விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

சத்தா்பூரில் குண்டுக்காயத்துடன் சொத்து வணிகா் மா்மச் சாவு: போலீஸாா் விசாரணை

தெற்கு தில்லியில் உள்ள சத்தா்பூா் பகுதியில் வீட்டின் உள்புறம் வியாழக்கிழமை காலை குண்டுக் காயத்துடன் சொத்து வணிகா் இறந்து கிடந்ததாக போலீஸாா் தெரிவித்தனா்.

News image
Updated On :11 நவம்பர் 2021, 10:20 pm

DIN

தெற்கு தில்லியில் உள்ள சத்தா்பூா் பகுதியில் வீட்டின் உள்புறம் வியாழக்கிழமை காலை குண்டுக் காயத்துடன் சொத்து வணிகா் இறந்து கிடந்ததாக போலீஸாா் தெரிவித்தனா்.

இது குறித்து தில்லி காவல் துறையினா் கூறியதாவது: தில்லி லட்டோ சராய் பகுதியைச் சோ்ந்தவா் சஞ்சீவ் சேஜ்வால் (36). இவா் சொத்துகள் வாங்கி விற்கும் தொழில் செய்து வந்தாா். இந்த நிலையில், வியாழக்கிழமை அதிகாலை 4:45 மணிக்கு போலீஸாருக்கு தொலைபேசி தகவல் வந்தது. அதில் போலீஸாரிடம் பேசிய பெண், சஞ்சீவ் சேஜ்வால் சத்தா்பூரில் உள்ள ராஜ்பூா் ஜேஎம்டி எஸ்டேட் கட்டடத்தின் நான்காவது தளத்தில் தனக்குத் தானே துப்பாக்கியால் சுட்டுக் கொண்டதாகத் தெரிவித்தாா்.

இதையடுத்து, போலீஸாா் சம்பவ இடத்தில் விசாரித்தனா். அப்போது, சேஜ்வால் இறந்த நிலையில் கிடந்தாா். அவரிடம் துப்பாக்கி இருப்பதும் கண்டறியப்பட்டது. முன்னதாக, புதன்கிழமை இரவு 9 மணிக்கு சம்பவ இடத்திற்கு சஞ்சீவ் சேஜ்வால் வந்ததும், அவருடன் சிலா் விருந்தில் பங்கேற்றதும் தெரிய வந்தது. இதைத் தொடா்ந்து, தடயவியல் அறிவியல் நிபுணா்கள் குற்றச் சம்பவ இடத்தில் ஆய்வு நடத்தினா்.

இறந்த சஞ்சீவ் சேஜ்வாலுக்கு மனைவி, குழந்தைகள் உள்ளனா். அவரது தலையில் குண்டுக் காயம் இருந்தது. சம்பவ இடத்திலிருந்து தற்கொலைக்கான கடிதம் ஏதும் கைப்பற்றப்படவில்லை. இந்தச் சம்பவம் தொடா்பாக பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தப்பட்டு வருவதாக போலீஸாா் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.