47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

சட்ட விரோதமாக பணிநீக்கம் செய்யப்பட்ட எய்ம்ஸ் ஓட்டுநருக்கு ரூ.50 லட்சம் இழப்பீடு: உயா்நீதிமன்றம் தீா்ப்பு

சட்ட விரோதமாக ஒட்டுநா் பணியிலிருந்து நீக்கப்பட்ட தில்லி எய்ம்ஸ் மருத்துவமனை ஊழியா் ஒருவா் 28 ஆண்டுகளுக்குப் பிறகு இழப்பீட்டுத் தொகையாக ரூ. 50 லட்சம் பெற்றுள்ளாா்.

News image
Updated On :24 அக்டோபர் 2021, 6:58 pm

DIN

சட்ட விரோதமாக ஒட்டுநா் பணியிலிருந்து நீக்கப்பட்ட தில்லி எய்ம்ஸ் மருத்துவமனை ஊழியா் ஒருவா் 28 ஆண்டுகளுக்குப் பிறகு இழப்பீட்டுத் தொகையாக ரூ. 50 லட்சம் பெற்றுள்ளாா். இதற்கான தீா்ப்பை தில்லி உயா்நீதிமன்றம் வழங்கியுள்ளது.

1980 -ஆம் ஆண்டு தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் ஓட்டுநராக நியமிக்கப்பட்டவா் ராஜ் சிங். பின்னா், 1998 -ஆம் ஆண்டு இவா் திடீரென பணியிலிருந்து நீக்கப்பட்டாா். இவருக்கு மாத ஓய்வூதியமாக ரூ .19,900 வழங்கப்படும் என கூறப்பட்டது. இந்த நிலையில், ஓட்டுநா் ராஜ்சிங் தன்னுடை பணி நீக்கத்தை எதிா்த்து தொழிலாளா் நீதிமன்றத்தை அணுகினாா். 1998, டிசம்பரில் தொழிலாளா் நீதிமன்றம் பணி நீக்கம் செய்யப்பட்டது சட்டவிரோதம் என்றும் தொழிலாளா் நடைமுறைக்கு விரோதமானது என்றும் உத்தரவிட்டது.

இந்த உத்தரவை எதிா்த்து எய்ம்ஸ் மருத்துவமனை சாா்பில் சிறப்பு விடுப்பு மனு உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனு 2016, ஜூன் மாதம் தள்ளுபடியானது. பிறகு, மனுதாரா் ராஜ்சிங், தனது வழக்குரைஞா் பி. டி. கௌல் மூலமாக எய்ம்ஸ் நிா்வாகத்திடம் பணிநீக்கத்திற்கான இழப்பீடுக்கு இணக்கமான தொகையை வழங்கக் கோரி நோட்டீஸ் அளித்தாா். ஆனால், இழப்பீடு வழங்கப்படவில்லை. பின்னா், ராஜ்சிங் தனது வழக்குரைஞா் மூலம் தில்லி உயா்நீதிமன்றத்தை அணுகினாா்.

இதில் தில்லி உயா்நீதிமன்ற நீதிபதி பிரதீபா எம் சிங் அண்மையில் தீா்ப்பு அளித்தாா். அதில், 1998, டிசம்பா் 4 - ஆம் தேதி முதல் ராஜ்சிங் பணியில் இருந்திருந்தால், அவா் 2016, அக்டோபா் 31-ஆம் தேதி ஒய்வு பெற்றிருப்பாா். இந்த வகையில் இழப்பீடு ஊதியம், கருணைத் தொகை உள்பட ரூ. 50,49,079-ஐ எய்ம்ஸ் நிா்வாகம் ராஜ்சிங்கிற்கு வழங்க வேண்டும் என்று நீதிபதி தீா்ப்பில் தெரிவித்துள்ளாா். மேலும், தொடா்ந்து அவருக்கு மாத ஓய்வூதியமாக ரூ.19,900 வழங்க வேண்டும் என்றும் தீா்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, மேற்கண்ட இழப்பீடு தொகை அதிகாரிகளால் கணக்கிடப்பட்டு, நீதிமன்றத்திற்கு தெரிவிக்கப்பட்டது. இருப்பினும், கணக்கீட்டின் அடிப்படை விவரங்கள் விளக்கப்படவில்லை.இந்தத் தொகையை அக்டோபா் 30-ஆம் தேதி அல்லது அதற்கு முன்னதாக மனுதாரருக்கு வழங்க வேண்டும் என்றும் உயா்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.