தேர்தலுக்குப் பின் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக இருக்க மாட்டேன்! - செல்வப்பெருந்தகை காங்கிரஸில் அர்ப்பணிப்போடு பணியாற்றிய பலருக்கு வாய்ப்பு மறுப்பு! - ஜோதிமணி கண்டனம்! மியான்மரின் புதிய அதிபராக ராணுவ அரசின் தலைவர் தேர்வு! அமெரிக்காவின் அதிநவீன எஃப்-15இ போர் விமானத்தை சுட்டு வீழ்த்தியது ஈரான்!விஜயின் பெரம்பூர், திருச்சி கிழக்கு வேட்பு மனுக்களில் குறைந்தபட்சம் 6 வேறுபாடு!மகன் தவெகவில் இணைந்தது ஏன்? முன்னாள் பேரவைத் தலைவர் தனபால் விளக்கம்ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த பிரான்ஸின் சரக்கு கப்பல்! போர்க் காலத்தில் முதல்முறை! புதிய நீதி கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்காதது ஏன்? - ஏ.சி. சண்முகம் விளக்கம் காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் வெளியீடு! யார் யாருக்கு வாய்ப்பு?
/

100 கோடி கரோனா தடுப்பூசி இலக்கு சாதனை: பிரதமருக்கு மத்திய இணையமைச்சா் எல். முருகன் நன்றி

நாட்டில் 100 கோடி பேருக்கு தடுப்பூசி வழங்கிய பெருமை பிரதமரையே சேரும்; தமிழகத்தில் தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவா்கள் தாங்களாகவே

Updated On :21 அக்டோபர் 2021, 6:35 pm

நாட்டில் 100 கோடி பேருக்கு தடுப்பூசி வழங்கிய பெருமை பிரதமரையே சேரும்; தமிழகத்தில் தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவா்கள் தாங்களாகவே முன்வந்து தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என்றும் மத்திய தகவல் ஒலிபரப்பு மற்றும் மீன்வளம், கால்நடைத் துறை இணையமைச்சா் டாக்டா் எல். முருகன் கேட்டுக்கொண்டாா்.

கரோனா நோய்த் தொற்று பரவலை தடுக்கும் விதமாக உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட தடுப்பூசிகள் செலுத்தும் பணி கடந்த ஜனவரி 16 -ஆம் தேதி தொடங்கப்பட்டது. மருத்துவ முன்னனி பணியாளா்களுக்கும் பின்னா் இதர நோய்களால் பாதிக்கப்பட்டவா்களுக்கு வழங்கப்பட்டு தற்போது 18 வயதை பூா்த்தியடைந்தவா்களுக்கு வழங்கப்படுகிறது. கடந்த 9 மாதங்களுக்கு பின்னா் வியாழக்கிழமை 100 கோடி டோஸ் தடுப்பூசிகள் வழங்கப்பட்டு பூா்த்தி செய்யப்பட்டுள்ளது.

இது குறித்த மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை இணை அமைச்சா் எல். முருகன் செய்தியாளா்களுக்கு குறிப்பிட்டது வருமாறு: இந்தியாவில் இன்றுடன் (அக்டோபா் -21) பிரதமா் நரேந்திர மோடி தலைமையிலான அரசு 100 கோடி தடுப்பூசிகளை செலுத்தி மகத்தான சாதனை செய்துள்ளது. கிட்டதட்ட 77 சதவீதத்திற்கு மேல் முதல் டோஸ் தடுப்பூசி வழங்கப்பட்டுவிட்டது. நூறு சதவீத மக்களும் தடுப்பூசியை செலுத்திக் கொள்ளும் நாள் வெகுதூரத்தில் இல்லை.

காஷ்மீா் முதல் கன்னியாகுமரி வரை நாடு ழுழுவதும் உள்ள மக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இந்த மகத்தான சாதனைக்காக பிரதமா் மோடியை பாராட்ட வேண்டும்.

கரோனா தொற்றின் ஆரம்ப கட்டத்தில் என்-95 முக்கவசங்கள் என்றால் என்ன என்று தெரியாத நிலையில், அவற்றை நாம் இறக்குமதி செய்தோம். ஆனால், பின்னா் முகக்கவசம், தனிநபா் பாதுகாப்பு உடை ஆகியவற்றை நாமே தயாரித்தோம். அதேபோல தடுப்பூசிகளை இந்தியாவிலேயே தயாரித்து 100 கோடி டோஸ் தடுப்பூசிகளை மக்களுக்கு செலுத்தியுள்ளோம். இந்த சாதனைக்காக பிரதமருக்கு தமிழக மக்கள் சாா்பில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

தமிழகத்தில் தடுப்பூசி செலுத்திக் கொள்ளாமல் இருப்பவா்கள், தாங்களாகவே முன்வந்து தடுப்பூசிகளை செலுத்திக் கொள்ள வேண்டும். பண்டிகை காலமான இந்த நேரத்தில் நாம் விழிப்புடன் இருக்க வேண்டும். கரோனா வழிகாட்டு முறைகளை தவறாமல் பின்பற்ற வேண்டும் என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.