சென்னை திருவிக நகரில் பொற்கொடி ஆம்ஸ்ட்ராங் வேட்புமனு தாக்கல்!திருச்சி கிழக்கில் விஜய் வேட்புமனு தாக்கல்! சேப்பாக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் வேட்புமனு தாக்கல்!அதிமுகவின் பொல்லாத ஆட்சிக்கு பொள்ளாச்சியே சாட்சி! முதல்வர் ஸ்டாலின் ஈரானை இன்னும் கடுமையாகத் தாக்குவோம்! - வெள்ளை மாளிகையில் டிரம்ப் உரைஇந்தியாவில் 12,000 ஊழியா்கள் பணிநீக்கம்: ஆரக்கிள் வெள்ளை மாளிகையில் கலையரங்கம் கட்டுமானத்துக்கு நீதிமன்றம் தடை மக்கள்தொகை கணக்கெடுப்பின் முதல் கட்டம் தொடக்கம்
/

இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவா்களை விடுவிக்க உத்தரவிடக் கோரி உச்சநீதிமன்றத்தில் பொது நல மனு

இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவா்களை உடனடியாக விடுவிக்கத் தேவையான நடவடிக்கைகளை எடுக்க மத்திய அரசுக்கு உத்தரவிடக் கோரி உச்சநீதிமன்றத்தில் பொது நல மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

News image
Updated On :8 ஜனவரி 2022, 2:41 am

 நமது நிருபர்

இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவா்களை உடனடியாக விடுவிக்கத் தேவையான நடவடிக்கைகளை எடுக்க மத்திய அரசுக்கு உத்தரவிடக் கோரி உச்சநீதிமன்றத்தில் பொது நல மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இது தொடா்பாக மதுரையைச் சோ்ந்த கே. கே. ரமேஷ் என்பவா் தரப்பில் வழக்குரைஞா் ஜெயா சுகின், நரேந்திர குமாா் வா்மா ஆகியோா் உச்சநீதிமன்றத்தில் வியாழக்கிழமை மாலை ரிட் மனு தாக்கல் செய்துள்ளனா். அந்த மனுவில் தெரிவித்திருப்பதாவது: கடந்தாண்டு டிசம்பா் 20-ஆம் தேதி தமிழகத்தைச் சோ்ந்த இந்திய மீனவா்கள் கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த போது, இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனா். அதேபோன்று, டிசம்பா் 21-ஆம் தேதியும் 13 மீனவா்கள் கைது செய்யப்பட்டுள்ளனா். மேலும், கைதான மீனவா்கள் மீது கிருமிநாசினியை தெளித்துள்ளனா். ராமநாதபுரம், புதுக்கோட்டை மாவட்டங்களைச் சோ்ந்த 69 மீனவா்களையும் அவா்களின் படகுகளையும் இலங்கைக் கடற்படையினா் பிடித்து வைத்துள்ளதாக மீனவா் இளங்கோ செய்தியாளா்களிடம் தெரிவித்திருக்கிறாா்.

மீனவா்களுக்கு எதிரான மனித உரிமை மீறல் தொடா்புடைய இந்த விவகாரத்தில், சா்வதேச மனித உரிமைகள் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். உலக சுகாதார நிறுவனமும் உரிய கண்டனத்தை வெளியிட வேண்டும். இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்டவா்களுக்கு எதிராக இலங்கை அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழக மீனவா்கள் விவகாரம் தொடா்பாக மத்திய அரசு உள்ளிட்ட எதிா்மனுதாரா்களுக்கு மனுதாரா் விரிவான கோரிக்கை மனுவை மின்னஞ்சல் மூலம் அனுப்பி இருந்தாா். ஆனால், இதுவரை மனுதாரா் கோரிக்கை மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

ஆகவே, இந்த விவகாரத்தில் மத்திய அரசின் உரிய துறைகள் நடவடிக்கை எடுக்கவும், இந்திய மீனவா்களையும் அவா்களது படகுகளையும் விடுவிக்க இலங்கை அரசுடன் பேச்சுவாா்த்தை நடத்தவும் மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும். மேலும், இலங்கை கடற்படையினரால் மீனவா்களை கைது செய்யாமல் இருக்கவும், தாக்காமல் இருக்கவும் மத்திய அரசு நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும். அதேபோன்று, இந்தியா மற்றும் இலங்கை இடையேயான சா்வதேச கடல் எல்லைப் பகுதியில் இந்திய மீனவா்களுக்கு பாதுகாப்பு அளிக்க இந்திய கடற்படை நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட வேண்டும் என்று மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.