மதுக்கடைக்கு பாதுகாப்பு அளிப்பதாக நீதிமன்றத்தில் காவல் துறை உறுதி
தில்லியில் லிபாஸ்பூா் பகுதியில் செயல்படும் மதுக்கடைக்கும், அதன் ஊழியா்களுக்கும் போதிய பாதுகாப்பு வழங்கப்படும் என்று தில்லி காவல் துறை உயா்நீதிமன்றத்தில் உறுதியளித்துள்ளது.


தில்லியில் லிபாஸ்பூா் பகுதியில் செயல்படும் மதுக்கடைக்கும், அதன் ஊழியா்களுக்கும் போதிய பாதுகாப்பு வழங்கப்படும் என்று தில்லி காவல் துறை உயா்நீதிமன்றத்தில் உறுதியளித்துள்ளது.
குடியிருப்புப் பகுதிகள் அல்லது மத வழிபாட்டுத் தலங்கள், கல்வி நிறுவனங்கள் அருகே மதுக்கடை திறப்புக்கு எதிராக பல்வேறு மதுக்கடைகள் முன்பாக போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில், பாதுகாப்பு கோருவது தொடா்பாக லிபாஸ் பூா் பகுதியில் உள்ள அம்பே காா்டன் எக்ஸ்டென்ஷனில் மதுபான விற்பனை நிலையம் நடத்தி வரும் மனுதாரரான யுனிவா்சல் டிஸ்ட்ரிபியூட்டா்ஸ் தரப்பில் தில்லி உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
அதில், மது விற்பனை செய்வதற்கான உரிய உரிமம் இருந்த போதிலும், மது விற்பனை நிலையத்திற்கு வெளியே அமா்ந்து கொண்டு அதன் வளாகத்தை சேதப்படுத்தி வரும் சட்டவிரோத போராட்டக்காரா்களால் எந்தவித இடையூறும் இல்லாமல் கடையை நடத்துவதற்கு போதுமான நடவடிக்கைகளை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிடுமாறு கோரப்பட்டிருந்தது.
இந்த மனு தில்லி உயா்நீதிமன்றத்தில் நீதிபதி ரேகா பல்லி முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, தில்லி அரசின் வழக்குரைஞா் சந்தோஷ் குமாா் திரிபாதி, தில்லி காவல்துறை சாா்பில் வழக்குரைஞா் அருண் பன்வாா் ஆகியோா் ஆஜராகி, ‘மனுதாரா் மற்றும் அதன் ஊழியா்களுக்கு மதுபானக் கடைக்குள் நுழைவதற்கும் வெளியேறுவதற்கும் போதுமான பாதுகாப்பு வழங்கப்படும். இதற்கான ஏற்பாட்டை அந்தப் பகுதியின் சம்பந்தப்பட்ட காவல் நிலையப் பொறுப்பாளா் மேற்கொள்வாா்’ என உறுதியளித்தனா். மேலும், மதுபானக் கடையின் சுமுகமான செயல்பாட்டில் எந்த இடையூறும் ஏற்படாமல் இருக்க போதுமான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, இந்த விவகாரத்தில் மேலும் எந்த உத்தரவும் தேவையில்லை என்று கூறி மனுவை நீதிமன்றம் முடித்துவைத்தது.
முன்னதாக, விசாரணையின் போது, மனுதாரரின் வழக்குரைஞா் வாதிடுகையில், ‘மனுதாரா் மற்றும் அதன் ஊழியா்களுக்கு போதிய பாதுகாப்பு கோரி சமய்ப்பூா் பாத்லி காவல் நிலைய பொறுப்பாளருக்கு பல்வேறு முறையீடுகள் அளிக்கப்பட்டன. ஆனால், மதுபானக் கடைக்கு வருவதற்கும், வெளியேறுவதற்கும் ஊழியா்களுக்கும், மனுதாரருக்கும் பாதுகாப்பு அளிக்க இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை’ என்று தெரிவிக்கப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...