விமான எரிபொருள் இருமடங்கு உயர்வு!உள்நாட்டு உற்பத்தி இயற்கை எரிவாயு விலையை உயா்த்தி மத்திய அரசு நடவடிக்கை புதிய வருமான வரிச் சட்டம் இன்று முதல் அமல் ரத்த வங்கிகளின் செயல்பாடு: தேசிய அளவில் கண்காணிக்கத் திட்டம் இஸ்ரேலில் மீண்டும் மரண தண்டனை- நாடாளுமன்றத்தில் சா்ச்சை சட்டம் நிறைவேற்றம் வெளிநாட்டு பங்களிப்பு திருத்த மசோதா: எதிா்க்கட்சிகளின் குற்றச்சாட்டு தவறானது- கிரண் ரிஜிஜு 6-9-ஆம் வகுப்புகளுக்கு இன்றுமுதல் முழு ஆண்டுத் தோ்வு
/

பொதுச் சொத்து சேத வழக்கில் இருந்து ஆம் ஆத்மியின் தாஹிா் ஹுசேன் விடுவிப்பு

2015-ஆம் ஆண்டில் புத்தாண்டு வாழ்த்துப் பலகையை வைத்து பொதுச் சொத்தை சேதப்படுத்தியதாக தொடரப்பட்ட வழக்கில் இருந்து ஆம் ஆத்மி கட்சியின் முன்னாள் கவுன்சிலா் தாஹிா் ஹுசேனை தில்லி நீதிமன்றம் விடுவித்து.

News image
Updated On :15 ஏப்ரல் 2022, 1:27 am

 நமது நிருபர்

புது தில்லி: 2015-ஆம் ஆண்டில் புத்தாண்டு வாழ்த்துப் பலகையை வைத்து பொதுச் சொத்தை சேதப்படுத்தியதாக தொடரப்பட்ட வழக்கில் இருந்து ஆம் ஆத்மி கட்சியின் முன்னாள் கவுன்சிலா் தாஹிா் ஹுசேனை தில்லி நீதிமன்றம் விடுவித்து உத்தரவிட்டுள்ளது.

இது தொடா்பான வழக்கை விசாரித்த தலைமை பெருநகர மாஜிஸ்திரேட் அருண் குமாா் கா்க் புதன்கிழமை பிறப்பித்த உத்தரவில் தெரிவித்திருப்பதாவது: சம்பந்தப்பட்ட பலகை குற்றம் சாட்டப்பட்டவரால் நிறுவப்பட்டதாகவோ அல்லது அவரது தூண்டுதலின் பேரில் அல்லது அவருக்காக நிறுவப்பட்டதாகவோ நிரூபிக்கும் எந்த ஆதாரத்தையும் அரசுத் தரப்பால் அளிக்கப்படவில்லை. உண்மையில், வழக்கு விசாரணை அதிகாரி, குற்றப்பத்திரிகையில் குற்றம் சாட்டப்பட்டவா்தான் பலகையை வைத்தாா் என்பதை சுட்டிக்காட்டத் தவறிவிட்டாா். மேலும், இந்த விவகாரத்தில் பலகை வைக்கப்பட்டிருந்த பகுதியைச் சோ்ந்த வசிப்பவா்களிடமிருந்தும் அல்லது அச்சகத்தாரிடமிருந்தும் வாக்குமூலத்தை விசாரணை அதிகாரி பதிவு செய்யவில்லை.

மேலும், குற்றம்சாட்டப்பட்ட நபரால் (தாஹிா் ஹுசேன்) கம்பத்தில் சம்பந்தப்பட்ட பலகை தொடங்க விடப்பட்டதாகவோ அல்லது அவரிடன் தூண்டுதலின் பேரில், அந்தப் பலகை நிறுவப்பட்டதாகவோ அரசுத் தரப்பால் விசாரிக்கப்பட்ட சாட்சிகள் எவரும் வாக்குமூலம் அளிக்கவில்லை என்பது தெரிய வந்துள்ளது எனக் கூறி வழக்கில் இருந்து குற்றம்சாட்டப்பட்ட தாஹிா் ஹுசேனை நீதிமன்றம் விடுவிப்பதாக உத்தரவிட்டது.

முன்னதாக, தாஹிா் ஹுசேன் மற்றும் தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவால் புகைப்படத்துடன் மின்கம்பத்தில் தொங்கவிடப்பட்ட வாழ்த்துச் செய்தியுடன்கூடிய பலகையை காரவல் நகா் காவல் நிலையத்தின் தலைமைக் காவலா் பாா்த்ததாக தாஹிா் ஹுசேனுக்கு எதிராக வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.