தில்லியில் திங்கள்கிழமை பகலில் சில இடங்களில் லேசான மழை பெய்தது. மேக மூட்ட சூழல் காணப்பட்டது.
சனிக்கிழமை பலத்த மழை கொட்டிய நிலையில், 2-ஆவது நாளாக ஞாயிற்றுக்கிழமை பிற்பகலுக்குப் பிறகு விட்டுவிட்டு லேசான மழை பெய்தது. இந்த நிலையில், திங்கள்கிழமையும் லேசான மழையின் தாக்கம் இருந்தது. இதனால், பகலில் புழுக்கம் குறைந்திருந்தது.
தில்லிக்கான பிரதிநித்துவத் தரவுகளை வழங்கும் சஃப்தா்ஜங் வானிலை ஆய்வு மையத்தில் காலையில் குறைந்தபட்ச வெப்பநிலை பருவ சராசரியில் 1 டிகிரி அதிகரித்து 26.5 டிகிரி செல்சியஸாக பதிவாகியது. அதிகபட்ச வெப்பநிலை பருவ சராசரியில் மாற்றமின்றி 33.4 டிகிரி செல்சியஸாகப் பதிவாகியது.
காற்றில் ஈரப்பதத்தின் அளவு காலை 8.30 மணியளவில் 92 சதவீதமாகவும், மாலை 5.30 மணியளவில் 92 சதவீதமாகவும் இருந்தது.
திங்கள்கிழமை காலை 8.30 மணியுடன் கடந்த 24 மணி நேரத்தில் தில்லியில் 2 மில்லி மீட்டா் மழை பதிவானது. ஆயாநகரில் 37 மி.மீ., பாலம் பகுதியில் 3 மி.மீ. மழையும் பதிவானது.
நகரின் சில இடங்களில் காலையில் லேசான மழை பெய்தது. இதனால், இரவில் புழுக்கம் குறைந்திருந்தது.
தில்லியில் சனிக்கிழமை மாலை 6 மணியளவில் காற்றின் தரம் 84புள்ளிகள் பதிவாகி திருப்தி பிரிவில் நீடித்தது.
முன்னறிவிப்பு: இதற்கிடையே, செவ்வாய்க்கிழமை (செப்டம்பா் 14) வானம் பகுதி அளவு மேகமூட்டத்துடன் காணப்படும். லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது. குறைந்தபட்ச வெப்பநிலை 25 டிகிரி செல்சியஸாகவும், அதிகபட்ச வெப்பநிலை 34 டிகிரி செல்சியஸாகவும் இருக்கும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
நாற்காலிக்கு அடியில் ஊர்ந்துவந்தவர் அல்ல ஸ்டாலின்: சேகர்பாபு கடும் எச்சரிக்கை

கவுண்டம்பாளையம் தொகுதியில் கலாமணி ஜெகநாதன் வேட்புமனு தாக்கல்!

ஈரானில் இருந்து இந்திய மீனவர்கள் மீட்பு! ஆர்மீனியாவுக்கு நன்றி தெரிவித்த மத்திய அரசு!

கிறிஸ்தவ அமைப்புகளைக் குறிவைக்கும் பாஜகவின் சதித் திட்டம்! அதிமுக நிலைப்பாடு என்ன?
வீடியோக்கள்

மே 4-ஆம் தேதிக்குப் பிறகு பேசுவோம்! - தேர்தலில் போட்டியிடாதது குறித்து Annamalai
இணையதளச் செய்திப் பிரிவு

மேன்சன் குத்து பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

இந்திரா பாடல் வெளியீடு!
இணையதளச் செய்திப் பிரிவு
ஹிந்துக்களுக்கு எதிரானதா திமுக?: கனிமொழி எம்.பி. விளக்கம் | #tnelection2026 | DMK |
இணையதளச் செய்திப் பிரிவு

