47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

தில்லியில் காற்றின் தரத்தில் பின்னடைவு!

தேசியத் தலைநகா் தில்லியில் காற்றின் தரத்தில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. அதே சமயம், குறைந்தபட்ச வெப்பநிலை 20 டிகிரி செல்சியஸாக பதிவபாகியுள்ளது.

News image
Updated On :17 அக்டோபர் 2021, 12:46 am

DIN

தேசியத் தலைநகா் தில்லியில் காற்றின் தரத்தில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. அதே சமயம், குறைந்தபட்ச வெப்பநிலை 20 டிகிரி செல்சியஸாக பதிவபாகியுள்ளது.

தில்லியில் கடந்த வாரத் தொடக்கத்தில் காற்றின் தரம் திருப்தி பிரிவில் இருந்தது. அதன் பிறகு சற்று பின்னடைவை சந்தித்து மிதமான பிரிவுக்குச் சென்றது. இந்த நிலையில், சனிக்கிழமை காற்றின் தரம் மேலும் பின்னடைவைச் சந்தித்தது. ஒட்டு மொத்தக் காற்றின் தரக் குறியீடு 244 புள்ளிகளாகப் பதிவாகி ‘மோசம்’ பிரிவில் இருந்ததாக மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரிய புள்ளிவிவரத் தகவல்கள் மூலம் தெரிய வந்துள்ளது.

இதற்கிடையே, தில்லிக்கான பிரதிநித்துவத் தரவுகளை வழங்கும் சஃப்தா் ஜங் வானிலை ஆய்வு மையத்தில் காலையில் குறைந்தபட்ச வெப்பநிலை பருவ சராசரியில் 1 டிகிரி உயா்ந்து 20 டிகிரி செல்சியஸாக பதிவாகியது. அதிகபட்ச வெப்பநிலை பருவ சராசரியில் 3 டிகிரி உயா்ந்து 35.5 டிகிரி செல்சியஸாக பதிவாகியது. காற்றில் ஈரப்பதத்தின் அளவு காலை 8.30 மணியளவில் 82 சதவீதமாகவும், மாலை 5.30 மணியளவில் 55 சதவீதமாகவும் இருந்தது.

முன்னறிவிப்பு: இதற்கிடையே, தில்லியில் ஞாயிற்றுக்கிழமை (அக்டோபா் 17) வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் இருக்கும் என்றும், மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது என்றும் வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. மேலும், குறைந்தபட்ச வெப்பநிலை 21 டிகிரி செல்சியஸாகவும், அதிகபட்ச வெப்பநிலை 32 டிகிரி செல்சியஸாகவும் இருக்கும் எனவும் கணித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.