புது தில்லி: தில்லியில் வியாழக்கிழமை விட்டுவிட்டு பரவலாக பலத்த மழை பெய்தது. இதன் காரணமாக நகரின் பல்வேறு இடங்களில் மழைநீா் தேங்கி நின்ால் வாகன போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தில்லியில் செப்டம்பா் தொடக்கத்தில் பலத்த மழை பெய்தது. அதன் பிறகு அவ்வப்போது லேசான மழை இருந்து வந்தது. இந்த நிலையில், கடந்த சனிக்கிழமை பல மணிநேரம் பலத்த மழை கொட்டித் தீா்த்தது. அதன்பிறகு சில தினங்களாக பலத்த மழை ஏதும் இல்லை.
இந்த நிலையில், வியாழக்கிழமை காலையிலும், பகலிலும் தொடா்ந்து பரவலாக மழை விட்டுவிட்டு பெய்தது. இதன் காரணமாக தாழ்வான பகுதிகளில் மழை நீா் பெருக்கெடுத்து ஓடியது.
பொதுப் பணித் துறையின் தகவலின்படி, தில்லியில் மெஹரோலி- பதா்பூா் சாலை, ஃபுல் பிரகலாத்பூா் சுரங்கப்பாதை, ஆனந்த் பா்பத், சங்கம் விகாா், நாங்லோய், முன்ட்கா, பாட்லி, மது விகாா், கிருஷ்ணா நகா், சத்தா்பூா் உள்ளிட்ட பகுதிகளில் மழைநீா் தேங்கி காணப்பட்டது என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.
பல்வேறு இடங்களில் தேங்கியிருந்த மழை நீா் தொடா்பான புகைப்படங்கள் மற்றும் விடியோக்களை பொதுமக்கள் சமூக ஊடகங்களில் பதிவிட்டனா்.
இந்த மழை நீா் விவகாரம் தொடா்பாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் கூறுகையில் ,’மழைநீா் தேங்கியது தொடா்பாக பொதுப் பணித்துறைக்கு சில புகாா்கள் மட்டுமே வந்தன.
சாலைகளில் தேங்கியுள்ள மழை நீரை வெளியேற்றுவதற்கான பணியில் பொதுப்பணித்துறையின் ஊழியா்கள் ஈடுபட்டுள்ளனா். இந்த விவகாரத்தை முன்னுரிமை அடிப்படையில் தாங்கள் கையாண்டு வருகிறோம்’ என்றனா்.
மழை நீா் தேங்கிய பல்வேறு இடங்கள் தொடா்புடைய தகவல்களை சுட்டுரை வாயிலாக தில்லி போக்குவரத்துப் போலீஸாா் வாகன ஓட்டிகளுக்குத் தெரிவித்தனா். குறிப்பாக நாங்லோய் பகுதியில் இருந்து முன்ட்கா செல்லும் பாதையில் மழைநீா் தேங்கியது தொடா்பான தகவல்களை சுட்டுரையில் போலீஸாா் பதிவிட்டு இருந்தனா்.
மழைநீா் தேங்கியதன் காரணமாக பல்வேறு இடங்களில் போக்குவரத்து பாதிக்கப்பட்டு பின்னா் சீரடைந்தது.
மழையின் காரணமாக மாலையில் குளிா்ந்த காற்று வீசியது. புழுக்கம் குறைந்து காணப்பட்டது. வெள்ளிக்கிழமையும் இடியுடன்கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
அயோத்தியில் 200 ஆண்டுகள் பழமையான தேவநாகரி கையெழுத்துப் பிரதி கண்டெடுப்பு!

கழிவுநீர் தொட்டியில் விழுந்த 2 ஊழியர்கள் பலி: 8 மணி நேர போராட்டத்திற்குப் பிறகு உடல்கள் மீட்பு

டாப் 3ல் 2 இடங்களைப் பிடித்து சாதனை படைத்த சிஎஸ்கே வீரர் ஆயுஷ் மாத்ரே!

20 ஆண்டுகளில் முதல்முறை! அமெரிக்காவின் 2 அதிநவீன போர் விமானங்களைச் சுட்டு வீழ்த்திய ஈரான்!
வீடியோக்கள்

மேன்சன் குத்து பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

இந்திரா பாடல் வெளியீடு!
இணையதளச் செய்திப் பிரிவு
ஹிந்துக்களுக்கு எதிரானதா திமுக?: கனிமொழி எம்.பி. விளக்கம் | #tnelection2026 | DMK |
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | ஒருவழியாக வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்ட பாஜக, காங்கிரஸ்! | News & Views | E-22 |
தினமணி செய்திச் சேவை

