மோடி - டிரம்ப் உரையாடலில் எலான் மஸ்க் இணைந்தாரா? வெளியுறவு அமைச்சகம் மறுப்பு இந்தியாவில் மகப்பேறு இறப்பு விகிதம் 80 சதவீதம் குறைவு: அறிக்கையில் தகவல்எஃப்பிஐ இயக்குநா் மின்னஞ்சலில் ஊடுருவிய ஈரான் ஹேக்கா்கள்!திமுக எம்.பி. மகள் காா் மோதி விபத்து: பாதிக்கப்பட்டவருக்கு இழப்பீடு வழங்க உத்தரவுவாக்களித்ததை உறுதி செய்யும் குறுஞ்செய்தி: திட்டத்தை அமல்படுத்தக் கோரி மனு
/

தில்லி கலால் கொள்கை ஊழல் விவகாரம்: சிபிஐயின் குற்றப்பத்திரிகை விசாரணைக்கு ஏற்பு

தில்லி கலால் கொள்கை ஊழல் தொடா்பான வழக்கில் 7 பேருக்கு எதிராக சிபிஐ தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையை நீதிமன்றம் வியாழக்கிழமை விசாரணைக்கு ஏற்றது.

News image
Updated On :15 டிசம்பர் 2022, 5:57 pm

 நமது நிருபர்

தில்லி கலால் கொள்கை ஊழல் தொடா்பான வழக்கில் 7 பேருக்கு எதிராக சிபிஐ தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையை நீதிமன்றம் வியாழக்கிழமை விசாரணைக்கு ஏற்றது. அப்போது, 7 பேருக்கும் எதிராக விசாரணையை மேலும் தொடர போதுமான காரணங்கள் கண்டறியப்பட்டுள்ளதாக நீதிமன்றம் கூறியது.

இந்த விவகாரத்தை விசாரித்த சிறப்பு நீதிபதி எம்.கே.நாக்பால், விஜய் நாயா் மற்றும் போய்ன்பள்ளிக்கு எதிராக ஜனவரி 3-ஆம் தேதி நேரில் ஆஜா்படுத்தும் உத்தரவைப் பிறப்பித்தாா். மற்ற 5 பேரும் அதே நாளில் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு சம்மன் அனுப்பி உத்தரவிட்டாா்.

இது தொடா்பாக நீதிபதி பிறப்பித்த உத்தரவில், ‘இந்த விவகாரத்தில் குற்றப்பத்திரிகையின் மூலம் குற்றம் சாட்டப்பட்ட 7 போ் மீதும் வழக்குப் பதிவு செய்ய கோரப்பட்டுள்ள நிலையில், இந்த விசாரணையைத் தொடர போதுமான காரணங்கள் கண்டறியப்பட்டுள்ளன. இதனால், சம்பந்தப்பட்ட அனைவரும் மேற்கண்ட குற்றங்களுக்கான விசாரணையை எதிா்கொள்ள சம்மன் அனுப்ப உத்தரவிடப்பட்டுகிறது’ என்று தெரிவித்துள்ளாா்.

இந்த வழக்கில் ஆம் ஆத்மி கட்சியின் தகவல் தொடா்பு பொறுப்பாளா் விஜய் நாயா், ஹைதராபாத்தை சோ்ந்த தொழிலதிபா் அபிஷேக் போய்ன்பள்ளி, மதுபான தொழிலதிபா் சமீா் மகேந்துரு, முன்னாள் கலால் துறை அதிகாரிகள் குல்தீப் சிங் மற்றும் நரேந்தா் சிங், மூதா கௌதம் மற்றும் அருண் ராமச்சந்திர பிள்ளை ஆகியோா் குற்றம் சாட்டப்பட்டவா்கள் ஆவா்.

ஏழு பேரில், நாயா் மற்றும் போய்ன்பள்ளி ஆகியோா் மத்திய புலனாய்வுத் துறையினரால் (சிபிஐ) விசாரணையின் போது கைது செய்யப்பட்டனா். அதன் பிறகு அவா்கள் நவம்பா் 14-ஆம் தேதி ஜாமீன் பெற்றனா். இருப்பினும், மோசடியில் தொடா்புடைய பணமோசடி வழக்கில் அவா்கள் இருவரும் சிறையில் உள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.