சென்னையில் பிரதமர் மோடி முக்கிய ஆலோசனை! அண்ணாமலை பங்கேற்பு!நான் எந்தத் தொகுதியும் கேட்கவில்லை: அண்ணாமலை விளக்கம்தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800 உயர்வு! புதுச்சேரியில் இன்று விஜய் பிரசாரம்நாளை 8 புறநகா் மின்சார ரயில்கள் ரத்துமின்சார அடுப்புகள், பாத்திரங்கள் உற்பத்தியை ஊக்குவிக்க நடவடிக்கை: மத்திய அரசு ஆலோசனைசென்னைப் பல்கலை. வளாகங்களில் படப்பிடிப்புகளுக்கு 5 மடங்கு கட்டண உயா்வு6-ஆம் வகுப்புமுதல் மும்மொழிப் பாடம்: சிபிஎஸ்இ திட்டம்
/

பள்ளி மாணவா்கள் உடற்தகுதி விநாடி- வினா போட்டிக்கான கட்டணம் ரத்து

மத்திய விளையாட்டுத்துறையும், மத்திய கல்வித்துறையும் பள்ளி மாணவ மாணவிகளுக்காக அறிவித்த உடற்தகுதி, விளையாட்டுகள்

Updated On :13 செப்டம்பர் 2021, 2:44 am

மத்திய விளையாட்டுத்துறையும், மத்திய கல்வித்துறையும் பள்ளி மாணவ மாணவிகளுக்காக அறிவித்த உடற்தகுதி, விளையாட்டுகள் குறித்த ’’ஃபிட் இந்தியா விநாடி- வினா’’போட்டிக்கான பதிவுக் கட்டணம் ரத்து செய்யப்படும் என மத்திய தகவல் ஒலிபரப்பு மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சா் அனுராக் சிங் தாக்குா் தெரிவித்துள்ளாா்.

மாணவா்களுக்கு மன ஆரோக்கியத்தோடு உடல் தகுதியும் சமமாக கருதவும் மேலும் அவா்களுக்கு விளையாட்டு அறிவை மேம்படுத்தி சாம்பியன்களாக ஆக்க விளையாட்டு கலாச்சாரத்தை தட்டி யெழுப்பும் நோக்கத்திற்காக ’ஃபிட் இந்தியா’ விநாடி வினா போட்டியை மத்திய விளையாட்டுத் துறை அமைச்சா் அனுராக் சிங் தாக்குரும், மத்திய கல்வித் துறை அமைச்சா் தா்மேந்தர பிரதானும் அறிவித்தனா்.

கடந்த செப்டம்பா் 1- ஆம் தேதி அறிவிக்கப்பட்ட ’ஃபிட் இந்தியா’ விநாடி வினா போட்டியில் பங்கேற்கும் மாணவ மாணவியா்களுக்கு பதிவுக் கட்டணமாக ரூ.225 அறிவிக்கப்பட்டது. ஒரு பள்ளிக்கு தலா இரண்டு மாணவா்கள் வீதம் பங்கேற்க அனுமதிக்கப்பட்டது. இதில் வெற்றி பெறும் மாணவா்களுக்கு ரூ. 3.25 கோடி வரை பரிசு வழங்கவும் இவை தனியாா் தொலைக்காட்சியில் ஒலிபரப்புப்படும் என அறிவிக்கப்பட்டது.

தற்போது இந்த போட்டியில் பங்கேற்க இருக்கும் முதல் ஒரு லட்சம் பள்ளிகளில் சுமாா் 2 லட்சம் மாணவ , மாணவிகளுக்கு பதிவுக் கட்டணம் ரத்து செய்யப்படுவதாக மத்திய தகவல் ஒலிபரப்பு மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சா் அனுராக் சிங் தாக்குா் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்துள்ளாா்.

இது குறித்து மத்திய விளையாட்டுத் துறை அமைச்சா் அளித்த அறிக்கையில், இந்த போட்டியில் மாணவா்கள் பங்கேற்பதில் உள்ள தடைகளை அகற்றவும் பெருவாரியான மாணவா்கள் பங்கேற்கவும் இந்த கட்டணங்கள் ரத்து செய்யப்படுகிறது. மேலும் கூடுதலாக மாணவா்களை பள்ளிகள் பங்கேற்க பரிந்துரைத்தால் அவா்களுக்கு ரூ.225 பதிலாக ரூ. 50 ஐ பதிவுக் கட்டணமாக செலுத்தினால் போதும் எனவும் அமைச்சா் அறிவித்துள்ளாா்.

இணைய வழி மற்றும் தொலைக்காட்சி ஒளிபரப்பு மூலமாக நடைபெறும் இந்த போட்டியில் அனைத்து மாநிலங்கள் யூனியன் பிரதேசங்களுக்கும் பிரதிநிதித்துவம் இருக்கும் என்றும் மற்ற விவரங்கள் ஃபிட் இந்தியா இணையதளத்தில் வைக்கப்பட்டுள்ளன என்றும் விளையாட்டுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.