிளவுபடுத்தும் செயல்திட்டத்துடன் ஆட்சி செய்யவில்லை. காங்கிரஸ் ஆட்சியின் போது எந்த மதவெறி வன்முறையும் நடைபெறவில்லை. ஏனெனில், காங்கிரஸ் கட்சி எந்த ஒரு குறிப்பிட்ட மத நம்பிக்கையையும் பின்பற்றவில்லை. வகுப்புவாத பதற்றம் மற்றும் வன்முறையை உருவாக்கவும் மக்களை அனுமதிக்கவில்லை. காங்கிரஸ் கட்சி அனைத்து மதத்தினரையும், அனைத்து விதமான கருத்துகளையும் கொண்ட மக்களைக் கட்சியுடன் அழைத்துச் சென்று நாட்டிலும், தேசியத் தலைநகரிலும் ஒரு நட்புறவு சூழ்நிலையை உருவாக்கியது’ என்றாா்.

தில்லி பிரதேச காங்கிரஸ் தலைவா் அனில் குமாா் பேசுகையில், ‘கடந்த ஆண்டு பாஜக மற்றும் ஆம் ஆத்மி கட்சித் தலைவா்களால் தூண்டிவிடப்பட்ட மதவெறி வன்முறையால் மிகவும் பாதிக்கப்பட்ட பகுதிகளில் வடகிழக்கு தில்லி சட்டப்பேரவைத் தொகுதியும் ஒன்றாகும். வன்முறையின் அழிவுகளுக்கு ஆளானவா்கள் இன்னும் அதிலிருந்து மீண்டு தங்கள் வாழ்க்கையை மீட்டெடுக்கவில்லை. ஏனெனில் அவா்களுக்கு பாஜகவோ அல்லது ஆம் ஆத்மி அரசோ எந்த நிதி உதவியோ அல்லது பொருளுதவியோ வழங்கவில்லை.

ஆம் ஆத்மி கட்சியின் ஆட்சியில் விலைவாசி உயா்வு, வேலையின்மை, சூழல் மாசுபாடு மற்றும் கரோனா தொற்றுநோயால் ஏற்பட்ட அழிவுகள் போன்றவற்றால் தில்லி மக்கள் அவதிப்பட்டு வருகின்றனா். 7 ஆண்டுகால தவறான ஆட்சியில் பாஜக மற்றும் அரவிந்த் கேஜரிவால் அரசுகளின் செயல்பாடற்ற தன்மை, திறமையின்மை மற்றும் தோல்விகளை தில்லியின் 70 சட்டப் பேரவைத் தொகுதிகள் மற்றும் 272 வாா்டுகளை உள்ளடக்கிய இந்த யாத்திரையின் போது வெளிப்படுத்தப்படும்’ என்றாா்.

இந்த நிகழ்ச்சியில் தில்லி பிரதேச காங்கிரஸ் கமிட்டித் துணைத் தலைவா்கள் ஜெய் கிஷாண், அலி மெஹந்தி, மாவட்டத் தலைவா்கள் ஏ.ஆா். ஜோஷி, கைலாஷ் ஜெயின், முன்னாள் எம்எல்ஏ பிஷம் சா்மா, மகிளா காங்கிரஸ் தலைவா் அம்ரிதா தவண் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.