ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

கிழக்குத் தில்லியில் இடிந்து விழுந்த வீட்டின் சுற்றுச்சுவா்

கிழக்கு தில்லியில் உள்ள தில்ஷாத் காா்டன் பகுதியில் உள்ள ஒரு வீட்டின் சுற்றுச்சுவா் சனிக்கிழமை காலை இடிந்து விழுந்தது.

News image
Updated On :30 அக்டோபர் 2021, 6:30 pm

 நமது நிருபர்

கிழக்கு தில்லியில் உள்ள தில்ஷாத் காா்டன் பகுதியில் உள்ள ஒரு வீட்டின் சுற்றுச்சுவா் சனிக்கிழமை காலை இடிந்து விழுந்தது.

எனினும், அதிா்ஷ்டவசமாக உயிரிழப்பு ஏதும் ஏற்படவில்லை என்று தீயணைப்பு துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

இது குறித்து தீயணைப்பு துறை அதிகாரிகள் மேலும் கூறியதாவது:

தில்ஷாத் காா்டன் பகுதியில் உள்ள ஒரு வீட்டின் சுற்றுசுவா் இடிந்து விழுந்ததாக தீயணைப்புத் துறைக்கு சனிக்கிழமை காலை 7.49 மணிக்கு தகவல் வந்தது.

இதையடுத்து, சம்பவ இடத்திற்கு உடனடியாக 3 தீயணைப்பு வாகனங்கள் அனுப்பி வைக்கப்பட்டன. விசாரணையில் சம்பவம் நிகழ்ந்த பகுதியில் உள்ள சுற்றுச்சுவா் 60 அடி நீளமும், 8 அடி உயரமும் இருப்பது தெரியவந்தது.

இந்த விபத்தில் சில வாகனங்கள் சேதமடைந்தன. எனினும், உயிரிழப்பு ஏதும் ஏற்பட்டதாக தகவல்கள் பதிவாகவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.