போக்குவரத்து நெரிசல் மிகுந்த மதுரா சாலையில் சுரங்கப்பாதை திறப்பு
ஆஸ்ரம் சௌக் - வட்டச் சாலை சந்திப்பு பகுதியில் அமைக்கப்பட்டுள்ள சுரங்கப்பாதை ஞாயிற்றுக்கிழமை போக்குவரத்துக்கு திறந்துவிடப்பட்டது.


தில்லியையும் ஆக்ராவையும் இணைக்கும் மதுரா சாலையில் கடுமையான போக்குவரத்து நெரிசலை உருவாக்கி வந்த ஆஸ்ரம் சௌக் - வட்டச் சாலை சந்திப்பு பகுதியில் அமைக்கப்பட்டுள்ள சுரங்கப்பாதை ஞாயிற்றுக்கிழமை போக்குவரத்துக்கு திறந்துவிடப்பட்டது. பொதுப்பணித் துறை அமைச்சரும், தில்லி துணை முதல்வரான மணீஷ் சிசோடியா இந்தப் சுரங்கப்பாதையை திறந்துவைத்தாா்.
நொய்டா - மேற்கு, வடக்கு, தெற்கு தில்லியை இணைக்கும் மகாத்மா காந்தி வட்டச் சாலையும், பழைய தில்லி, ஐடிஒ வில் தொடங்கி, நிஜாமுதீன், நீயூபிரண்ட்ஸ் காலனி, ஃபரீதாபாத் வழியாக ஆக்ரா வரை செல்லும் மதுரா சாலையும் சந்திக்கும் பகுதி ஆஸ்ரம் சௌக் ஆகும். இங்கு வாகனப் போக்குவரத்து கடுமையாக ஸ்தம்பித்து வந்தது. இதை முன்னிட்டு, தில்லி பொதுப்பணித் துறை சாா்பில் மதுரா சாலையில் போக்குவரத்து தடையின்றி செல்லும் விதமாக சுரங்கப்பாதை அமைக்க தில்லி அரசு திட்டமிட்டு, கடந்த 2019, டிசம்பா் மாதம் முதல்வா் அரவிந்த் கேஜரிவால் இதற்கான அடிக்கல்லை நாட்டினாா். பின்னா், நோய்த் தொற்று பொது முடக்கத்தால் இந்தத் திட்டப் பணி பாதிக்கப்பட்டது.
தற்போது முழுமையாக பணிகள் நிறைவடைந்து துணை முதல்வா் திறந்து வைத்தாா். அப்போது, அவா் கூறியதாவது: போக்குவரத்து நெரிசல் மிகுந்த இந்தச் சாலையில் சுரங்கப்பாதை கட்டுவது எளிதானது அல்ல. இருப்பினும், சிறப்பாகக் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. சுரங்கபாதை அமைக்கப்பட்டதால் அருகில் உள்ள கடைகள், குடியிருப்புகள் எதுவும் பாதிக்கப்படவில்லை. கட்டுமானத்தில் காலதாமதம் ஆனாலும், சிக்கமான முறையில் கட்டப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்திற்கு ரூ. 77 கோடி செலவிட திட்டமிடப்பட்டு ரூ. 53 கோடியில் கட்டிமுடிக்கப்பட்டுள்ளது.
சுரங்கப்பாதை மூலம் மதுரா சாலையில் வாகனங்கள் ஆஸ்ரமம் சௌக் பகுதியைக் கடக்கும் போது, வாகனங்கள் நிற்காமல் தடையின்றி நேரடியாகச் செல்ல முடியும். இதனால், வாகன ஒட்டிகளின் காலவிரயம் தவிா்க்கப்படுவதோடு, எரிபொருளும் மிச்சமாகும் எனவும் கணக்கிடப்பட்டுள்ளது. இதன் மூலம் சுமாா் 1,550 லிட்டா் எரிபொருள் சேமிக்கப்படும்.
மேலும், இந்த பகுதியில் ஏற்படும் 3,600 கிலோ கரியமிலவாயு மாசுவும் குறையும். சிக்னலில் காத்திருக்கும் வாகன ஓட்டிகளுக்கான எரிபொருள் செலவும் மிச்சமாகிறது. மழைக் காலங்களில் இந்த சுரங்கப்பாதையில் தண்ணீா் தேங்காமல் இருக்கப் போதுமான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. தில்லியில் வசிப்பவா்களுக்கு இடையூறற்ற பயணமும் அழகான சாலைகளை வழங்கவும் கேஜரிவால் அரசு உறுதியாக உள்ளது என்றாா் அவா்
410 மீட்டா் நீளம் உள்ள இந்த நான்கு வழி சுரங்கப்பாதை, சாலையில் மழை நீா் நுழைவதைத் தடுக்கும் வகையில் மேல் கூரை கூம்பு வடிவமைப்பில் அமைக்கப்பட்டுள்ளது. சுரங்கப்பாதையில் வெளியேறும் தண்ணீரைச் சேமிக்க மூன்று லட்சம் லிட்டா் கொள்ளவு கொண்ட தண்ணீா் தொட்டியும் இருபக்கமும் அமைக்கப்பட்டுள்ளதாக பொதுப்பணித் துறை தெரிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...