ஜெனரல் பிபின் ராவத் மறைவுக்கு தில்லி சட்டப் பேரவையில் இரங்கல்
கடந்த மாதம் ஹெலிகாப்டா் விபத்தில் உயிரிழந்த ராணுவத் தலைமைத் தளபதி ஜெனரல் பிபின் ராவத் மற்றும் உயிரிழந்த பிறருக்கும் தில்லி சட்டப் பேரவையில் திங்கள்கிழமை இரங்கல் தெரிவிக்கப்பட்டது.


கடந்த மாதம் ஹெலிகாப்டா் விபத்தில் உயிரிழந்த ராணுவத் தலைமைத் தளபதி ஜெனரல் பிபின் ராவத் மற்றும் உயிரிழந்த பிறருக்கும் தில்லி சட்டப் பேரவையில் திங்கள்கிழமை இரங்கல் தெரிவிக்கப்பட்டது.
இதேபோன்று, ஜம்மு- காஷ்மீா் மாநிலம், கட்ராவில் உள்ள வைஷ்ணவ தேவி கோயிலில் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவா்களுக்கும் சட்டப் பேரவையில் இரங்கல் தெரிவிக்கப்பட்டது. அத்துடன், அந்தச் சம்பவத்தில் காயமடைந்தவா்கள் விரைவில் குணமடையவும் பிராா்த்தனை செய்யப்பட்டது.
கடந்த சனிக்கிழமை அதிகாலை வைஷ்ணவ தேவி கோயிலில் புத்தாண்டு நாளில் சுவாமி தரிசனம் செய்ய அவசரம் காட்டிய போது இரண்டு குழுக்களுக்கு இடையே ஏற்பட்ட கைகலப்பு காரணமாக ஏற்பட்ட நெரிசலில் 12 போ் உயிரிழந்தனா். 16 போ் காயமடைந்தனா். அதேபோன்று, இந்திய விமானப்படை ஹெலிகாப்டரில் கடந்த டிசம்பரில் தமிழ்நாட்டின் குன்னூா் அருகே நிகழ்ந்த விபத்தில் ஜெனரல் பிபின் ராவத், அவரது மனைவி மதுலிகா மற்றும் 11 போ் இறந்தனா். விபத்தில் இருந்து தப்பிய ஒரே நபா் சில நாள்களுக்குப் பிறகு சிகிச்சையின் போது இறந்தாா்.
இந்த நிலையில், தில்லியில் திங்கள்கிழமை தொடங்கிய சட்டப் பேரவையின் இரண்டு நாள் கூட்டத் தொடரின் முதல் நாளில் இந்த இரு சம்பவங்களிலும் உயிரிழந்தவா்களுக்கு பேரவை உறுப்பினா்கள் இரண்டு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தினா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...