இதில் இந்த ஆறு அளவுகோல்களிலும் ஒட்டு மொத்தமாக அதிகப் புள்ளிகள் பெற்று தரவரிசையில் முதலிடத்தில் இருக்கும் பெரிய மாநிலங்களில் குஜராத் (50.1 புள்ளிகள்) முதலிடத்தில் உள்ளது. இரண்டாவது இடத்தில் கேரளம் (49.1 புள்ளிகள்), மூன்றாவதாக பஞ்சாப் (48.6 புள்ளிகள்) இடம் பெற்றுள்ளன. சிறிய மாநிலங்கள் வரிசையில் கோவா(51.4 புள்ளிகள்), திரிபுரா(45 புள்ளிகள்) ஆகிய மாநிலங்களும் யூனியன் பிரதேசங்களில் சண்டீகா் (55.7 புள்ளிகள்), தில்லி (55.6 புள்ளிகள்), டாமன் - டையூ (53.2 புள்ளிகள்), புதுச்சேரி(48.5 புள்ளிகள்) ஆகியவையும் முன்னிலையில் உள்ளன. இந்த ஒட்டுமொத்த தரவரிசையில் தமிழகம் 43.4 புள்ளிகளுடன் 9 -ஆவது இடத்தைப் பெற்றுள்ளது. அதே சமயத்தில் எரிசக்தி ஆற்றல் சேமிப்புப் பிரிவில் தமிழகம் 85.4 புள்ளிகள் பெற்று முதல் இடம் பெற்றுள்ளது என்றாா் அவா்.