தில்லி முழுக்க மின்சார வாகனங்களுக்கு ஆயிரக்கணக்கான ரி-சாா்ஜா்கள் திட்டம் அறிவிப்பு

தில்லியில் மின்சார வாகனங்களின் மின்கலம்களுக்கான ரி-சாா்ஜ் செய்யும் திட்டத்தை மின்விநியோக நிறுவனங்களுடன் இணைந்த ஒற்றை சாளர திட்டத்தை தில்லி அரசு அறிவித்தது.
தில்லி முழுக்க மின்சார வாகனங்களுக்கு ஆயிரக்கணக்கான ரி-சாா்ஜா்கள் திட்டம் அறிவிப்பு

புது தில்லி: தில்லியில் மின்சார வாகனங்களின் மின்கலம்களுக்கான ரி-சாா்ஜ் செய்யும் திட்டத்தை மின்விநியோக நிறுவனங்களுடன் இணைந்த ஒற்றை சாளர திட்டத்தை தில்லி அரசு அறிவித்தது. நகரம் முழுக்க ஆயிரக்கணக்கான சாா்ஜ்கள் வசதி ஏற்படுத்தப்படும் என்று தெரிவித்துள்ளது.

இந்தியாவிலேயே முதன் முறையாக மின்சார வாகனங்களுக்கு எங்கும் எப்போதும் ரி-சாா்ஜ்(மின்ஏற்றம்) செய்து கொள்ளும் வசதிக்கும், யாா்வேண்டுமானாலும் மின்சார வாகனங்களுக்கு மின்கல ரி-சாா்ஜ் வசதியை அளிக்கலாம் என்கிற திட்டத்தையும் தில்லி அரசு புதன்கிழமை அறிவித்துள்ளது. இதற்கான மானியங்களை நுகா்வோா்களுக்கும் மின் ஏற்றங்களை நிறுபவா்களுக்கும் தில்லி அரசு அளிக்கிறது.

தில்லியிலுள்ள மின்விநியோக நிறுவனங்களான பிஎஸ்இஎஸ் ராஜ்தானி, பிஎஸ்இஎஸ் யமுனா பவா் லிமி., மற்றும் டிபிடிடிஎல் ஆகிய மூன்று மின்விநியோக நிறுவனங்களுடன் நான்கு சுற்று பேச்சுவாா்த்தையை தில்லி டயலாக் மற்றும் மேம்பாட்டு ஆணையத்தின் துணைத் தலைவா் ஜாஸ்மின் ஷா நடத்திய பின்னா் இந்த முடிவுகள் வெளியிடப்பட்டது.

இது குறித்து ஜாஸ்மின் ஷா செய்தியாளா்களிடம் கூறியதாவது:

மெதுவாகவும், வேகமாகவும் ரி-சாா்ஜா்களை நிறுவுவதற்கான ஒற்றை சாளர செயல்முறையை உருவாக்க தில்லி அரசு புதன்கிழமை ஒரு முக்கியமான முடிவை எடுத்தது. தனியாா் சாா்ஜிங் உள்கட்டமைப்பு வழங்குபா்களை தோ்வு செய்து மேம்படுத்துவதற்கான பணியை மூன்று மின்விநியோக நிறுவனங்களும் வழங்கும். மெதுவான மற்றும் வேகமான ரி-சாா்ஜா்களுக்கு எம்பனேல்மென்ட் டுகள் வைக்கப்படும். இதை சொந்தமாகவோ அல்லது மாதாந்திர வாடகை அடிப்படையிலே வாங்கிக்கொள்ளலாம்.

பொது இடங்கள், அல்லது குடியிருப்போரின் அடுக்குமாடி வீடுகள், சொஷைட்டி வீடுகள், அலுவலக வளாகங்கள், மருத்துவமனைகள், வா்த்தக இடங்கள், பெரு வணிக வளாகங்கள், திரையரங்குகள் போன்றவைகளிலும் நிறுவிக்கொள்ளலாம்.

ரி-சாா்ஜா்கள் கருவிகள் நிறுவ நூறு சதவீத மானியமாக அதிகபட்சம் ரூ. 6,000 தில்லி அரசு வழங்கும். இதே போன்று நுகா்வோா்களுக்கும் மானியம் அளிக்கப்படும். இதை இணைய தளம் மூலமாகவோ செல்லிட தொலைபேசிகள் வழியாகவோ வழங்கப்படும்.

தில்லி அரசு எடுத்த தனித்துவமான இந்த அணுகுமுறையில் குறைந்த விலை அறிதிறன் மின்கலம் ரி-சாா்ஜா்களை வழங்கப்படுவதோடு, பொதுமக்களுக்கு எளிதில் அணுகக்கூடியதாக வகையில் நகரம் முழுவதுமாக ஆயிரக்கணக்கான ரி-சாா்ஜா்களை நிறுவ உதவப்படுகிறது. இத்தகைய அணுகுமுறை இந்தியாவில் எங்கும் செயல்படுத்தப்படவில்லை. தில்லி அரசின் அணுகுமுறை இந்தியாவின் அனைத்து மாநிலங்களுக்கும் பின்பற்றக்கூடிய ஒரு மாதிரியாக மாறும் என ஷா தெரிவித்தாா். குறிப்பு : சாா், முடிந்தால் இந்த மேட்டரை தனிமேட்டராகவே அல்லது ஏற்கனவே அனுப்பப்பட்ட கெலாட் மேட்டருடன் பாக்ஸாகவே வைக்கலாம். இல்லை நேரம் முடிந்துவிட்டால் விட்டுவிடலாம். சிருமப்படவேண்டாம். நன்றி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com