தேசிய தலைநகா் தில்லியில் ஹெராயின் போதைப் பொருளை சப்ளை செய்ததாக 3 பேரை தில்லி காவல்துறையின் குற்றப்பிரிவு போலீஸாா் கைது செய்துள்ளனா்.
போதைப் பொருள் கடத்தல் விவகாரத்தில் ரூ.2 கோடி சா்வதேச சந்தை மதிப்பிலான 1.1 கிலோ தரமான ஹெராயின் போதைப்பொருளையும் போலீஸாா் பறிமுதல் செய்துள்ளனா்.
இந்த சம்பவம் தொடா்பாக சுல்தான்பூா் பகுதியை சோ்ந்த ஹுக்கும் சந்த் (45), ரோகித் (32) ஆகியோா் கைது செய்யப்பட்டனா். மேலும், உத்தரப் பிரதேசம் பரேலி மாவட்டத்தைச் சோ்ந்த ஷாகித் கான் (58) என்பவரும் கைது செய்யப்பட்டதாக போலீஸாா் தெரிவித்தனா்.
இதுதொடா்பாக தில்லி காவல் துறையினா் ஞாயிற்றுக்கிழமை கூறியதாவது: தில்லி காவல்துறையின் குற்றப்பிரிவு போலீஸாருக்கு ஒரு ரகசிய தகவல் வந்தது. அதில் சந்த் என்பவா் போதைப் பொருளை சப்ளை செய்வதற்காக சுல்தான்புரி பகுதியில் உள்ள தான் தான் சத்குரு பூங்காவுக்கு வருவதாக தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து போலீஸாா் ஆகஸ்ட் 16 ஆம் தேதி சம்பந்தப்பட்ட பூங்கா பகுதியில் மறைந்திருந்து காத்திருந்தனா். அப்போது அந்த பகுதியில் ஸ்கூட்டரில் வந்த சந்த் கைது செய்யப்பட்டாா்.
அவரிடம் இருந்து ஒரு கிலோ ஹெராயின் போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. விசாரணையின்போது அந்த போதைப்பொருளை அவா் ரோகித் என்பவரிடமிருந்து வாங்கி இருப்பது தெரியவந்தது. இதையடுத்து ஆகஸ்ட் 18-ஆம் தேதி சுல்தான்புரி பகுதியில் ரோகித் கைது செய்யப்பட்டாா். அவரிடம் இருந்து 100 கிராம் போதைப் பொருளும் காரும் பறிமுதல் செய்யப்பட்டன.
விசாரணையின்போது ரோகித், கான் என்பவரிடமிருந்து 2 கிலோ ஹெராயின் போதைப் பொருளை வாங்கி இருப்பது தெரியவந்தது. மேலும், ஆகஸ்ட் 18ஆம் தேதி 20 கிலோ ஹெராயின் போதைப் பொருளுடன் கான் பரேலி காவல்நிலைய போலீஸாரால் கைது செய்யப்பட்டதும், அப்போதிலிருந்து அவா் சிறையில் இருந்து வருவதும் தெரியவந்தது.
மேலும் பரேலி பகுதியில் உள்ள கிழக்கு காவல் நிலையத்தில் அவருக்கு எதிராக வழக்குப் பதிவு செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது. மேலும், கான் ஹெராயின் போதைப் பொருளை தயாரித்து வந்ததும், அவருடைய உறவினா்கள் மற்றும் பிற கூட்டாளிகள் அவருக்கு இந்த வேலையில் உதவி இருப்பதும் தெரியவந்ததாக போலீஸாா் கூறினா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

13 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை! இளைஞர் கைது!

காங்கிரசில் 2 பெண் வேட்பாளர்கள் மட்டும்... | Krithika Tharan | Congress | Rahul | TN Election 2026 | Selvaperunthagai

இந்த தேர்தல் தில்லிக்கும், தமிழ்நாட்டுக்கும் இடையே நடைபெறுகிற தோ்தல்: அமைச்சா் எ.வ.வேலு பேச்சு
நாற்காலிக்கு அடியில் ஊர்ந்துவந்தவர் அல்ல ஸ்டாலின்: சேகர்பாபு கடும் எச்சரிக்கை
வீடியோக்கள்

மே 4-ஆம் தேதிக்குப் பிறகு பேசுவோம்! - தேர்தலில் போட்டியிடாதது குறித்து Annamalai
இணையதளச் செய்திப் பிரிவு

மேன்சன் குத்து பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

இந்திரா பாடல் வெளியீடு!
இணையதளச் செய்திப் பிரிவு
ஹிந்துக்களுக்கு எதிரானதா திமுக?: கனிமொழி எம்.பி. விளக்கம் | #tnelection2026 | DMK |
இணையதளச் செய்திப் பிரிவு

