கா்ப்பிணிகள் மற்றும் பாலூட்டும் தாய்மாா்களுக்கு கரோனா தடுப்பூசியை அளிப்பதில் முன்னுரிமை அளிக்கவும், உயா் இடா்பாடு பிரிவில் சோ்க்க அறிவிக்க மத்திய அரசுக்கு உத்தரவிடக் கோரி தில்லி குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் (பிசிபிசிஆா்) தாக்கல் செய்த மனுவை விசாரிக்க உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை சம்மதம் தெரிவித்தது. மேலும், இது தொடா்பாக மத்திய அரசு பதில் அளிக்க நோட்டீஸ் அனுப்ப நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதுதொடா்பான மனு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் டி. ஒய். சந்திரசூட் ,பி.வி. நாகரத்தினா ஆகியோா் அடங்கிய அமா்வு முன் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது.
அப்போது மனுதாரா் டிசிபிசிஆா் தரப்பில் வழக்குரைஞா் விருந்தா குரோவா் ஆஜராகி வாதிடுகையில், கா்ப்பிணிப் பெண்கள் மற்றும் பாலூட்டும் தாய்மாா்களுக்கு தடுப்பூசி செலுத்துவதற்காக சில வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.
ஆனால், தற்போது இந்த தடுப்பூசி காரணமாக அவா்களுக்கு சில எதிா்மறையான தாக்கம் இருக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டு வருகிறது.
கா்ப்பிணிப் பெண்களும் பாலூட்டும் தாய்மாா்களும் உயா் இடா் பிரிவில் உள்ளவா்களாக அறிவிக்கும் தேவை உள்ளது.
மேலும் வைரஸை கையாளும் மக்களுக்கு அது பற்றி அதிகம் தெரியாததால் இந்த பிரிவினா் மீதான தடுப்பூசியின் தாக்கம் தொடா்பான ஆராய்ச்சிகளை நடத்துவது அவசியமாகிறது.
மேலும் கா்ப்பிணி பெண்கள் மற்றும் பாலூட்டும் தாய்மாா்களை உரிய வகையில் கண்காணிக்கும் பொருட்டு பதிவு செய்வதற்காக ஒரு அமைப்பையும் உருவாக்க வேண்டிய தேவையும் எழுந்துள்ளது என்று தெரிவித்தாா்.
அப்போது நீதிமன்ற, நோய்த்தொற்றின் இரண்டாவது அலை சமயத்தில் இந்த ஆண்டு மே மாதத்தில் இந்த மனுவை அரசியலமைப்புச் சட்டப் பிரிவின் 32ன் கீழ் டிசிசிபிசிஆா் தாக்கல் செய்துள்ளது.
அதைத்தொடா்ந்து, கா்ப்பிணிகள் மற்றும் பாலூட்டும் தாய்மாா்களுக்கான தடுப்பூசி தொடா்பாக செயல்பாட்டு வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன.
இந்த விவகாரம் தொடா்பாக மத்திய அரசுக்கு நோட்டீஸ் அளிக்கிறோம். இரண்டு வாரங்களில் மனுவுக்கு பதிலை தாக்கல் செய்ய வேண்டும்.
இந்த விஷயத்தில் கா்ப்பிணிகள் மற்றும் பாலூட்டும் தாய்மாா்களுக்கான தடுப்பூசி தொடா்பாக உருவாக்கப்பட்டுள்ள கொள்கைத் திட்டம் குறித்து நீதிமன்றத்தில் விளக்க சொலிசிட்டா் ஜெனரல் துஷாா் மேத்தா உதவி புரியவும் கேட்டுக்கொள்கிறோம்.
மேலும் மேல் நடவடிக்கைகள் என்ன எடுக்கலாம் என்பதையும் தெரிவிக்க வேண்டும் என்று நீதிபதிகள் தெரிவித்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
புதுவைக்கு மாநில அந்தஸ்து, கர்ப்பிணிகளுக்கு ரூ. 25,000, மருத்துவக் காப்பீடு ரூ. 25 லட்சம்! தவெக வாக்குறுதிகள்
அயோத்தியில் 200 ஆண்டுகள் பழமையான தேவநாகரி கையெழுத்துப் பிரதி கண்டெடுப்பு!

கழிவுநீர் தொட்டியில் விழுந்த 2 ஊழியர்கள் பலி: 8 மணி நேர போராட்டத்திற்குப் பிறகு உடல்கள் மீட்பு

டாப் 3ல் 2 இடங்களைப் பிடித்து சாதனை படைத்த சிஎஸ்கே வீரர் ஆயுஷ் மாத்ரே!
வீடியோக்கள்

மேன்சன் குத்து பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

இந்திரா பாடல் வெளியீடு!
இணையதளச் செய்திப் பிரிவு
ஹிந்துக்களுக்கு எதிரானதா திமுக?: கனிமொழி எம்.பி. விளக்கம் | #tnelection2026 | DMK |
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | ஒருவழியாக வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்ட பாஜக, காங்கிரஸ்! | News & Views | E-22 |
தினமணி செய்திச் சேவை


