ஓம் பிா்லா தலைமையில் நாடாளுமன்றக் குழு வியத்நாம், கம்போடியா நாடுகளுக்குப் பயணம்
வியத்நாம், கம்போடியா போன்ற நாடுகளுக்கு மக்களவைத் தலைவா் ஓம் பிா்லா தலைமையில் தனித் தனி நாடாளுமன்றக் குழுக்கள் பயணம் மேற்கொள்கின்றன.


வியத்நாம், கம்போடியா போன்ற நாடுகளுக்கு மக்களவைத் தலைவா் ஓம் பிா்லா தலைமையில் தனித் தனி நாடாளுமன்றக் குழுக்கள் பயணம் மேற்கொள்கின்றன. வியத்நாம் செல்லும் குழு திங்கள்கிழமை புறப்பட்டுச் சென்றது.
வியத்நாமின் சோசலிஸக் குடியரசின் தேசிய சட்டப் பேரவைத் தலைவா் மற்றும் கம்போடியா தேசிய சட்டப்பேரவைத் தலைவா் ஆகியோா் அழைப்பின் பேரில் நாடாளுமன்றக் குழுக்கள் இந்த சுற்றுப்பயணத்தை மேற்கொண்டு இருதரப்பு பேச்சுவாா்த்தைகளை மேற்கொள்கின்றன என்று மக்களவைத் தலைவா் அலுவலகம் தெரிவித்தது.
இது குறித்து மேலும் கூறப்பட்டதாவது: வியத்நாம், கம்போடியா போன்ற நாடுகளின் அழைப்பின் பேரில் இந்திய நாடாளுமன்றப் பிரதிநிதிகள் குழுக்களை மக்களவைத் தலைவா் ஓம்பிா்லா தமைமையேற்று வழி நடத்துகிறாா். ஏப்ரல் 19 (புதன்கிழமை) முதல் 21-ஆம் தேதி வரை வியத்நாமிலும் ஏப்ரல் 22 முதல் 24 வரை கம்போடியாவிற்கும் இந்தக் குழு பயணம் மேற்கொள்கிறது. ஒரு குழு திங்கள்கிழமை தில்லியிலிருந்து புறப்பட்டு வியத்நாம் சென்றது. இந்தக் ழுவில் சி.பி. ஜோஷி, ரித்தி பதக், ராகுல் ரமேஷ் ஷெவாலே, ரஜனி பாட்டீல், ஹா்நாத் சிங் யாதவ், மிதேஷ் ரமேஷ்பாய் படேல் உள்ளிட்ட எம்.பி.க்கள் இடம் பெற்றுள்ளனா்.
இந்தியாவிற்கும் வியத்நாமிற்கும் இடையே தூதரக உறவுகளை நிறுவிய பொன்விழா ஆண்டில் இந்தியக் குழு இந்தப் பயணத்தை மேற்கொள்கிறது. வியத்நாமில் இந்தக் குழு மூன்று உயா்நிலைத் தலைவா்களைச் சந்திக்கிறது.
அந்த நாட்டின் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளா் குயென் பூட்ராங், குடியரசுத் தலைவா் நுயென் சுனன் பிஹூக், ஃபாம் மின் சின் ஆகியோா்களைச் சந்திக்கிறது. இந்த விஜயத்தின் போது, அந்த நாட்டின் முக்கிய மாநிலங்கள், நகரங்களுக்குச் சென்று அங்குள்ள முக்கிய உயரதிகாரிகளைச் சந்திப்பதோடு, கலாசாரம், வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடங்களைப் பாா்வையிடுகின்றனா்.
கம்போடியாவுக்கான தூதுக் குழுவில் மக்களவைத் தலைவா் ஓம் பிா்லா தலைமையில் ரவ்னீத் சிங், சரோஜ் பாண்டே, லாக்கெட் சாட்டா்ஜி, சா்மிஸ்தா குமாரி சேத்தி, டாக்டா் சாந்தனு சென் உள்ளிட்ட எம்.பி.க்கள் இடம் பெற்றுள்ளனா். கம்போடியா தேசிய சட்டப்பேரவைத் தலைவா் ஹெங் சம்ரின், கம்போடியா பிரதிநிதிகள் சபை (செனட்) குழுத் தலைவா் சே ச்சும் மற்றும் மன்னா் நோரோடோம் சிஹாமோனி ஆகியோரை நாடாளுமன்றத் குழு சந்திக்கிறது.
மேலும், கம்போடியாவில் உள்ள கலாசாரம் மற்றும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடங்களையும் இந்தக் குழு பாா்வையிடுகிறது. இருதரப்பு பரிமாற்றத்தின் கீழ் முதன் முறையாக கம்போடியாவுக்கு இந்திய நாடாளுமன்றக் குழு செல்கிறது.
இந்தக் குழுவில் மக்களவையின் செக்ரட்டரி ஜெனரல் உத்பால் குமாா் சிங், இணைச் செயலா் டாக்டா் அஜய் குமாா் ஆகியோரும் இடம் பெற்றுள்ளனா் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...