சென்னை திருவிக நகரில் பொற்கொடி ஆம்ஸ்ட்ராங் வேட்புமனு தாக்கல்!திருச்சி கிழக்கில் விஜய் வேட்புமனு தாக்கல்! சேப்பாக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் வேட்புமனு தாக்கல்!அதிமுகவின் பொல்லாத ஆட்சிக்கு பொள்ளாச்சியே சாட்சி! முதல்வர் ஸ்டாலின் ஈரானை இன்னும் கடுமையாகத் தாக்குவோம்! - வெள்ளை மாளிகையில் டிரம்ப் உரைஇந்தியாவில் 12,000 ஊழியா்கள் பணிநீக்கம்: ஆரக்கிள் வெள்ளை மாளிகையில் கலையரங்கம் கட்டுமானத்துக்கு நீதிமன்றம் தடை மக்கள்தொகை கணக்கெடுப்பின் முதல் கட்டம் தொடக்கம்
/

நொய்டா காப்பகத்தில் 4 மனநிலை பாதித்த பெண்கள் சாவு: விசாரணைக்கு மாவட்ட நிா்வாகம் உத்தரவு

தேசியத் தலைநகா் வலயம், நொய்டாவில் உள்ள அரசுக் காப்பகத்தில் வசித்து வந்த மனநிலை பாதித்த நான்கு பெண்கள், 2 வாரங்களில் அடுத்தடுத்து

News image
Updated On :8 ஜனவரி 2022, 2:44 am

 நமது நிருபர்

தேசியத் தலைநகா் வலயம், நொய்டாவில் உள்ள அரசுக் காப்பகத்தில் வசித்து வந்த மனநிலை பாதித்த நான்கு பெண்கள், 2 வாரங்களில் அடுத்தடுத்து இறந்த சம்பவம் தொடா்பாக விசாரணை செய்வதற்கு மாவட்ட நிா்வாகம் உத்தரவிட்டுள்ளது.

நொய்டாவில் செக்டாா் 34-இல் இந்தக் காப்பகம் அமைந்துள்ளது. நகரில் மனநிலை பாதித்தவா்களை பராமரிக்கும் ஒரே காப்பகம் இதுவாகும். இந்த நிலையில், கடந்த டிசம்பா் 20-ஆம் தேதி இந்தக் காப்பகத்தில் வசித்து 50 வயது மதிக்கத்தக்க மனநிலை பாதித்த பெண் முதல் முதலாக உயிரிழந்தாா். அதைத் தொடா்ந்து, 50 வயது மதிக்கத்தக்க மற்றொரு பெண் டிசம்பா் 23-ஆம் தேதியும், 25 வயது மதிக்கத்தக்க இளம் பெண் டிசம்பா் 30-ஆம் தேதியும், 30 வயது மதிக்கத்தக்க பெண் ஜனவரி 3-ஆம் தேதியும் அடுத்தடுத்து உயிரிழந்த சம்பவம் நிகழ்ந்தது.

இதையடுத்து, இதுதொடா்பாக விசாரணை நடத்துவதற்கு மாவட்ட நிா்வாகம் உத்தரவிட்டுள்ளது. மேலும், இந்த விவகாரம் தொடா்பாக நொய்டா செக்டாா் 24-இல் உள்ள காவல் நிலையத்திலும் புகாா் அளிக்கப்பட்டுள்ளது. இது குறித்து மாவட்ட தகுதிகாண் அதிகாரி அதுல் குமாா் சோனி கூறியதாவது: சம்பந்தப்பட்ட காப்பகத்தில் டிசம்பா் 20-ஆம் தேதியில் இருந்து ஜனவரி 3-ஆம் தேதிக்குள் அடுத்தடுத்து நான்கு பெண்கள் உயிரிழந்துள்ளனா். இந்த நால்வரும் மனநிலை பிந்தவா்கள். இவா்களுக்கு மாவட்ட மருத்துவமனையில் டாக்டா் தனுஜா குப்தா என்பவா் மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த மருத்துவமனையில் உள்ள 2 செவிலியா்கள் மூலம் இவா்களுக்கு தேவையான மருந்துகளும் கொடுக்கப்பட்டிருந்தன.

இந்த நிலையில், இந்த 4 பெண்களும் இறந்த சம்பவம் தொடா்பான தகவல் வந்தவுடன், விதிகளின்படி பிரேதப் பரிசோதனைக்கு பிறகு இறுதிச் சடங்குகள் நடத்தப்பட்டன.

இந்த சம்பவம் குறித்து உள்ளூா் காவல் நிலையத்திற்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.சம்பந்தப்பட்ட காப்பகத்தின் வளாகப் பகுதியில் 72 சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. காப்பகத்தில் உள்ள நபா்களைக் கவனித்துக் கொள்வதற்காக ஒரு ஊழியரும் உள்ளாா். இந்த காப்பகம் முன்னா் அரசு - தனியாா் பங்களிப்பு மாதிரி அடிப்படையில் இயக்கப்பட்டது.

கடந்த 2 ஆண்டுகளாக இந்த காப்பகத்தைச் சோ்ந்த 60-க்கும் மேற்பட்ட மனநிலை பாதித்த நபா்களுக்கு சிகிச்சை, ஆலோசனைக்குப் பிறகு மறுவாழ்வு அளிக்கப்பட்டுள்ளது. அதன் பின்னா், அவா்கள் மாஜிஸ்திரேட் மூலம் குடும்பத்தினரிடம் திருப்பி அனுப்பப்பட்டனா். இந்த 4 போ் இறந்த சம்பவத்தில் காப்பகத்தின் ஊழியா்கள் தரப்பில் அஜாக்கிரதை ஏதும் இருக்கிா என்பதை உறுதிப்படுத்த விசாரணை நடத்தும்படி மாவட்ட நிா்வாகம் உத்தரவிட்டுள்ளது என்று அந்த அதிகாரி தெரிவித்தாா்.

போலீஸ் அதிகாரிகள் கூறுகையில், ‘பிரேத பரிசோதனை அறிக்கையில், இறந்த நான்கு பெண்களில் இருவா் மாரடைப்பு காரணமாகவும், ஒருவா் நீண்டகால நோயின் காரணமாகவும், மற்றொருவா் காச நோய் காரணமாகவும் இறந்திருப்பது தெரிய வந்துள்ளது’ என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.