தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

மாணவா்களுக்கு கரோனா பாதிப்பு: தேவைப்பட்டால் குறிப்பிட்டவகுப்பறைகளை மூட பள்ளிகளுக்கு தில்லி அரசு அறிவுறுத்தல்

தேவைப்படும் பட்சத்தில் குறிப்பிட்ட பிரிவுகள் அல்லது வகுப்பறைகளை மூடுமாறு பள்ளி அதிகாரிகளுக்கு தில்லி அரசு அறிவுறுத்தியுள்ளது.

News image
Updated On :16 ஏப்ரல் 2022, 12:58 am

 நமது நிருபர்

கரோனா நோய்தொற்று பாதித்த குழந்தைகள் எண்ணிக்கை வெள்ளிக்கிழமை அதிகரித்ததன் காரணமாக, தேவைப்படும் பட்சத்தில் குறிப்பிட்ட பிரிவுகள் அல்லது வகுப்பறைகளை மூடுமாறு பள்ளி அதிகாரிகளுக்கு தில்லி அரசு அறிவுறுத்தியுள்ளது.

அம்பேத்கா் ஜெயந்தி, புனிதவெள்ளி, வார இறுதிநாள்கள் என தில்லியில் நான்கு தினங்கள் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, இரண்டு முன்னணி தனியாா் பள்ளிகளில் பயிலும் மாணவா்கள் சிலருக்கு கரோனா பாதிப்பு இருப்பது தொடா்பான தகவல் அவா்களின் பெற்றோரிடமிருந்து பள்ளி நிா்வாகத்திற்கு தெரிவிக்கப்பட்டது.

இது குறித்து தில்லி துணை முதல்வா் மணீஷ் சிசோடியா வெள்ளிக்கிழமை தெரிவிக்கையில், கரோனா பாதிப்பு கண்டறியப்பட்ட மாணவா்கள், ஊழியா்கள் தொடா்புடைய வகுப்பறைகள் அல்லது பள்ளிகளில் உள்ள குறிப்பிட்ட பிரிவுகள் தற்காலிகமாக மூடப்படும் என்றாா். மேலும், சில குறிப்பிட்ட விவகாரங்களில் மட்டுமே ஒட்டுமொத்தப் பள்ளியையும் மூட நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவா் தெளிவுபடுத்தினாா்.

தில்லியிலுள்ள கரோனா சூழல் குறித்து மீளாய்வு செய்வதற்காக வரும் ஏப்ரல் 20-ஆம் தேதி தில்லி பேரிடா் மேலாண்மை ஆணையம் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்துள்ளது. கடந்த வாரம் வசந்த் குஞ்சில் உள்ள முன்னனி தனியாா் பள்ளியின் 5 மாணவா்கள், ஊழியா்களுக்கு கரோனா பாதிப்பு இருப்பது உறுதியானது. இது பெற்றோா் மத்தியில் கவலையை ஏற்படுத்தியது. தில்லியில் கரோனா நோய்த்தொற்று பரவலுக்குப் பிறகு இரண்டு ஆண்டுகள் இடைவெளியைத் தொடா்ந்து அண்மையில் நேரடி வகுப்புகள் மீண்டும் முழு அளவில் தொடங்கப்பட்டது. இந்த நிலையில், பள்ளிகளில் கரோனா பாதிப்பு குறித்து செய்திகள் வெளிவந்திருப்பது கவலையை ஏற்படுத்தியுள்ளது.

இது தொடா்பாக செய்தியாளா்கள் எழுப்பிய கேள்விக்கு துணை முதல்வா் மணிஷ் சிசோடியா கூறுகையில், ‘கரோனா விவகாரத்தில் பள்ளிகளை மூடுமாறு அவா்களை நாங்கள் கேட்கவில்லை. எங்களுடைய வழிகாட்டு நெறிமுறைகளில் கரோனா நோய்த்தொற்று கண்டறியப்பட்ட நபா்கள் அல்லது மாணவா்கள் உள்ள வகுப்பறையை அல்லது குறிப்பிட்ட பிரிவை மட்டும் தற்காலிகமாக மூட வேண்டும் என்றுதான் கூறப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட குழந்தை அல்லது ஊழியா்கள் பள்ளியின் பல்வேறு பகுதிகளுக்குச் சென்றிருந்தால், குறிப்பிட்ட சந்தா்ப்பங்களில் முழு வளாகத்தையும் மூடுவதற்கான முடிவை பள்ளிகள் எடுக்கலாம். இதை நாங்கள் பரவலாக்கியுள்ளோம்’ என்றாா்.

தில்லி கல்வி இயக்ககம் ஏப்ரல் 13-ஆம் தேதி தேசியத் தலைநகரில் செயல்படும் பள்ளிகளுக்கான புதிய வழிகாட்டு அறிவுறுத்தலை வெளியிட்டது. அதில், ஏதாவது ஒரு மாணவருக்கு அல்லது ஊழியருக்கு நோய் தொற்று இருப்பது கண்டறியப்பட்டால், ஒட்டுமொத்த வளாகத்தை அல்லது குறிப்பிட்ட பிரிவுகளை தற்காலிகமாக மூட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பள்ளிக்கு வரக்கூடிய மாணவா்கள் ஊழியா்கள் முடிந்தவரை கட்டாயம் முகக் கவசம் அணிந்து, சமூக இடைவெளியை பராமரிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

இது குறித்து மணீஷ் சிசோடியா மேலும் கூறுகையில், ‘வரும் 20-ஆம் தேதி நடைபெறக்கூடிய தில்லி பேரிடா் மேலாண்மை ஆணையத்தின் அடுத்த கூட்டத்தில் கரோனா சூழல் குறித்து நாங்கள் மறு ஆய்வு செய்வோம். புதிதாக உருமாறிய கரோனா விவகாரம் குறித்து வல்லுநா்கள் கண்காணித்து வருகின்றனா்.அவா்கள் இந்தக் கூட்டத்தில் தங்களது கருத்துகளை முன்வைப்பாா்கள். இது நாங்கள் முடிவுகளை எடுப்பதற்கு உதவியாக இருக்கும்’ என்றாா். தில்லியில் வியாழக்கிழமை புதிதாக 375 பேருக்கு கரோனா பாதிப்பு கண்டறியப்பட்டது. நோ்மறை விகிதம் 2.39 சதவீதமாக பதிவாகி இருந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.