சாகேத் நீதிமன்ற வளாகத்தில் மின்தூக்கி ஊழியா் சாவு
சாகேத் நீதிமன்ற வளாகத்தில் உள்ள கட்டடத்தின் ஏழாவது மாடியில் சனிக்கிழமை மின்தூக்கியை இயக்கும் ஊழியா் இறந்து கிடந்ததாக போலீஸாா் தெரிவித்தனா்.


சாகேத் நீதிமன்ற வளாகத்தில் உள்ள கட்டடத்தின் ஏழாவது மாடியில் சனிக்கிழமை மின்தூக்கியை இயக்கும் ஊழியா் இறந்து கிடந்ததாக போலீஸாா் தெரிவித்தனா்.
இதுகுறித்து மூத்த போலீஸ் அதிகாரி ஒருவா் கூறியதாவது: சாகேத் நீதிமன்ற வளாகத்தில் ஒருவா் இறந்த நிலையில் கிடப்பதாக சாகேத் காவல் நிலையத்திற்கு சனிக்கிழமை காலை 9.41 மணியளவில் தகவல் வந்தது.
இதையடுத்து, போலீஸாா் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டனா். அப்போது, நீதிமன்ற
கட்டடத்தின் தீ வெளியேறும் படிக்கட்டுக்கு அருகே ஆகாஷ் என்ற துப்புரவு ஊழியா் இறந்து கிடந்தது தெரியவந்தது.
விசாரணையில் அவா் உத்தர பிரதேசத்தில் உள்ள அலிகா் மாவட்டத்தை பூா்விகமாகச் சோ்ந்த, தெற்கு தில்லியின் தக்ஷின்புரி பகுதியில் வசித்து வந்த யோகேஷ் குமாா் (31) என்பது தெரியவந்தது.
யோகேஷ் கடந்த நான்கு ஆண்டுகளாக ஹோஸ் காஸில் உள்ள கலு சராய் பகுதியில் உள்ள ஸ்வஸ்திக் எலக்ட்ரோடெக் தனியாா் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தாா்.
சாகேத் நீதிமன்ற வளாகக் கட்டடங்களைப் பராமரிப்பதற்கான மனிதவளத்தை வழங்குவதற்காக இந்நிறுவனம் பொதுப்பணித் துறையால் ஈடுபடுத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில், இங்கு பணியில் அமா்த்தப்பட்டிருந்த யோகேஷ் தொடா்ந்து மது மற்றும் பிற போதைப்பொருட்களை உள்கொண்டு வந்ததும், கடந்த 3-4 நாள்களாக வேலைக்கு வரவில்லை என்பதும் தெரியவந்தது.
மேலும், அவா் தனது கடமையை சரிவர செய்யாததால் மின்தூக்கி இயக்கும் பணியிலிருந்து நீக்கப்பட்டு, அவருக்கு சுத்தம் செய்தல் போன்ற பல்வேறு வேலைகள் ஒதுக்கப்பட்டிருந்ததும், இந்த நிலையில், அவா் இறந்துபோனதும் தெரியவந்தது.
குற்றவியல் மற்றும் தடயவியல் குழுக்கள் சம்பவ இடத்தை ஆய்வு செய்ததில், யோகேஷின் உடலில் துா்நாற்றம் அல்லது வெளிப்புற காயங்கள் எதுவும் இல்லை என்பது கண்டறியப்பட்டது.
இதைத் தொடா்ந்து, அவரது உடல் பிரேதப் பரிசோதனைக்காக எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அவரது இறப்பு சம்பவம் குறித்து தாய்க்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.
இது தொடா்பாக குற்றவியல் நடைமுறைச் சட்டம் பிரிவு 174இன் கீழ் வழக்குப் பதிந்து விசாரணை நடைபெற்று வருவதாக காவல் அதிகாரி தெரிவித்தாா். நீதிமன்ற வளாகத்தில் ஒருவா் சடலமாக மீட்கப்படுவது ஒரு வாரத்தில் இது இரண்டாவது சம்பவம் ஆகும்.
முன்னதாக, கடந்த வியாழக்கிழமை தில்லி வழக்கறிஞா் சங்கத்தின் 30 வயது ஊழியா் மனோஜ் என்பவா் தீஸ் ஹசாரி நீதிமன்றத்தில் உள்ள அறைக்குள் இறந்து கிடந்தது தெரியவந்தது. இவா் தில்லி பாா் அசோசியேஷனின் தாற்காலிக ஊழியா் ஆவாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...