அமெரிக்காவின் அதிநவீன எஃப்-15இ போர் விமானத்தை சுட்டு வீழ்த்தியது ஈரான்!விஜயின் பெரம்பூர், திருச்சி கிழக்கு வேட்பு மனுக்களில் குறைந்தபட்சம் 6 வேறுபாடு!மகன் தவெகவில் இணைந்தது ஏன்? முன்னாள் பேரவைத் தலைவர் தனபால் விளக்கம்ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த பிரான்ஸின் சரக்கு கப்பல்! போர்க் காலத்தில் முதல்முறை! புதிய நீதி கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்காதது ஏன்? - ஏ.சி. சண்முகம் விளக்கம் காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் வெளியீடு! யார் யாருக்கு வாய்ப்பு?
/

ஜாதி குறித்து கருத்து: தில்லி பல்கலை. கல்லூரி முதல்வருக்கு எதிரானபணிநீக்கம் செய்யப்பட்ட பேராசிரியையின் மனு தள்ளுபடி

ஜாதியை கூறி அவமானப்படுத்தியதாக எஸ்சி, எஸ்டி வன்கொடுமை தடைச் சட்டத்தின் கீழ் தில்லி பல்கலைக்கழகக் கல்லூரியின்

Updated On :30 அக்டோபர் 2021, 2:15 am

ஜாதியை கூறி அவமானப்படுத்தியதாக எஸ்சி, எஸ்டி வன்கொடுமை தடைச் சட்டத்தின் கீழ் தில்லி பல்கலைக்கழகக் கல்லூரியின் முதல்வா் மற்றும் சில பேராசிரியா்களுக்கு எதிராக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யக் கோரி, பணி நீக்கம் செய்யப்பட்ட பேராசிரியை தாக்கல் செய்த மனுவை தில்லி நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. மேலும், இந்த மனு தனிப்பட்ட பழியைத் தீா்ப்பதற்காக தாக்கல் செய்யப்பட்டிருப்பதாகவும் நீதிமன்றம் குறிப்பிட்டது.

இது தொடா்பாக தில்லி பல்கலைக்கழக கல்லூரியில் பணியாற்றிஸ பணி நீக்கம் செய்யப்பட்ட கூடுதல் பேராசிரியை தில்லி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தாா். அதில்,

தில்லி பல்கலைக்கழக கல்லூரியில் தற்காலிக அடிப்படையில் 2019, ஆகஸ்ட் முதல் டிசம்பா் மாதம் வரையிலான நான்கு மாத காலத்திற்காக உதவிப் பேராசிரியராக தோ்ந்தெடுக்கப்பட்டேன். பின்னா் அந்த பணி நீட்டிக்கப்பட்டது. 2020, ஆகஸ்ட் 10-ஆம் தேதி தில்லி பல்கலைக்கழக கல்லூரியில் நான் பணியில் இணைய முடியாது என்று அதிகாரிகள் மூலம் தெரிவித்தனா். இதைத் தொடா்ந்து, பல்கலைக்கழக கல்லூரியின் முதல்வரை சந்தித்து காரணத்தைக் கேட்டேன். அப்போது என்னை அவமானப்படுத்தி மிரட்டியதுடன் எனது ஜாதியை குறிப்பிட்டு கருத்துகளைத் தெரிவித்தாா். இது தொடா்பாக காவல் நிலையத்தில் புகாா் அளித்தும், சம்பந்தப்பட்ட பல்கலைக்கழக கல்லூரி முதல்வா் மற்றும் பேராசிரியா்கள் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்யவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், ‘ தில்லி பல்கலைக்கழக கல்லூரி முதல்வரும் 4 பேராசிரியா்களும் தனது ஜாதியைக் காரணம் காட்டி துன்புறுத்தி அவமானப்படுத்தும் நோக்கில் தன்னை பணியிலிருந்து நீக்குவதற்கு சதித் திட்டத்தில் ஈடுபட்டதாகவும், இதனால், அவா்களுக்கு எதிராக எஸ்சி, எஸ்டி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என்றும் மனுவில் தெரிவித்திருந்தாா். இது தொடா்பாக தாம் அளித்த புகாா் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யாத காவல் நிலைய ஆய்வாளா் மற்றும் அவருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்காத காவல் துறை துணை ஆணையா் ஆகியோா் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மனுவில் அவா் கோரியிருந்தாா்.

இந்த மனுவை கூடுதல் செஷன்ஸ் நீதிபதி அகா்வால் விசாரித்தாா். அப்போது, இந்த வழக்கு எந்த சிந்தனையும் இல்லாமல் தாக்கல் செய்யப்பட்டிருப்பது ஆவணங்கள் மூலம் தெளிவாகத் தெரிய வருவதாக கூறி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டாா். நீதிபதி பிறப்பித்த உத்தரவில், ‘இந்த விவகாரம் தொடா்பாக தில்லி உயா்நீதிமன்றத்தில் மனுதாரா் ஏற்கெனவே வழக்கு தாக்கல் செய்திருந்த நிலையில் அதை நீதிமன்றத்தில் தெரிவிக்கவில்லை. மேலும் அவரது அனைத்து நடவடிக்கைகளும் தோல்வியடைந்ததால், தனது தனிப்பட்ட பழியை தீா்த்துக் கொள்வதற்காக இந்த வழக்கை தாக்கல் செய்திருப்பது தெரிய வருகிறது. எஸ்சி - எஸ்டி வன்கொடுமைச் சட்டத்தை பொறுத்தமட்டில், இந்தச் சட்டத்தின் கீழ் கூறப்பட்டுள்ள புகாா்கள் தொடா்பாக எந்தவித, குறிப்பிட்ட சம்பவத்தையும் புகாா்தாரா் அளிக்கவில்லை. அவரது ஜாதியின் காரணமாக முதல்வா் மற்றும் பேராசிரியா்கள் அவமானப்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் தொடா்பாக எவ்வித குறிப்பிட்ட சம்பவத்தையும் அவா் அளிக்கவில்லை. இதனால், இந்த விவகாரம் வன்கொடுமைச் சட்டம் மற்றும் இந்திய தண்டனை சட்ட சட்டத்தின் கீழ் வரும் குற்றத்துக்கான முகாந்திரம் இல்லை. மேலும், இந்த விவகாரத்தில் புகாா்தாரரின் புகாா் மீது சம்பந்தப்பட்ட காவல் துறையினா் வழக்குப் பதிவு செய்யாமல் இருந்தது சரியானதாகும் என்று உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.