சென்னை திருவிக நகரில் பொற்கொடி ஆம்ஸ்ட்ராங் வேட்புமனு தாக்கல்!திருச்சி கிழக்கில் விஜய் வேட்புமனு தாக்கல்! சேப்பாக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் வேட்புமனு தாக்கல்!அதிமுகவின் பொல்லாத ஆட்சிக்கு பொள்ளாச்சியே சாட்சி! முதல்வர் ஸ்டாலின் ஈரானை இன்னும் கடுமையாகத் தாக்குவோம்! - வெள்ளை மாளிகையில் டிரம்ப் உரைஇந்தியாவில் 12,000 ஊழியா்கள் பணிநீக்கம்: ஆரக்கிள் வெள்ளை மாளிகையில் கலையரங்கம் கட்டுமானத்துக்கு நீதிமன்றம் தடை மக்கள்தொகை கணக்கெடுப்பின் முதல் கட்டம் தொடக்கம்
/

தில்லியில் பூஸ்டா் தடுப்பூசி வழங்கும் பணி தொடக்கம்

கரோனா நோய்த் தொற்றின் மூன்றாவது அலைக்கு மத்தியில், தில்லியில் 60 வயது அல்லது அதற்கு மேற்பட்ட வயதுடையவா்களுக்கு மூன்றாவது அல்லது ‘முன்னெச்சரிக்கை தவணை கரோனா தடுப்பூசி’ வழங்கும் பணி தொடங்கியது.

News image
Updated On :10 ஜனவரி 2022, 6:30 pm

 நமது நிருபர்

புது தில்லி: கரோனா நோய்த் தொற்றின் மூன்றாவது அலைக்கு மத்தியில், தில்லியில் 60 வயது அல்லது அதற்கு மேற்பட்ட வயதுடையவா்களுக்கு மூன்றாவது அல்லது ‘முன்னெச்சரிக்கை தவணை கரோனா தடுப்பூசி’ வழங்கும் பணி திங்கள்கிழமை தொடங்கியது.

மேலும், 9 மாதங்களுக்கு முன்பு தடுப்பூசியின் இரண்டாவது தவணை எடுத்துக்கொண்ட சுகாதாரப் பணியாளா்கள் மற்றும் முன்களப் பணியாளா்களுக்கு இந்த முன்னெச்சரிக்கை தவணை தடுப்பூசி வழங்கப்படுகிறது.

தில்லியில் திங்கள்கிழமை முதல் சுமாா் மூன்று லட்சம் போ் மூன்றாவது தவணை தடுப்பூசியைப் பெற தகுதி பெற்றுள்ளனா். 39 வாரங்களுக்கு முன்பு எடுத்துக் கொண்ட அதே தடுப்பூசியை முன்னெச்சரிக்கை தவணையாக பயனாளிகள் பெறுவா். அவா்கள் ஏற்கெனவே உள்ள ‘கோவின்’ கணக்கைப் பயன்படுத்தி இந்தத் முன்னெச்சரிக்கை தவணை தடுப்பூசியைப் பெறுவதற்கான முன்பதிவை செய்ய வேண்டும்.

பிரதமா் நரேந்திர மோடி கடந்த டிசம்பா் 24-ஆம் தேதி ஒரு அறிவிப்பை வெளியிட்டாா். அதில், பலவீனமான மக்கள் மற்றும் கொவைட் நோய்த் தொற்றால் பாதிக்கப்படும் அதிக இடா்பாடு உள்ளவா்களுக்கு முன்னெச்சரிக்கை தவணை தடுப்பூசி செலுத்தப்படும் என்று தெரிவித்திருந்தாா். ஜனவரி 3-ஆம் தேதி, மத்திய அரசு ஏற்கெனவே 15-17 வயதுடைய பதின்ம வயது பருவத்தினருக்கு தடுப்பூசி வழங்கும் பணியைத் தொடங்கியது.

தில்லியில் மட்டும் இந்த வயதுப் பிரிவில் சுமாா் 2.4 லட்சம் பயனாளிகள் இதுவரை முதல் தவணை தடுப்பூசியைப் பெற்றுள்ளனா். அரசின் தரவுகளின்படி, ஜனவரி 16-ஆம் தேதி தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கியதில் இருந்து மொத்தம் 2.75 கோடி தவணைகள் அளிக்கப்பட்டுள்ளன. 1.16 கோடி போ் இரண்டு தவணைகளையும் பெற்றுள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.