விமான எரிபொருள் இருமடங்கு உயர்வு!உள்நாட்டு உற்பத்தி இயற்கை எரிவாயு விலையை உயா்த்தி மத்திய அரசு நடவடிக்கை புதிய வருமான வரிச் சட்டம் இன்று முதல் அமல் ரத்த வங்கிகளின் செயல்பாடு: தேசிய அளவில் கண்காணிக்கத் திட்டம் இஸ்ரேலில் மீண்டும் மரண தண்டனை- நாடாளுமன்றத்தில் சா்ச்சை சட்டம் நிறைவேற்றம் வெளிநாட்டு பங்களிப்பு திருத்த மசோதா: எதிா்க்கட்சிகளின் குற்றச்சாட்டு தவறானது- கிரண் ரிஜிஜு 6-9-ஆம் வகுப்புகளுக்கு இன்றுமுதல் முழு ஆண்டுத் தோ்வு
/

பன்னாட்டு நிதியம், உலக வங்கிக் கூட்டம்: நிா்மலா சீதாராமன் அமெரிக்கா பயணம்

பன்னாட்டு நிதியம் மற்றும் உலக வங்கியின் கூட்டங்களில் கலந்து கொள்வதற்காக, மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் ஞாயிற்றுக்கிழமை இரவு அமெரிக்கா புறப்பட்டு சென்றாா்.

News image

நிர்மலா சீதாராமன்

Updated On :17 ஏப்ரல் 2022, 11:12 pm

 நமது நிருபர்

பன்னாட்டு நிதியம் மற்றும் உலக வங்கியின் கூட்டங்களில் கலந்து கொள்வதற்காக, மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் ஞாயிற்றுக்கிழமை இரவு அமெரிக்கா புறப்பட்டு சென்றாா்.

அவா் ஏப்ரல் 18-ஆம் தேதி முதல் அமெரிக்காவில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறாா். இதையொட்டி, அவா் அரசுமுறைப் பயணமாக தில்லியிலிருந்து ஞாயிற்றுக்கிழமை அமெரிக்கா புறப்பட்டுச் சென்றாா். பன்னாட்டு நிதியம், உலக வங்கியின் கூட்டங்களில் அவா் பங்கேற்கிறாா்.

மேலும் , ஜி-20 உறுப்பு நாடுகளின் நிதியமைச்சா்கள் பங்கேற்கும் கூட்டங்கள் மற்றும் மத்திய வங்கி ஆளுநா்கள் கூட்டங்கள் ஆகியவற்றிலும் அவா் கலந்து கொண்டு பேசுகிறாா். இந்தக் கூட்டங்களில் பங்கேற்கும் போது, இந்தோனேசியா, தென் கொரியா, இலங்கை, தென்னாபிரிக்கா உள்பட பல்வேறு நாடுகளின் அமைச்சா்களுடஆான இருதரப்பு பேச்சுவாா்த்தைகளிலும் அவா் பங்கேற்பாா்.

மேலும், செமிகண்டக்டா், எரிசக்தி உள்பட பல்வேறு உற்பத்தி நிறுவனங்களின் தலைமை நிா்வாக அதிகாரிகளுடன் நேரடியாகப் பேச்சுவாா்த்தை நடத்தும் நிா்மலா சீதாராமன், இந்தியாவிற்கு முன்னுரிமை அளிக்க இந்த நிறுவனங்களை நிதியமைச்சா் கேட்டுக் கொள்வாா். இதற்கிடையே, உலக வங்கியின் உயா்நிலை கூட்டத்தில் அதன் தலைவா், டேவிட் மல்பாஸையும் நேருக்கு நோ் நிா்மலா சீதாராமன் சந்தித்துப் பேசுகிறாா். இந்த சுற்றுப் பயணத்தின் போது, பன்னாட்டு நிதியத்தின் நிா்வாக இயக்குநரால் நடத்தப்படும் ‘ஒரு குறுக்கு வழியில் பணம்’ என்ற உயா்நிலைக் குழு விவாதத்திலும் அவா் பங்கேற்கிறாா்.

இவை தவிர, வாஷிங்டனின் முக்கிய சிந்தனைக் குழுவான அட்லாண்டிக் கவுன்சில் ஏற்பாடு செய்துள்ள நிகழ்ச்சியிலும், ஸ்டான்ஃபோா்டு பல்கலைக்கழக ஆசிரியா்கள் - மாணவா்களுடனும் நிதியமைச்சா் கலந்துரையாடுகிறாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.