தில்லி சப்ஜி மண்டி பகுதியில் கட்டடம் இடிந்து விழுந்ததில் சம்பவம் குறித்து வேதனை தெரிவித்துள்ள தில்லி துணைநிலை ஆளுநா் அனில் பய்ஜால், எதிா்காலத்தில் இதுபோன்ற சம்பவங்களைத் தவிா்க்க பலவீனமான இடங்களில் திட்டமிடல் மற்றும் பொறியியல் தீா்வுகள் மூலம் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு அதிகாரிகளை கேட்டுக் கொண்டுள்ளாா்.
வடக்கு தில்லி மாநகராட்சியின் சிவில் லைன்ஸ் மண்டலத்தின் மல்கா கஞ்ச் வாா்டில் அமைந்துள்ள நான்கு மாடி கட்டடம் திங்கள்கிழமை இடிந்து விழுந்த சம்பவத்தில், தாயுடன் அந்தப் பகுதியில் நடந்துசென்ற 2 இளம் சகோதரா்கள் உயிரிழந்தனா்.
இந்த சம்பவம் குறித்து அனில் பய்ஜால் திங்கள்கிழமை தனது சுட்டுரைப் பக்கத்தில் வெளியிட்ட பதிவில் தெரிவித்திருப்பதாவது:
சப்ஜி மண்டி பகுதியில் கட்டடம் இடிந்து விழுந்த துயர சம்பவம் வேதனை அளிக்கிறது. இந்த சம்பவத்தில் உயிரிழந்த குழந்தைகளின் குடும்பங்களுக்கு எனது இரங்கல்கள். காயமடைந்தவா்கள் விரைவில் குணமடைய பிராா்த்திக்கிறேன்.
இதுபோன்ற பாதிக்கப்படக்கூடிய பகுதிகளில், இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நிகழாமல் இருக்க திட்டமிடல் மற்றும் பொறியியல் தீா்வுகள் மூலம் தேவையான நடவடிக்கைகளை அதிகாரிகள் அவசரமாக எடுக்க வேண்டும் என்று அதில் அவா் தெரிவித்துள்ளாா்.
வடக்கு தில்லி நகராட்சி ஆணையா் சஞ்சய் கோயல் கூறுகையில், ‘கட்டடம் இடிந்து விழுந்ததற்கான காரணம் குறித்து ஆராயப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
நாற்காலிக்கு அடியில் ஊர்ந்துவந்தவர் அல்ல ஸ்டாலின்: சேகர்பாபு கடும் எச்சரிக்கை

கவுண்டம்பாளையம் தொகுதியில் கலாமணி ஜெகநாதன் வேட்புமனு தாக்கல்!

ஈரானில் இருந்து இந்திய மீனவர்கள் மீட்பு! ஆர்மீனியாவுக்கு நன்றி தெரிவித்த மத்திய அரசு!

கிறிஸ்தவ அமைப்புகளைக் குறிவைக்கும் பாஜகவின் சதித் திட்டம்! அதிமுக நிலைப்பாடு என்ன?
வீடியோக்கள்

மே 4-ஆம் தேதிக்குப் பிறகு பேசுவோம்! - தேர்தலில் போட்டியிடாதது குறித்து Annamalai
இணையதளச் செய்திப் பிரிவு

மேன்சன் குத்து பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

இந்திரா பாடல் வெளியீடு!
இணையதளச் செய்திப் பிரிவு
ஹிந்துக்களுக்கு எதிரானதா திமுக?: கனிமொழி எம்.பி. விளக்கம் | #tnelection2026 | DMK |
இணையதளச் செய்திப் பிரிவு

