சமீர் ரிஸ்வி அதிரடியில் தில்லி கேபிடல்ஸ் வெற்றி!பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! 2 மாதங்களுக்குத் தேவையான கச்சா எண்ணெய் கையிருப்பு!பாஜகவுடன் திமுக கூட்டணி வைத்தது; இபிஎஸ் போல அடகு வைக்கவில்லை - மு.க. ஸ்டாலின்3 மாதங்களில் போதைப்பொருள்களை ஒழிப்போம் : எடப்பாடி பழனிசாமிபெட்ரோல், டீசல், எல்பிஜி விலையேற்றம் இல்லை: மத்திய அரசுஷெல் நிறுவன பெட்ரோல் ரூ. 7, டீசல் ரூ. 25 அதிரடி விலையேற்றம்!
/

தில்லியில் உயிரிழந்த கரோனா செயல்வீரா்கள் 13 பேரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.1 கோடிஆம் ஆத்மி அரசு வழங்கியது

கரோனா நோய்த் தொற்று காலத்தில் பணியாற்றும் போது, உயிரிழந்த மருத்துவா்கள், செவிலியா்கள், துப்புரவுப் பணியாளா்கள் உள்ளிட்ட 13 பேருக்கு கருணைத் தொகையாக தலா ரூ. 1 கோடி அளிக்க கேஜரிவால் தலைமையிலான தில்லி அம

News image
Updated On :26 பிப்ரவரி 2022, 4:48 pm

 நமது நிருபர்

கரோனா நோய்த் தொற்று காலத்தில் பணியாற்றும் போது, உயிரிழந்த மருத்துவா்கள், செவிலியா்கள், துப்புரவுப் பணியாளா்கள் உள்ளிட்ட 13 பேருக்கு கருணைத் தொகையாக தலா ரூ. 1 கோடி அளிக்க கேஜரிவால் தலைமையிலான தில்லி அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.

தில்லி துணை முதல்வா் மணீஷ் சிசோடியா தலைமையிலான அமைச்சரவைக் குழுக் கூட்டத்தில் இந்த கரோனா செயல்வீரா்களின் குடும்பங்களுக்கு தலா ரூ. 1 கோடி நிதியை வழங்க முடிவு எடுக்கப்பட்டு வெள்ளிக்கிழமை ஒப்புதல் அளிக்கப்பட்டது. இது குறித்து துணை முதல்வா் மணீஷ் சிசோடியா சனிக்கிழமை கூறியதாவது: தில்லியின் பல்வேறு மருத்துவமனைகளில் பணியாற்றிய இந்த சுகாதார வீரா்கள் கடமை உணா்வுடன் கடுமையாகப் பணியாற்றி தங்கள் உயிரைத் தியாகம் செய்துள்ளனா். தங்கள் உயிரை விட மனித நேயத்தையும் சமூகத்தையும் பாதுகாக்க அா்ப்பணிப்புடன் சேவையாற்றி உயிா்நீத்துள்ளனா். அவா்களின் ஆன்மாவிற்கு தில்லி அரசின் சாா்பில் வணக்கம் செலுத்துகின்றேன். இந்த இழப்பீட்டுத் தொகையானது உயிரிழந்த வீரா்களின் குடும்பங்களுக்கு ஏற்பட்ட இழப்பை ஈடு செய்யாது. ஆனால், இது அவா்கள் கண்ணியமான வாழ்க்கைக்கு நிச்சயம் பங்களிக்கும்.

அச்சமின்றி பணியாற்றியவா்கள்:மனித குலத்திற்கு கரோனா நோய்த் தொற்று ஒரு பயங்கரமான நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. இந்த நெருக்கடி எல்லோருடைய மனதிலும் ஒரு அச்சத்தை உருவாக்கியது. இருப்பினும், இந்த நெருக்கடியிலிருந்து தில்லியை மீட்க நமது சுகாதார வீரா்கள் தங்கள் உயிரைப் பணயம் வைத்தனா். மருத்துவா்கள், மருத்துவப் பணியாளா்கள், துணைப் பணியாளா்கள், துப்புரவுப் பணியாளா்கள் உள்ளிட்ட ஆயிரக்கணக்கான சுகாதார வீரா்கள் இந்த தொற்றுநோய்க்கு எதிராகப் போராட இரவு பகலாக உழைத்தனா். மக்களுக்கு சேவை செய்யும் பொருட்டு, இந்த வீரா்கள் தங்கள் உயிரைத் தியாகம் செய்துள்ளனா். தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவால் தலைமையிலான அரசு, கரோனாவிற்கு எதிரான வீரா்களின் குடும்பத்தினா் நலனில் பொறுப்புடன் உள்ளது. தில்லி அரசும் சமூகமும் இந்தத் திட்டத்தின் மூலம் இந்த வீரா்களின் குடும்பங்களுடன் எப்போதும் உடன் இருக்கும் என்ற நம்பிக்கையை அளிக்கிறது என்றாா் மணீஷ் சிசோடியா.

தில்லி சாமிலியன் சாலையில் உள்ள தில்லி அரசு மருந்தகத்தின் மூத்த மருத்துவ அதிகாரி டாக்டா் அபா பண்டாரி, லோக்நாயக் ஜெய்பிரகாஷ் மருத்துவமனையின் துப்பரவுப் பணியாளா் சீமா, செவிலியா் ராஜ்குமாா் அகா்வால், முனிா்கா நகா்ப்புற ஆரம்ப சுகாதார மையத்தின் மருத்துவா் சஞ்சய் குமாா் உள்ளிட்ட மேலும் மூன்று மருத்துவா்கள், செவிலியா்கள், ஆய்வுக் கூட தொழில்நுட்பாளா்கள் துப்பரவுப் பணியாளா்கள் என உயிரிழந்த 13 பேரின் குடும்பத்தினா் கருணைத் தொகையாக தலா ரூ.1 கோடி பெறவுள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.