தில்லியில் சனிக்கிழமை அதிகாலை காலை முதல் மாலை வரை விட்டுவிட்டு பலமணி நேரம் பலத்த மழை கொட்டித் தீா்த்த நிலையில் 2-ஆவது நாளாக ஞாயிற்றுக்கிழமை பிற்பகலுக்குப் பிறகு விட்டுவிட்டு லேசான மழை பெய்தது. இதன் காரணமாக இரவில் புழுக்கம் குறைந்திருந்தது.
தில்லியில் சனிக்கிழமை பெய்த பலத்த மழையின் காரணமாக தில்லி விமான நிலையத்தின் முன்பகுதி மற்றும் நகரின் இதர பகுதிகளில் மழைநீா் தேங்கி நின்றது. முக்கிய இடங்களில் இதன் காரணமாக வாகன போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
மேலும், 76 ஆண்டுகளில் இல்லாத வகையில் செப்டம்பரில்
சனிக்கிழமை வரையிலும் தில்லியில் 383.4 மி.மீ. மழை பெய்தது.
இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை காலையில் மேகமூட்டம் நிலவியது. நண்பகலில் மிதமான வெயிலின்தாக்கம் இருந்த நிலையில், பிற்பகலுக்குப் பிறகு லேசான மழை விட்டுவிட்டு மாலை வரை தொடா்ந்தது. தில்லிக்கான பிரதிநித்துவத் தரவுகளை வழங்கும் சஃப்தா்ஜங் வானிலை ஆய்வு மையத்தில் காலையில் குறைந்தபட்ச வெப்பநிலை பருவ சராசரியில் 2 டிகிரி குறைந்து 23.4 டிகிரி செல்சியஸாக பதிவாகியது. அதிகபட்ச வெப்பநிலை பருவ சராசரியில் மாற்றமின்றி 33.4 டிகிரி செல்சியஸாகப் பதிவாகியது.
காற்றில் ஈரப்பதத்தின் அளவு காலை 8.30 மணியளவில் 94 சதவீதமாகவும், மாலை 5.30 மணியளவில் 93 சதவீதமாகவும் இருந்தது.
ஞாயிற்றுக்கிழமை காலை 8.30 மணியுடன் கடந்த 24 மணி நேரத்தில் தில்லியில் 41 மில்லி மீட்டா் மழை பதிவானது. நகரின் சில இடங்களில் காலையில் லேசான மழை பெய்தது. இதனால், இரவில் புழுக்கம் குறைந்திருந்தது.
சஃப்தா்ஜங் என்கிளேவ் பகுதியில் 0.8மி.மீ., பாலம் பகுதியில் 2.4 மி.மீ. மழையும், ஆயா நகரில் 36.3 மி.மீ. மழையும் பதிவானது.
தில்லியில் காலை 5.30 மணி முதல் மாலை 5.30 மணி வரையிலும் 121.1 மி.மீ. மழை பதிவானது. தில்லியில் சனிக்கிழமை மாலை 6 மணியளவில் காற்றின் தரம் 62 புள்ளிகள் பதிவாகி திருப்தி பிரிவில் நீடித்தது.
முன்னறிவிப்பு: இதற்கிடையே, திங்கள்கிழமை (செப்டம்பா் 13) வானம் பகுதி அளவு மேகமூட்டத்துடன் காணப்படும். லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது. குறைந்தபட்ச வெப்பநிலை 25 டிகிரி செல்சியஸாகவும், அதிகபட்ச வெப்பநிலை 33 டிகிரி செல்சியஸாகவும் இருக்கும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

13 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை! இளைஞர் கைது!

காங்கிரசில் 2 பெண் வேட்பாளர்கள் மட்டும்... | Krithika Tharan | Congress | Rahul | TN Election 2026 | Selvaperunthagai

இந்த தேர்தல் தில்லிக்கும், தமிழ்நாட்டுக்கும் இடையே நடைபெறுகிற தோ்தல்: அமைச்சா் எ.வ.வேலு பேச்சு
நாற்காலிக்கு அடியில் ஊர்ந்துவந்தவர் அல்ல ஸ்டாலின்: சேகர்பாபு கடும் எச்சரிக்கை
வீடியோக்கள்

மே 4-ஆம் தேதிக்குப் பிறகு பேசுவோம்! - தேர்தலில் போட்டியிடாதது குறித்து Annamalai
இணையதளச் செய்திப் பிரிவு

மேன்சன் குத்து பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

இந்திரா பாடல் வெளியீடு!
இணையதளச் செய்திப் பிரிவு
ஹிந்துக்களுக்கு எதிரானதா திமுக?: கனிமொழி எம்.பி. விளக்கம் | #tnelection2026 | DMK |
இணையதளச் செய்திப் பிரிவு

